கல்வி அமைச்சர்: துறைக்கு ஏதுவான பயிற்சிகளுக்கு மட்டுமே நிதி ஆதரவு

யுகேஷ் கண்­ணன்

தர்­ஷிணி கிருஷ்ணா

 

சான்­றி­தழ் வழங்­கப்­ப­டாத பயிற்­சி­

க­ளுக்கு ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் 2024ஆம் ஆண்­டு­மு­தல் கட்­ட­ணக் கழி­வு­களை ஊழி­யர்­க­ளுக்கு வழங்­காது.

இந்­தப் பயிற்­சி­க­ளுக்கு இனி ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் வழங்­கீ­டு­க­ளைப் பயன்­ப­டுத்­த­ மு­டி­யாது என்­றும் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. அந்த அமைப்பு ஆத­ர­வு­த­ரும் மொத்த பயிற்­சி­களில் அது ஏழு விழுக்­கா­டா­கும்.

மனி­த­வ­ளத்­திற்­குத் தேவை­யான பயிற்­சி­க­ளுக்கு மேலும் ஆத­ரவு அளிக்­கும் முயற்­சி­யின் அங்­க­மாக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூ­ரின் நிதி வழங்­கீடு கட்­ட­மைப்பு சீர்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

தனி­ந­பர்­க­ளுக்­கான வேலை அமர்த்­தல், திறன் மேம்­பாடு, வாழ்க்­கைத் தொழில் மேம்­பாடு, தொழில்­க­ளுக்கு வேலை மறு­வ­டி­வ­மைப்பு, வர்த்­தக உரு­மாற்­றம் போன்ற நோக்­கங்­களை அடை­வ­தற்கு பயிற்­சி­கள் மறு­சீ­ர­மைப்­புப் பெறு­வதை உறு­தி­செய்­வ­தாக இது அமை­யும் என்­றார் திரு சான்.

நேற்­றுக் காலை வாழ்­நாள் கற்­றல் மையத்­தில் நடை­பெற்ற ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் விழா­வின் தொடக்க நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் பேசி­னார்.

ஓராண்­டுக்­குக் குறைந்­தது அரை மில்­லி­யன் ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளிக்­கும் சிங்­கப்­பூ­ரின் பெரி­யோர் கல்­வித் துறை­யின் வருங்­கா­லத் திட்­டத்­தை­யும் அவர் அறி­வித்­தார்.

கடந்த பிப்­ர­வரி மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்வி கலந்­து­ரை­யா­ட­லில் இது­கு­றித்து முன்­ன­தாக அவர் அறி­வித்­தி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் ஊழி­ய­ரணி அமைப்பு பெரிய அள­வில் திறன் மேம்­பாடு அடைய நான்கு முக்­கிய சவால்­க­ளைக் களைய வேண்­டும் என்று சுட்­டிக்காட்­டி­னார் அமைச்­சர். முத­லில் ஊழி­யர்­க­ளுக்­குத் தங்­கள் திறன்­களை வளர்த்­துக்­கொள்­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தி, அவர்­க­ளுக்கு அதன் மீது ஆர்­வத்தை உரு­வாக்க வேண்­டும். இரண்­டா­வ­தாக, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­க­ளி­டம் எத்­த­கைய திறன்­களை எதிர்­பார்க்­கின்­றன என்­ப­தைத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தும் வாய்ப்­பு­களை அமைத்­துத் தர வேண்­டும்.

மூன்­றா­வ­தாக, இந்­நி­று­வ­னங்­கள் அவற்­றுக்­குத் தேவை­யான திறன்­க­ளைக் குறிப்­பிட்­ட­பின், அவற்றை ஊழி­யர்­க­ளுக்­குக் கற்­பிக்க புதிய, தர­மான பயிற்சித் திட்­டங்­களை வகுக்க வேண்­டும்.

இறு­தி­யில், இப்­ப­யிற்­சித் திட்­டங்­களை வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்த வேண்­டும். புதிய திறன்­க­ளைக் கற்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை வளர்ந்து வந்­தா­லும், அவ்­வ­ளர்ச்­சி­ யின் வேகத்தை அதி­க­ரிப்­ப­தற்­கா­கவே இந்த புது முயற்சி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்­சர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் பயிற்சி, பெரி­யோர் கல்­வித் துறை­யில் ஆற்­றல் மேம்­பாட்டை மெரு­கூட்ட வாழ்­நாள் கற்­றல் கல்­விக் கழ­கம், ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­க­ளு­ட­னும் என்­டி­யுசி கற்­றல் மையத்­து­ட­னும் இரு வெவ்­வேறு இணக்­கக் குறிப்­பு­களில் கையெ­ழுத்­தி­டும் என்று தெரி­வித்­தார் அமைச்­சர்.

"இது அர்த்­த­முள்ள பய­ணம். இதை சரி­யாக செய்­தால், பொரு­ளி­ய­லின் அனைத்­துத் துறை­க­ளி­லும் உள்ள ஊழி­யர்­களும் தொழில்­களும் இந்த முத­லீ­ட்டால் பல­னடை­கிறார்கள்," என்று அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!