இனவாதம் குறித்து வெளிப்படையாகக் கலந்துரையாடிய மாணவர்கள்

சிங்­கப்­பூர்ப் பள்­ளி­களில் நேற்று இன நல்­லி­ணக்க நாள் கொண்­டா­டப்­பட்­டது.

இவ்­வே­ளை­யில், கிராஞ்சி உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள், இனங்­கள் குறித்த கண்­ணோட்­டம், இனப் பாகு­பாடு ஆகிய அம்­சங்­கள் குறித்து வெளிப்­ப­டை­யா­கக் கலந்­து­ரை­யா­டி­னர். இவை தொடர்­பான விவ­கா­ரங்­களைப் பள்­ளி­யில் கலந்­து­ரை­யா­ட கூடு­தல் வாய்ப்­பு­கள் கிடைப்­ப­தாக இப்­பள்­ளி­யின் ஆசி­ரி­யர்­கள் கூறி­னர்.

இதில் ஏறக்­கு­றைய ஆயி­ரம் மாண­வர்­களும் 30 ஆசி­ரி­யர்­களும் பங்­கேற்­ற­னர்.

நிற அடிப்­ப­டை­யில் மக்­கள் தாக்­கப்­ப­டு­வது, கால­கா­ல­மாக நில­வும் பிற இனங்­க­ளைப் பற்­றிய கண்­ணோட்­டம், இவற்­றைக் கையா­ளும் வழி­கள் ஆகி­யவை குறித்து இதில் வெளிப்­ப­டை­யா­கப் பேசப்­பட்­டது.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் இதில் கலந்­து­கொண்டு மாண­வர்­க­ளின் கருத்­து­களை நேரில் கேட்­ட­றிந்­தார்.

கலந்­து­ரை­யா­ட­லில் விவா­திக்­கப்­பட்ட அம்­சங்­க­ளைத் தங்­கள் சொந்த வாழ்­வில் எதிர்­கொண்­டு­வரு­வ­தாக மாண­வர்­கள் சிலர் குறிப்­பிட்­ட­னர். தோற்­றத்­தின் அடிப்­ப­டை­யி­லும் நிறத்­தின் அடிப்­ப­டை­யி­லும் தாங்­கள் எடை­போ­டப்­படு­வ­தாக அவர்­கள் கூறி­னர்.

இத்­த­கைய கலந்­து­ரை­யா­டல் மூலம் மற்­ற­வர்­க­ளின் கண்­ணோட்­டத்தை எவ்­வாறு அணு­கு­வது என்­பது குறித்­தும் அதனை மாற்­றும் வழி­கள் குறித்­தும் தெரிந்­து­கொண்­ட­தாக மாண­வர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

இக்­கால மாண­வர்­கள் சமூக ஊட­கங்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளின் கருத்­து­க­ளுக்­கும் அதிக முக்­கி­யத்­து­வம் தரு­வதை ஆசி­ரி­யர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

வேரூன்­றிய சில கருத்­து­கள் எங்­கி­ருந்து வரு­கின்­றன, அடிப்­படை­யற்ற கருத்­து­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது போன்­ற­வற்றை மாண­வர்­கள் புரிந்துகொள்­ள­ வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னர்.

தெம்­ப­னிஸ் மெரி­டி­யன் தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் இனங்­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­கள் குறித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர். இதில் இரண்­டாம் கல்வி அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் கலந்­து­கொண்டார்.

இதற்கிடையே, பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்ட இன நல்லிணக்க நாள் செய்தியில் ஒவ்வொரு தலைமுறைக்கும் இன நல்லிணக்கம் குறித்து வெவ்வேறு கண்ணோட்டம் இருப்பதாகக் குறிப்பிட்டார். இன நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டிக்­காப்­ப­தற்­கான முயற்சி தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய ஒன்று எனப் பிர­த­மர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!