சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு முன்மொழியப்பட்ட மூத்த எழுத்தாளர்கள்

இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரி­சுக்கு மூத்த எழுத்­தா­ளர்­கள் பலர் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ள­னர்.

கலா­சா­ரப் பதக்­கம் பெற்ற இராம கண்­ண­பி­ரான், 79, 'சிங்­கப்­பூர்த் தமிழ்ச் சிறு­க­தை­கள்' எனும் நூலுக்­காக தமிழ் புதி­னம் அல்­லாத பிரி­வில் முன்­மொ­ழி­யப்­பட்­டார். சிங்­கப்­பூ­ரின் சமூக வர­லாற்­று­டன் தமிழ்ச் சிறு­க­தை­க­ளின் வர­லா­றும் ஒன்­றாக இழை­யோ­டு­வதை இந்­த­நூல் காட்­டு­கிறது.

மூத்த எழுத்­தா­ள­ரும் ஆசி­ரி­ய­ரு­மான பொன் சுந்­த­ர­ராசு, 74, எழு­திய 'சுண்­ணாம்பு அரிசி', தமிழ்ப் புதி­னங்­க­ளுக்­கான பிரி­வில் முன் மொழி­யப்­பட்­டுள்­ளது.

1992ல் தொடங்­கப்­பட்ட சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரிசை சிங்­கப்­பூர் புத்­தக மன்­றம் இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை வழங்கி வரு­கிறது. தமிழ், ஆங்­கி­லம், மேண்­ட­ரின், மலாய் ஆகிய நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­க­ளி­லும், புதி­னம், கவிதை, புதி­னம் அல்­லாத படைப்பு என்ற மூன்று பிரி­வு­களில் பரி­சு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாண்டு 49 படைப்­பு­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன; 43 எழுத்­தா­ளர்­கள் நிய­ம­னம் பெற்­றுள்­ள­னர்.

அவர்­களில் 91 வய­துள்ள இரண்டு பேரும் இலக்­கி­யப் பரி­சுக்கு முன்­மொ­ழி­யப்­பட்­ட­னர். கலா­சா­ரப் பதக்­கம் பெற்ற மலாய் எழுத்­தா­ளர் சுராட்­மான் மக்­கா­சான், வர­லாற்று நிபு­ண­ரான பேரா­சி­ரி­யர் வாங் கங்வூ ஆகி­யோர் அவர்­கள்.

முறையே அவர்­கள் மலாய், ஆங்­கில மொழி­களில் புதி­னம் அல்­லாத படைப்புகளுக்­காக முன்­மொ­ழி­யப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூர் இலக்­கி­யத்­துக்கு ஆற்­றிய பெரும் பங்­குக்­காக சிங்­கப்­பூர் புத்­தக மன்­றத்­தின் வாழ்­நாள் சாதனை விருது பேரா­சி­ரி­யர் எட்­வின் தம்­பு­வுக்கு வழங்­கப்­படும்.

தமிழ் புதி­னம் பிரி­வில் 'சுண்­ணாம்பு அரி­சி­யைத்' தவிர, இந்­தி­ர­ஜித்­தின் 'ரயில்', ரமா சுரே­ஷின் 'அம்­ப­ரம்' ஆகி­ய­வை­யும் பரி­சுக்­குப் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. இவை எழுத்­தா­ளர்­க­ளின் முதல் நாவல்­கள் ஆகும். மூன்­றுமே இரண்­டாம் உல­கப் போரைப் பின்­ன­ணி­யா­கக் கொண்­டவை.

இவற்­று­டன் மணி­மாலா மதி­ய­ழ­க­னின் 'தேத்­தண்ணி', கணேஷ்­பாபு எழு­திய 'வெயி­லின் கூட்­டா­ளி­கள்' சிறு­க­தைத் தொகுப்­பு­களும் பரி­சுக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டன.

புதி­னம் அல்­லாத படைப்­புக்­கான பிரி­வில் அழ­கு­நி­லா­வின் 'மொழி வழிக் கனவு', எம்.சேக­ரின் 'படைப்­பும் பன்­மு­கப் பார்­வை­யும்' ஆகிய நூல்­களும் முன்­மொ­ழி­யப்­பட்­டன.

கவி­தைப் பிரி­வில் பாலு மணி­மா­ற­னின் '14ஆம் மாடிக் குடி­யி­ருப்­பென்­பது', 'அன்­பின் சில பொழு­து­கள்' ஆகிய நூல்­களும் இன்பா எழு­திய 'லயாங் லயாங் குரு­வி­க­ளின் கீச்­சொ­லி­கள்' எனும் நூலும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரிசு விரு­த­ளிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி விக்­டோ­ரியா அரங்­கத்­தில் நடை­பெ­றும். ஒவ்­வொரு பிரி­வி­லும் சிங்­கப்­பூர் இலக்­கி­யப் பரிசு பெறு­வோ­ருக்கு $3,000 ரொக்­கத் தொகையும் பரி­சுக்­கோப்­பை­யும் வழங்­கப்­படும்.

நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.

https://www.eventbrite.sg/e/singapore-literature-prize-2022-awards-cere… என்ற தளத்­தில் முன்­ப­திவு செய்­வது முக்­கி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!