இணைய உலகில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள்

சமூக ஊட­கங்­களில் தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் யார் தொடர்­பு­கொள்ள முடி­யும், யார் உரை­யாட முடி­யும் என்­ப­தைப் பெற்­றோர்­களும் காப்­பா­ளர்­களும் கட்­டுப்­படுத்­த­வும் பிள்­ளை­கள் இணை­யத்­தில் என்­னென்ன பார்க்க முடி­யும் என்­ப­தற்கு வரம்­பி­ட­வும் தொடர்பு, தக­வல் அமைச்சு பரிந்­து­ரை­கள் சில­வற்­றைச் சமர்ப்­பித்­துள்­ளது.

இத்­த­கைய பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னால் பிள்­ளை­களை இணை­யத் தீங்­கி­லி­ருந்து பாது­காக்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அமைச்சு நேற்று வெளி­யிட்ட கலந்­தா­லோ­சனை அறிக்­கை­யில் இப்­ப­ரிந்­து­ரை­கள் குறிப்­பி­டப்­பட்­டன. இணை­யப் பய­னா­ளர்­க­ளுக்­குப் பாது­காப்பு அளிக்­கக்­கூ­டிய இந்­தச் சேவை­களை அவர்­கள் வலு­வி­ழக்­கச் செய்­தால், இளம் பய­னா­ளர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்­கும் எச்­ச­ரிக்கை விடுக்­கும் வகை­யில் இந்­தச் சேவை­க­ளின் அமைப்­பு­முறை இயங்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

உயிரை மாய்த்­துக்­கொள்­ளு­தல், உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் செயல்­களில் ஈடு­ப­டு­தல் போன்ற அதிக அபா­ய­மு­டைய சூழல்­கள் தொடர்­பான தக­வல்­களை இணை­யத்­தில் தேடும் பய­னா­ளர்­க­ளுக்கு உதவி அமைப்­பு­க­ளின் தொடர்பு எண்­கள், மன­நல ஆலோ­ச­னைச் சேவை­கள் தொடர்­பான தக­வல்­களைக் காண்­பிக்­கும் வகை­யில் சமூக ஊட­கத் தளங்­கள் அமைந்­தி­ருக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இணை­யப் பாது­காப்பு தொடர்­பில் பொது­மக்­களும் கருத்து தெரி­விக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!