மானபங்கம்: ஆடவருக்கு சிறை

மானபங்கம்: ஆடவருக்கு சிறை

1 mins read
5090ada6-3e03-4e09-aafb-f0c1ab709511
-

பெண்ட­மி­யர் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்­தத்­துக்கு அருகே 12 வயது மாண­வியை மான­பங்­கம் செய்­த­தற்­காக நியோ பெங் நியோ, 56, என்­ப­வ­ருக்கு 20 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அந்த ஆட­வர் ஏற்­கெ­னவே குற்­றம் செய்து தண்டனை அனு­பவித்து வந்­தார். திருந்தி வாழ வேண்­டும் என்று அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. அந்த உத்­த­ரவை நிறை­வேற்­றும் காலத்­தில் அவர் மீண்­டும் தவறு செய்­தார்.

இதற்­காக அவ­ருக்கு கூடு­தலாக 10 நாள்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நியோ ஒரு குற்­றச்­சாட்­டின் பேரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அதே­போன்ற இரண்­டா­வது குற்­றச்­சாட்டு, தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

மான­பங்­கச் சம்­ப­வம் 2021 ஜூலை 23ஆம் தேதி நிகழ்ந்­ததாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

நியோ, மான­பங்­கம் தொடர்­பில் ஏற்­கெ­னவே இரு முறை குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டவர். ஒவ்­வொரு முறை­யும் அவ­ருக்கு 15 மாதம் சிறைத்­தண்டனை விதிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.