கைகொடுக்கும் பாடத்திட்டம்

ஆட்­டி­சம், அறி­வு­சார் குறை­பாடு இரண்­டுமே உடைய மாண­வர்­கள், புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் பாடத்­திட்­டத்­தின் வழி பல­ன­டை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள 'ஃபெர்ன்­வேல் கார்­டன்ஸ்' பள்­ளி­யில் அறி­மு­கம் காணும் இந்­தப் பாடத்­திட்­டம், இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ரின் தேவை­களை மேலும் சிறந்த முறை­யில் கையாள்­வ­து­டன் பள்ளி வளா­கத்­தில் ஆட்­டி­சம் உள்ள மாண­வர்­களுக்கு உகந்த இடங்­களும் ஏற்­படுத்­தித் தரப்­படும்.

அண்­மைய ஆண்­டு­க­ளாக ஆட்­டி­சம், அறி­வு­சார் குறை­பாடு இரண்­டுமே கொண்ட பிள்­ளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­வ­ரும் போக்­கைக் கவ­னித்­து­வந்­த­தா­க­வும் அறி­வு­சார் குறை­பாடு மட்­டுமே கொண்­ட­வர் எண்­ணிக்கை குறைந்­து­வ­ரு­வ­தா­க­வும் பள்ளி தெரி­வித்­தது. 'மைண்ட்ஸ்' எனப்­படும் அறி­வு­சார் குறை­பா­டு­டை­யோ­ருக்­கான சிங்­கப்­பூர் அமைப்­பின்­கீழ் இந்­தப் பள்ளி செயல்­பட்டு வரு­கிறது.

மேம்­ப­டுத்­தப்­பட்ட பாடத்­திட்­டம் குறித்து மைண்ட்ஸ் நேற்று அறி­வித்­தது. கடந்த செப்­டம்­பர் மாதம் இது தொடர்­பான முன்­னோ­டித் திட்­டத்­தால் சுமார் 50 மாண­வர்­கள் பல­ன­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. அடுத்த ஆண்­டுக்­குள் புதிய பாடத்­திட்­டத்தை அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் நடை­மு­றை­யாக்­கத் திட்­ட­மி­டப்­ப­டு­கிறது.

பள்­ளி­யில் ஏழு முதல் 18 வயது வரை­யி­லான மாண­வர்­கள் பயின்று வரு­கி­றார்­கள். புதிய பாடத்­திட்­டத்­தின் மூலம் இன்­னும் இளம் வய­தி­லேயே தங்­க­ளின் ஆர்­வத்தை மாண­வர்­க­ளால் கண்­ட­றிய கூடு­தல் வாய்ப்­பு­கள் அமைத்­துத் தரப்­படும் என்­றும் நாள­டை­வில் தங்­க­ளின் ஆற்­றலை மாண­வர்­கள் மேலும் வலு­வாக்க முடி­யும் என்­றும் ஃபெர்ன்­வேல் கார்­டன்ஸ்' பள்ளி முதல்­வர் மேத்யூ அவ் கூறி­னார்.

விளை­யாட்­டு­கள், காண் கலை­கள், தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்­பம் போன்ற அம்­சங்­களில் மாண­வர்­கள் தங்­கள் ஆர்­வத்தை வளர்த்­துக்­கொள்­வது சாத்­தி­ய­மா­க­லாம்.

முன்­ன­தாக எண்­ண­றிவு, தின­சரி வாழ்க்கை தொடர்­பான செயல்­பாட்­டுத் திறன்­களில் பாடங்­கள் கவ­னம் செலுத்­தி­ய­தாக திரு அவ் தெரி­வித்­தார்.

இனி, ஒவ்­வொரு மாண­வ­ரின் ஆர்­வத்­தி­லும் குழு­நி­லை­யில் கற்­றல், பலங்­களை அறி­தல், சமூ­கத் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ளு­தல் போன்­ற­வற்­றி­லும் மேம்­ப­டுத்­தப்­பட்ட பாடத்­திட்­டம் கவ­னம் செலுத்­தும் என்­றார் அவர்.

இதற்­கி­டையே, ஆட்­டி­சம், அறிவு­சார் குறை­பாடு இரண்­டுமே உள்ள மாண­வர்­க­ளைக் கையாள்­வ­தற்­குக் கடந்த ஆண்­டு­களில் ஆசி­ரி­யர்­கள் பயிற்சி பெற்­று­வ­ரு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

ஆட்­டி­சம் உள்ள மாண­வர்­களுக்கு ஏற்ற அம்­சங்­கள் பொருந்­திய இரண்டு வகுப்­ப­றை­கள், மன­துக்கு இத­ம­ளிக்­கும் வண்­ணங்­கள் கொண்ட பள்­ளிச் சுவர்­கள் என பள்­ளி­யும் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று ஃபெர்ன்­வேல் கார்­டன்ஸ் பள்­ளிக்கு வந்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!