ஆரம்பக்கல்வியாளர்கள் பயிற்சிக்கு $13 மி. முதலீடு

ஆரம்­பக்­கல்­வித் துறை­சார்ந்த 2,200க்கும் அதிகமான கல்வி­யாளர்­க­ளின் பயிற்­சிக்­கா­கக் கடந்த ஆறு ஆண்­டு­களில் $13 மில்­லியனுக்­கு மேல் பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு (இசி­டிஏ) முத­லீடு செய்­துள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் தெரி­வித்­துள்­ளார்.

அமைப்பு நேற்று 'பிடிபி' எனப்­படும் தொழில் நிபு­ணத்­து­வத் திட்­டத்­தின்­கீழ் 456 கல்­வி­யா­ளர்­க­ளைப் புதி­தாக நிய­மித்­தி­ருந்த அதன் வரு­டாந்­திர நிகழ்­வில் அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

இந்த மூன்­றாண்டு காலத் திட்­டத்­தில் 2016ஆம் ஆண்­டு­மு­தல் இது­வரை மொத்­தம் 2,735 கல்­வி­யா­ளர்­கள் இணைந்து தங்­க­ளின் வாழ்க்­கைத்­தொ­ழி­லில் முன்­னேற்­றம் கண்­டுள்­ள­தா­க­வும் மேலும் முக்­கி­ய­மான பொறுப்­பு­களை ஏற்­றுள்­ள­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டது.

ஆசி­ரி­யர்­கள், தலை­வர்­கள் உட்­பட இவ்­வாண்டு ஜூலை நில­வ­ரப்­படி சுமார் 650 கல்­வி­யா­ளர்­கள் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முடித்­துள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

 

'பிடிபி'வழி பலன்

 

பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­களில் 'பிடிபி'யை முடித்­துள்ள கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர், திட்­டத்­தின் இறு­திக்­குள் மேலும் முக்­கி­ய­மான, பல்­வ­கை­யான வேலைப் பொறுப்­பு­களைக் கையாள்­வ­தாக திரு­வாட்டி சுன் குறிப்­பிட்­டார்.

இதன்­படி மற்­றக் கல்­வி­யா­ளர்­களுக்கு வழி­காட்­டு­வது, பள்ளி நிலை­யி­லான திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது போன்ற பொறுப்­பு­களை அவர்­கள் மேற்­கொள்கின்றனர்.

பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­கள், பாலர் பள்­ளித் தலை­வர்­கள், மழலை­யர் பரா­ம­ரிப்­பா­ளர்­கள், அதா­வது மூன்று வயது வரை­யி­லான இளம் சிறார்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­வோர் ஆகி­யோ­ர் என மூ­வகை 'பிடிபி'கள் உள்­ளன.

 

ஊக்குவிப்புகள்

 

மூன்று ஆண்டுத் திட்­டத்­தின் இடை­யி­டையே குறிப்­பிட்ட மைல்­கல்­களை அடை­யும் ஆசி­ரி­யர்­களுக்கு ரொக்­க­ வெகு­ம­தி­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இதன்­படி பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் மழ­லை­யர்­க­ளுக்­கான ஆசி­ரி­யர்­க­ளுக்கும் மொத்­த­மாக 12,000 வெள்­ளி­யும் நிலை­யத் தலை­வர்­க­ளுக்கு 15,000 வெள்­ளி­யும் கிடைக்­கும். ஆரம்­பக்­கல்வி நிபு­ணர்­களை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சாங்­கம் முன்­னு­ரிமை கொடுத்து வரு­வ­தாக திரு­வாட்டி சுன் கோடிகாட்டினார்.

அரசாங்கத் திட்டங்கள்

 

இத­னா­லேயே கல்­வி­யா­ளர்­களுக்­கும் தலை­வர்­க­ளுக்­கும் வழி­காட்டவல்ல பல்­வேறு திட்­டங்­களை அர­சாங்­க­மும் தொடங்­கி­யுள்­ள­தாக அவர் சுட்­டி­னார்.

அவற்­றில் ஆரம்­பக்­கல்­வித் துறை­யின் வெவ்­வேறு வேலை­களுக்­குத் தேவை­யான வாழ்க்­கைத்­தொ­ழில் பாதை­க­ளை­யும் ஆற்­றல்­களை­யும் விளக்­கும் 'ஆரம்­பக்­கல்வித் துறைக்­கான திறன்­சார்ந்த பணிச்­சட்­டம்' என்ற திட்­ட­மும் ஒன்று.

அனு­ப­வம் வாய்ந்த பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளின் பய­ணத்­தைப் பற்­றிச் சக ஆசி­ரி­யர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளும் ஒரு தள­மாக 'ஆரம்­பக்­கல்­விக் கற்­றல் சமூ­கங்­கள்' திட்­ட­மும் அர­சாங்­கத்­தால் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!