உட்லண்ட்ஸ் நார்த் முனையத்தைப் பார்வையிட்ட ஜோகூர் சுல்தான்

சிங்கப்பூர்-ஜோகூர் பாரு விரைவு ரயில் பாலக் கட்டுமானப் பகுதியில் சந்திப்பு

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூர் பாரு­விற்­கும் இடை­யி­லான விரைவு ரயில் சேவைக்­கான (ஆர்­டி­எஸ்) உட்­லண்ட்ஸ் நார்த் முனை­யத்­தில், ஜோகூர் சுல்­தான் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­தரை நேற்று வர­வேற்­றார்.

கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வெடிப்பு முறை­யின்­கீழ் பாறை ஒன்று அகற்­றப்­ப­டு­வதை சுல்­தான் நேற்­றுக் காலை பார்­வை­யிட்­டார்.

'ஆர்­டி­எஸ்' ரயில் பாலக் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு அடித்­த­ளம் அமைக்­கும் பணி குறித்து சுல்­தா­னுக்கு விளக்­கிக் கூறப்­பட்­டது.

பாலத்­தின் கட்­ட­டக் கலை அம்­சங்­க­ளைக் கொண்ட நினை­வுப் பரிசை சுல்­தா­னுக்­குத் தாம் வழங்­கி­ய­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

இரு­த­ரப்பு நட்­பு­ற­வைப் பிர­தி­பலிக்­கும் வண்­ணம் அமை­ய­வி­ருக்­கும் இந்தப் பாலத்தின் வடி­வ­மைப்­பில் ஜோகூர் சுல்­தா­னின் பங்­க­ளிப்­பும் உண்டு என்­பதை அமைச்­சர் நினை­வு­கூர்ந்­தார்.

ஜோகூர் நீரி­ணை­யின் மேல் 25 மீட்­டர் உய­ரத்­தில் அமைக்­கப்­படும் இந்­தப் பாலம் 2026ஆம் ஆண்டு இறு­தி­யில் விரைவு ரயில் சேவைக்­கா­கத் திறக்­கப்­படும்.

அதன் பின்­னர் இரு நக­ரங்­க­ளுக்­கும் இடை­யி­லான போக்­கு­வரத்து மேம்­படும் என்று கூறிய திரு ஈஸ்­வ­ரன், இரு­த­ரப்பு உறவை அது மேலும் வலுப்­ப­டுத்­தும் என்று குறிப்­பிட்­டார்.

விரை­வு­ர­யி­லில் சிங்­கப்­பூ­ரின் உட்­லண்ட்ஸ் நார்த் முனை­யத்­திற்­கும் ஜோகூர் பாரு­வின் புக்­கிட் சாகார் முனை­யத்­திற்­கும் இடை­யி­லான பயண நேரம் ஐந்து நிமி­டங்­க­ளாக இருக்­கும் என மதிப்­பிடப்­பட்­டுள்­ளது.

இரு­வ­ழி­க­ளி­லும் ஒரு மணி நேரத்­துக்­குப் பத்­தா­யி­ரம் பய­ணி­கள் இந்­தச் சேவை­யைப் பயன்­படுத்­து­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பய­ணி­கள் புறப்­படும் இடத்­தில் மட்­டும் குடி­நு­ழைவு நடை­மு­றை­களை மேற்­கொண்­டால் போது­மா­னது.

ஜோகூர் சுல்­தான் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­தர் நேற்­றுப் பிற்­ப­க­லில் செம்­ப­வாங் ஆகா­யப்­ப­டைத் தளத்­திற்­குச் சென்­றி­ருந்­தார்.

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் சுல்­தானை அங்கு வர­வேற்று உபசரித்தார்.

'சிஎச்-47எஃப்' ரக பாரந்­தூக்­கும் ஹெலி­காப்­டர் குறித்து சுல்­தா­னுக்கு விளக்­கம் அளிக்­கப்­பட்­டது. அவர் அதில் பய­ணம் செய்­தும் பார்த்­தார்.

ஜோகூர் பட்­டத்து இள­வ­ர­சர் துங்கு இஸ்­மா­யில் சுல்­தான் இப்­ரா­ஹி­மும் சுல்தானுடன் அங்கு சென்­றி­ருந்­தார்.

ஜோகூர் சுல்­தா­னின் வரு­கை­யின்­போது தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும் செம்­ப­வாங் ஆகா­யப்­ப­டைத் தளத்­தில் அவ­ரைச் சந்­தித்­துப் பேசி­னார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படைத் தளங்­க­ளுக்கு ஜோகூர் சுல்­தான் வருகை மேற்­கொண்­டி­ருப்­பது, சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­விற்­கும் இடை­யி­லான நீண்­ட­கால நல்­லு­ற­வைக் காட்­டு­வ­தாக சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!