பள்ளிகளில் திறன்வழி தொண்டூழியம் புரிய வேலை செய்யும் பெற்றோர்களுக்கு அழைப்பு

தங்­க­ளது பிள்­ளை­க­ளின் பள்­ளி­யில் ஈடு­பாடு காட்ட விரும்­பும், முழு­நேர வேலை­யில் உள்ள பெற்­றோர்­கள் தங்­க­ளது திறன்­களை அந்­தப் பள்­ளிக்­குத் திருப்­பித் தரு­வ­வது பற்றி பரி­

சீ­லிக்­க­லாம். தங்­க­ளது திறன்­களைச் சிறப்­பான முறை­யில் பயன்­ப­டுத்த வேண்­டிய இடங்­களை அடை­யா­ளம் காண குடும்ப வாழ்க்கை நிபு­ண­ரான ஜூன் யோங் பெற்­றோர்­க­ளுக்கு யோசனை கூறி உள்­ளார்.

"வேலை செய்­யும் பெற்­றோர்­ க­ளுக்கு நேரப் பற்­றாக்­குறை இருக்­கும். களைப்­பாக இருப்­பார்­கள். எனவே, பள்­ளிக்­கூட நிகழ்­வு­களில் தொண்­டூ­ழி­யம் புரி­வது என்­பது அவர்­க­ளின் முதற்­கட்ட விருப்­ப­மாக இருக்க வாய்ப்­பில்லை.

"அதே­நே­ரம் நிபு­ணத்­து­வத் திறன்­கள் அதி­கம் தேவைப்­படும் இடங்­களில் அந்­தத் திறன்­களைத் தொண்­டூ­ழி­ய­மாக வழங்­க­லாம். பள்­ளிக்­கூ­டம் என்­பது மாண­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள் ஆகி­ய­யோருடன் பெற்­றோர்­களும் பயன்­பெ­றக் கூடிய விரி­வான சமூ­கம். அங்கு பெற்­றோர்­க­ளின் நிபு­ணத்­து­வத் திறன்­ கள் தேவைப்­ப­ட­லாம்," என்று விளக்­கி­னார் திரு­வாட்டி ஜூன்.

அர­சாங்க ஊழி­ய­ரும் கான்­கோர்ட் தொடக்­கப் பள்ளி, கிராஞ்சி உயர்­நி­லைப் பள்ளி ஆகி­ய­வற்­றின் பெற்­றோர் ஆத­ர­வுக் குழுத் தலை­வ­ரு­மான கணே­சன் மணி­யம், 53, பெற்­றோர்­கள் தங்­க­ளது கடு­மை­யான பணி­க­ளுக்கு இடை­யில் பள்­ளிக்கு நேரத்தை ஒதுக்­கு­வது பற்றி யோசிக்­க­லாம் என்­றார்.

"எல்லா நேர­மும் அவர்­கள் பள்­ளிக்­கூ­டத்­தின் எல்லா நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­ப­டப்­போ­வ­தில்லை. வேலை செய்­யும் பெற்­றோர்­க­ளுக்­காக நீக்­குப்­போக்­கான ஏற்­பா­டு­கள் உள்­ளன. மாலை நேரங்­க­ளிலோ சனிக்­கி­ழ­மை­க­ளிலோ ஸும் வழி­யாகப் பெற்­றோர் நிகழ்­வு­களை நடத்து­கி­றோம்.

"நான் பங்­கேற்­கும் கூட்­டங்­கள் குறிப்­பிட்ட நேரத்­திற்­குள் முடிந்­து­வி­டும். பெற்­றோர்­கள் தங்­க­ளது குடும்­பத்­தைக் கவ­னிக்­கச் செல்ல வேண்­டும் என்­ப­தில் நான் கவ­ன­மாக இருப்­பேன். பள்­ளி­களில் பல நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­கும் இந்த நேரத்­தில் பெற்­றோர்­கள் ஈடு­பட விரும்­பும் நிகழ்­வு­களில் பங்­கேற்க இது நல்ல வாய்ப்பு," என்­றார் திரு கணே­சன் மணி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!