நாளைய தலைவர்களின் குரல் ஒலித்த மாநாடு

இளையர்களுக்காக இளையர்களே முன்னெடுத்து நடத்திய வகையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை அண்மையில் ஏற்பாடு செய்திருந்த 'சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2022' அமைந்தது. தமிழ்மொழி சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்புரைகள், குழு விவாதங்கள், கலந்துரையாடல்கள்வழி நிகழ்வில் பங்கேற்ற இளையர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை விவரிக்கிறது இவ்வார இளையர் முரசு.

மொழிக் கற்­றல் என்­பது வெறும் கல்­வி­சார் பாட­மாக மட்­டும் அல்­லா­மல் ஒரு கலாசார அனு­ப­வ­மா­க­வும் இருத்­தல் அவ­சி­யம். இதனை உணர்த்­தும் வித­மாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்ப் பேரவை, 'நாளைய தலை­வர்­க­ளின் குரல்' எனும் கருப்­பொ­ரு­ளில் இளை­யர்­க­ளுக்­காக 'சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர் மாநாடு 2022' எனும் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இம்­மா­நாட்­டில் தமிழ்­மொழி சார்ந்த பல்­வேறு தலைப்­பு­களில் சிறப்­பு­ரை­கள், குழு விவா­தங்­கள், கலந்­து­ரை­யா­டல்­கள் ஆகி­யவை நேர­டி­யா­க­வும் இணை­யம் வாயி­லா­க­வும் மொத்­தம் மூன்று நாள்­க­ளுக்கு நடை­பெற்­றன.

இம்­மா­தம் 2, 3 ஆகிய தேதி­களில் காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை ஸூம் தளத்­தி­லும் நிறைவு நாளான ஒன்­ப­தாம் தேதி­யன்று, மாலை நான்கு மணி முதல் இரவு 8.30 மணி வரை சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 'ஷா ஃபவுண்­டே­ஷன் அலும்னை ஹவுஸ்' அரங்­கில் நேர­டி­யா­க­வும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள 16 முதல் 27 வயது வரை­யுள்ள நூற்­றுக்­கும் மேற்­பட்ட உயர்­நி­லைப்­பள்ளி, புகு­முக வகுப்பு, பல்­க­லைக்­கழக மாண­வர்­க­ளு­டன் முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள், இளம் ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரும் இம்­மா­நாட்­டில் பங்­கேற்­ற­னர்.

தமி­ழர்­க­ளின் அடை­யா­ளத்தை முன்­னி­றுத்த இளை­யர்­கள் தமிழ்­மொ­ழி­யைக் கற்­பது அவ­சி­ய­மா­னது என்று மாநாட்­டின் தொடக்க விழா­வில் தொடர்பு, தக­வல், சுகா­தார அமைச்­சு­க­ளின் மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார். மொழி­யா­னது செழித்து வள­ர கற்­ற­லும் அனு­ப­வ­மும் பக்­க­ப­ல­மாய் இருக்­கும் என்­றும் அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேர­வை­யின் 43ஆவது செயற்­குழு ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் இம்­மா­நாட்­டின் முத­லாம் நாளன்று 'கல்வி', 'இன்­றைய சமூ­கத்­தில் தமிழ் இளை­யர்­க­ளின் பங்கு' ஆகிய இரு தலைப்­பு­களில் பேசப்­பட்­டன. இரண்­டாம் நாளில் தமி­ழர் கலை, கலா­சா­ரம், தமிழ் மொழி ஆகிய கருப்­பொ­ருள்­களில் கருத்­து­கள் பரிமாறப்பட்டன. ஒவ்­வொரு தலைப்­பைப் பற்­றி­யும் ஆழ­மான விளக்­கங்­கள் அளிக்க சிறப்­புப் பேச்­சாளர்­களும் வருகை தந்­தி­ருந்­த­னர்.

சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர்­க­ளுக்கு நிதி­யி­யல் துறை கல்­வி­ய­றி­வின் முக்­கி­யத்­து­வத்தை எவ்­வாறு புரிய வைப்­பது, வழக்­கத்­திற்கு மாறான கல்­விப் பாதை­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­ப­தால் சமூ­கத்­தில் ஏற்­படும் பிரச்­சி­னை­கள், கலா­சார அடை­யா­ள­மும் சமூக-பொரு­ளா­தார வளர்ச்­சி­யும் தமிழ் இளை­யர்­க­ளின் கல்­வி­யில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் ஆகிய தலைப்­பு­களில் இளை­யர்­கள் தங்­க­ளின் குழுக்­களில் கலந்­துரை­யா­டி­னர்.

 

வாக்­குப்­ப­திவு செய்­யும் புதிய முயற்சி

 

இவ்­வாண்­டின் மாநாட்­டில் முதல்­மு­றை­யாக வாக்­குப்­ப­திவு நட­வ­டிக்கை ஒன்று அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது. இளை­யர்­கள் தங்­களது சிறு குழுக்­களில் பிரச்­சி­னை­கள் பற்­றிய கருத்­து­களை முன்­வைத்­த­பின், கலந்­து­ரை­யா­டிய தலைப்­பு­க­ளைச் சார்ந்த அவர்­க­ளது சொந்த அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் வகை­யில் இந்­ந­ட­வடிக்கை அமைந்­தது.

தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமி­ழர் பேரவை மாண­வர்­கள் கேட்ட கேள்­வி­களுக்கு இளை­யர்­கள் ஆர்­வத்­து­டன் பதி­லளித்­த­னர். இந்­ந­ட­வ­டிக்கை அனைத்து தலைப்­பு­க­ளின் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு இடை­யே நடத்­தப்­பட்­டது.

வாக்­குப்­ப­திவு நட­வ­டிக்­கைக்­குப்­ பின் இளை­யர்­கள் மீண்­டும் குழு­நி­லை­யில் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­க­ளைப் பற்றி கலந்­து­ரை­யா­டத் தொடங்­கி­னர். மத்­திய சேம நிதி வழங்­கும் சேவை­கள், வங்­கி­கள் வழங்­கும் சேமிப்­புத் திட்­டங்­கள் ஆகி­யவை தமிழ் இளை­யர்­க­ளுக்கு நிதி வகுத்­த­லில் உத­வும் என்று அவர்­கள் கரு­தி­னர்.

வழக்­கத்­துக்கு மாறான கல்­விப் பாதை­களைத் தேர்ந்­தெ­டுத்­தா­லும் அவற்றில் பலன்­கள் உண்டு. அவை குறித்த விழிப்­பு­ணர்­வைச் சமூ­கத்­தில் ஏற்­ப­டுத்தி இக்­கு­றிப்­பிட்ட பாதை­களில் இளை­யர்­கள் துணிந்து செல்ல முடி­யு­மென அவர்­கள் தெரி­வித்­த­னர்.

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள், சிண்டா போன்ற அமைப்­பு­கள் வழங்­கும் உத­வி­யைப் பயன்

­ப­டுத்­திக்­கொண்டு கல்­வி­யில் முன்­னே­று­வது அவ­சி­யம் என்­றும் இளை­யர்­கள் கூறி­னர்.

 

சமூ­கத்­தில் தமிழ் இளை­யர் பங்கு

 

'சமூ­கத்­தில் தமிழ் இளை­யர்­க­ளின் பங்கு' என்ற தலைப்­பு குறித்­துப் பேச தேசிய பல்­க­லைக்­க­ழக தமிழ்ப் பேர­வை­யின் தலை­வர் திரு விஜ­ய­ராஜ் முத்­துக்­கு­ம­ரன், இந்­திய சமூ­கத்­திற்கு உத­வும் மன­நல நிலை­யம் ஒன்­றின் நிறு­வ­ன­ரான திரு தேவன் ஆகி­யோர் வந்­தி­ருந்­த­னர்.

அவர்­கள் உரையாற்றிய­ பின், இளை­யர்­கள் எவ்­வாறு சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு முயற்­சி­களில் ஈடு­ப­ட­லாம், அவர்­க­ளுக்கு அர­சி­யல், அர­சாங்­கக் கொள்கை அமைப்பு­கள் குறித்த விழிப்­பு­ணர்வு இருப்­ப­தன் அவ­சி­யம், தமிழ் இளை­யர்­க­ளி­டையே குறைந்­து­வ­ரும் தமிழ்­மொழி, கலா­சார ஈடுபாடு, அவர்­க­ளது மன­ந­ல­னின் முக்­கி­யத்­து­வம் ஆகிய தலைப்­பு­களில் பங்­கேற்­பா­ளர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

இத்­த­லைப்­பு­களில் சொல்லப்பட்ட பிரச்­சினை­க­ளுக்­கான தீர்­வு­க­ளை­யும் இளை­யர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

பள்­ளி­கள் வாயி­லா­க­வும் ஊட­கங்­கள் வாயி­லா­க­வும் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, அடித்­தள அமைப்­பு­க­ளு­டன் இளை­யர்­கள் பணி­யாற்­று­வ­தன் வழி அர­சாங்­கக் கொள்­கை­களை அறி­வது போன்ற தீர்­வு­க­ளைப் பங்­கேற்­பா­ளர்­கள் முன்­வைத்­த­னர்.

அத்­து­டன் தமிழ்­மொ­ழி­யில் பேசி, பயின்று, மற்­ற­வர்­க­ளி­டம் தமிழ் கலா­சா­ரத்­தைப் பற்றி பகிர்ந்து தமிழ் அடை­யா­ளத்தை வளர்ப்­பது, இளை­யர்­க­ளின் மன­ந­ல­னைக் காக்க அவர்­கள் உதவி நாடக்­கூ­டிய தளங்­களை அவர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வது ஆகிய ஆலோ­ச­னை­க­ளை­யும் பங்­கேற்­பா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

 

பங்­கேற்­பா­ளர்­கள் கருத்து

இம்­மா­நாட்­டின் முதல் நாளில் கலந்­து­கொண்ட விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூரி மாணவி ப்ரி­ய­தர்­ஷினி நெடு­மா­றன், 16, "தற்­போ­தைய இளை­யர்­கள் எதிர்­நோக்­கும் சவால்­கள், அவற்றை அவர்­கள் எதிர்­கொள்­வ­தற்­கான வழி­மு­றை­கள் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­கள், தமிழ் சமூ­கத்­திற்கு என்­னால் என்ன செய்ய முடி­யும் என்ற எண்­ணத்தை என்­னுள் எழுப்­பி­யுள்­ளன," என்று கூறி­னார்.

ஆக்­கபூர்­வ­மான மாற்­றங்­கள் இளை­யர்­க­ளி­ட­மி­ருந்து தொடங்க வேண்­டும் என்­றும் எந்த ஒரு யோச­னை­யும் செயல் உரு­வம் பெற்­றால் மட்­டுமே சமூ­கத்­தில் நிரந்­தர நிலையை அடை­யும் என்­றும் புரிந்து­கொண்­ட­தாக இம்­மா­நாட்­டில் கலந்­து­கொண்ட கிஷர்ன் தேவ­ராஜ், 22, கூறி­னார்.

நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற பால­மு­ரு­கன் பூஜா­ஸ்ரீ, 16, "பல இளை­யர்­க­ளு­டன் தமி­ழில் பேசி கலந்­து­ரை­யா­டி­ய­தும் மொழி­சார்ந்த விவா­தங்­களில் ஈடு­பட்­ட­தும் மிக­வும் பய­னுள்ள அனு­ப­வ­மாக இருந்­தது. இந்த மாநாடு சக இளை­யர்­களை சந்­திப்­ப­தற்­கும் அவர்­க­ளு­டன் நட்­பு­றவு ஏற்­படுத்­திக்­கொள்­வ­தற்­கும் நல்­ல­தொ­ரு தள­மாக அமைந்­தது," என்று கூறி­னார்.

 

கலைத்­து­றை­யும் தமிழ் இளை­ய­ரும்

 

இரண்­டாம் நாள் நடை­பெற்ற கலை, கலா­சாரத் தொகுப்­பில் சிறப்­புப் பேச்­சா­ள­ராக திரு­வாட்டி மீன­லோச்­சனி ஆனந்­தன் உரை­யாற்­றி­னார். 'மாகூ­லம் கலைக்­கூ­டம்' என்ற நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரான இவர், தமிழ் கலைத்­து­றை­யில் இளை­யர்­கள் பணி­பு­ரிய எத்­த­கைய சவால்­கள் உள்­ளன என்­ப­து பற்றிப் பகிர்ந்­து­கொண்­டார்.

இந்­தி­யப் பெற்­றோர்­ கலைத் துறை­யில் தங்­கள் பிள்­ளை­கள் பணி­யாற்­று­வதை ஆத­ரிக்­கா­தது, அர­சாங்­கம் தற்­போது இக்­க­லை­க­ளுக்கு அளித்­து­வ­ரும் ஆத­ரவு போதா­மல் இருப்­பது, கலைத்­து­றை­யில் ஈடு­பட விரும்­பும் இளை­யர்­க­ளுக்­குப் போது­மான வழி­காட்­டு­தல் இல்­லா­தது போன்ற பிரச்­சி­னை­க­ள் பற்றி அவர் பேசி­னார்.

இளம் வய­தி­லேயே மாண­வர்­க­ளுக்­குத் தமிழ்­மொழி சார்ந்த கலை­க­ள் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தன் முக்­கியத்­து­வம் பற்­றி­யும் அவர் கருத்­து­ரைத்­தார். அவ­ரது உரைக்­குப்­ பின், இளை­யர்­கள் தமிழ் கலா­சா­ரத்­தில் பெண்­க­ளின் பங்கு, தமிழ் கலைத்­து­றை­யில் பணி­யாற்­று­வது போன்ற கருப்­பொ­ருள்­க­ளை­யொட்­டிச் சிறு குழுக்­களில் கலந்­து­ரை­யா­டி­னர்.

தமிழ் கலா­சா­ரத்­தின்மீது பிற கலா­சா­ரங்­கள் ஏற்­ப­டுத்­தி­வ­ரும் தாக்­கம், தமிழ் சமூ­கத்­தில் பெண்­க­ளுக்கு இருக்­கும் கட்­டுப்­பா­டு­கள், தமிழ்த் திரைப்­ப­டங்­களும் ஊட­கங்­களும் தமிழ் கலா­சா­ரத்­தை­யும் பெண்­களை­யும் தவ­றான கண்­ணோட்­டத்­தில் சித்திரிப்பது, கலை­க­ளைச் சிறு வய­தில்­தான் கற்க முடி­யும் என்ற தவ­றான புரி­தல் போன்ற பல பிரச்­சி­னை­க­ள் பற்றி இளை­யர்­கள் கார­சா­ர­மாக விவா­தித்­த­னர்.

பிரச்­சி­னை­களை முன்­வைத்­த­பின் வாக்­குப்­ப­திவு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்ட இளை­யர்­கள், பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­க­ளைப் பற்றி அவர்­க­ளது குழுக்­களில் கலந்து பேசத் தொடங்­கி­னர்.

பள்­ளி­களில் மேலும் பல தமிழ் கலை சார்ந்த நிகழ்ச்­சி­களை நடத்­து­வது, அக்­கலை­க­ளைக் கற்­கக்­கூ­டிய வாய்ப்­பு­க­ள்­பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, இந்­தக் கலை­க­ளின்­வழி பணம் ஈட்­டும் வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது, தமிழ் ஊட­கங்­கள் இது­போன்ற கலை­களை விளம்­பரப்­ப­டுத்­து­வது எனப் பல தீர்­வு­களை அவர்­கள் முன்­வைத்­த­னர்.

நிறு­வ­னங்­கள் வேலை-வாழ்க்கை சம­நி­லையை உறு­தி­செய்­யும் வண்­ணம் தமி­ழர்­க­ளைக் கலை­சார்ந்த துறை­களில் பங்­கேற்க அனு­ம­திப்­ப­தோடு ஆத­ரிக்­க­வும் செய்­ய­லாம் என சில இளை­யர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

கருத்­துப் பரி­மாற்­றங்­களை முடித்த இளை­யர்­கள் தமிழ்­மொ­ழி­ பற்றி பேச ஆயத்­த­மா­கி­னர்.

 

'இல்­லங்­களில் தமிழ்­மொ­ழிப் புழக்­கம் குறைந்­துள்­ளது'

 

'இன்­றைய கால­கட்­டத்­தில் தமிழ்­மொழி' என்ற தலைப்­பில் பேச சிறப்பு விருந்­தி­ன­ராக வசந்தம் தொலைக்­காட்­சிப் படைப்­பா­ள­ரும் 'தி மீடியா' நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நரு­மான திரு முக­மது அலி பங்­கேற்­றார். ஊட­கத் துறை­யில் 30 ஆண்­டு­

க­ளுக்­கும் மேலாக பணி­பு­ரிந்­து­வ­ரும் இவர், சிங்­கப்­பூர் இல்­லங்­களில் தமி­ழர்­கள் தமிழ் பேசும் விகி­தம் குறைந்து வரு­வ­தைச் சுட்­டிக் காட்­டி­னார்.

புள்­ளி­வி­வ­ரத் துறை­யின் ஆய்­வு­க­ளின்­படி 2000ஆம் ஆண்டு 3.2% சிங்­கப்­பூர் இல்­லங்­களில் தமிழ் பேசப்­பட்­ட­தா­க­வும் 2020ஆம் ஆண்டு 2.5% இல்­லங்­களில் மட்­டுமே தமிழ் பேசப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த­கா­லம், நிகழ்கா­லம், எதிர்­கா­ல­மென மூன்று காலங்­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரில் தமி­ழுக்­கான இடம், வீட்­டில் தமிழ்­மொழி புழக்­கத்­தில் இருப்­பது, கல்­வித் திட்­ட­மைப்­பில் தமி­ழுக்கு வழங்­கப்­படும் முக்­கி­யத்­து­வம் போன்ற கருப்­பொ­ருள்­களில் தனது கருத்து­க­ளைப் பங்­கேற்­பா­ளர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டார் திரு அலி.

 

தமி­ழும் தொழில்­நுட்­ப­மும்

 

இவரை அடுத்து தொழில்­நுட்­பத்­தின் வழி தமிழ்­மொ­ழியை எவ்­வாறு வளர்க்­க­லாம் என்ற தலைப்­பில் உரை­யாற்­றி­னார் திரு சிவ­கு­ம­ரன் சாத்­தப்­பன்.

அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்­பின் இயக்­குநர்­களில் ஒரு­வ­ரான இவர், தொழில்­நுட்­பம் எவ்­வாறு தமிழ்­மொ­ழி­யின் பயன்­பாட்­டை­யும் பண்­பாட்­டை­யும் பாதித்­துள்­ளது, தொழில்­நுட்ப வளர்ச்­சி­யின் நடுவே தமி­ழின் இடம், தொழில்­நுட்­பத்­தின் வழி எவ்­வாறு தமிழ்­மொ­ழியை வளர்க்­க­லாம் போன்ற கருப்­பொ­ருள்­களில் தனது கருத்­து­களை முன்­வைத்­தார்.

சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக அழைக்கப் பட்டவர்களின் உரை முடிந்­த­பின் மீண்­டும் இளை­யர்­கள் தங்­கள் குழுக்­களில் கருத்­து­க­ளைப் பகி­ரத் தொடங்­கி­னர்.

தொழில்­நுட்­பம் வளர்ந்து வந்­தா­லும் தமிழ்ப் பெயர்­க­ளைச் சரி­யாக தட்­டச்சு செய்ய முடி­யா­மல் போவது, ஒலி­பெ­யர்ப்பு செய்­வது, தமிழ் மாண­வர்­க­ளி­டையே தமிழ்­மொ­ழி­யின் ஆர்­வத்தை வளர்க்க முடி­யாதது, பிற இன நண்­பர்­க­ளுக்கு நம் கலா­சா­ரப் பெருமையை அறி­மு­கப்­படுத்­தா­ம­லி­ருப்­பது போன்ற பல பிரச்­சினை­

க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் இளை­யர்­கள் கூறி­னர்.

வாக்­குப்­ப­திவு நட­வ­டிக்­கை­யில் வீட்­டில் தமிழ் பேசு­வீர்­களா, பள்­ளி­கள் தமி­ழுக்­குப் போது­மான அளவு ஆத­ரவு தரு­கின்­ற­னவா, தொழில்­நுட்­பம் தமி­ழுக்­குச் சாத­கமா பாத­கமா போன்ற கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன.

கேள்­வி­க­ளுக்கு ஆர்­வத்­து­டன் பதி­லளித்த இளை­யர்­கள், நட­வ­டிக்கை முடிந்­த­பின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­க­ள் குறித்து கலந்­து­ரை­யா­டத் தொடங்­கி­னர்.

சமூக ஊட­கங்­க­ளின்­வழி தமிழ்­மொ­ழி­யின் சிறப்பை உணர்த்­து­வது, மொழி­யின் மீது பெருமை கொண்டு அதை அதி­க­மா­கப் பேசு­வது, ஊட­கங்­கள் இக்­கா­லத்­திற்கு ஏற்­றாற்­போல் நாட­கங்­கள், திரைப்­படங்­கள் ஆகி­ய­வற்றை ஒளி­ப­ரப்­பு­வது போன்ற தீர்­வு­களை இளை­யர்­கள் பகிர்ந்து­கொண்­ட­னர்.

 

எதிர்­நோக்­கிய சவால்­கள்,

கிட்­டிய வெற்­றி­கள்

 

கலந்­து­ரை­யா­டல்­களை வழி­ந­டத்­தி­ய­வர்­களில் ஒரு­வ­ரான முன்­னாள் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் தமிழ்ப் பேர­வைத் தலை­வர், குமாரி அஃப்பிபா ஷஃபானா, 21, "சமூக ஊட­கங்­க­ளின் வழி தமிழ்­மொ­ழி­யின் சிறப்பை எடுத்­து­ரைப்­ப­தில் உள்ள சிக்­கல்­க­ளை­யும் அவற்­றுக்­கான தீர்­வு­க­ளை­யும் இளை­யர்­கள் விவா­தங்­களில் முன்­வைத்­தது அவர்­க­ளின் ஆழ­மான சிந்­தனையைப் பிர­தி­ப­லித்­தது," என்றார்.

நிகழ்ச்சி ஏற்­பாட்­டுக் குழு­வின் கல்­வி­யி­யல் பிரி­வுத் தலை­வ­ரான குமாரி மிரி­தினி கிரி­த­ரன், 20, கலந்­து­ரை­யா­டல் தலைப்­புகள்­ குறித்து பெரிய அளவில் ஆராய்ச்சி இல்லாத நிலையில் கலந்து ரையாடல்களை எவ்­வாறு வழி­ந­டத்­து­வது என்ற குழப்­பத்­தில் இருந்­த­தா­கக் கூறி­னார்.

அத­னால், உத­வி­பெ­று­வ­தற்­காக ஏற்­பாட்­டுக் குழு உறுப்­பி­னர்­க­ளு­டன் ஒரு கலந்­து­ரை­யா­டலை நடத்தி, அதன்­வழி கிடைத்த கருத்­து­க­ளைக் கொண்டு தன் பணியை முடிந்த அள­வுக்­குச் செய்­த­தாகக் குறிப்­பிட்­டார்.

இந்­நி­கழ்ச்­சிக்­கான ஏற்­பா­டு­கள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்­கி­ நடைபெற்றதாக ஏற்­பாட்­டுக் குழு­வின் துணைத் தலை­வ­ரான திரு பூமி­நா­தன் புஷ்­ப­நா­தன், 23, கூறி­னார். நிறைவு விழா­வில் உள்­ளூர் தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­கள் வடி­வ­ழ­கன், ஜெய்னேஷ் இசு­ரன், ராணி கண்ணா, காயத்ரி ஷர்மா ஆகி­யோர் கலந்­து­கொண்டு இளை­யர்­க­ளி­டையே தமிழ் மொழியை வளர்த்­தல், இந்­திய மர­புக்­க­லை­களில் உள்ள வேலை­வாய்ப்­பு­கள், வழக்­கத்­திற்கு மாறான கல்வி மற்­றும் வேலை­யைத் தேர்ந்­தெ­டுப்­ப­தில் உள்ள சமூக இடர்­ப்பா­டு­கள், சிங்­கப்­பூ­ரர் மற்­றும் தமி­ழர் ஆகிய அடை­யா­ளங்­களுக்­கி­டையே சம­நிலை காணு­தல் போன்ற தலைப்­பு­களில் சிறப்­பு­ரை­யாற்­றி­னர்.

நிகழ்ச்சி வெற்­றி­க­ர­மாக நிறை­வு­பெற்­ற­தா­க­வும் பய­னுள்ள பல்­வேறு சிந்­த­னை­கள் இந்த மூன்று நாள்­களில் வெளிப்­பட்­ட­தா­க­வும் ­மா­நாட்­டின் ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் திரு சாத்­தப்­பன் அஷ்­வின் சொக்­க­லிங்­கம், 23, கூறி­னார்.

 

படங்­கள்: ஏற்­பாட்­டுக் குழு, பிக்­சபே

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!