‘நீக்குப்போக்கு இல்லையேல் வேலையே வேண்டாம்’

சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் 40 விழுக்­காட்டு ஊழி­யர்­கள், வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் நடை­முறைக்கு அனு­மதி இல்­லா­விட்­டால் அந்த வேலை வாய்ப்பை நிரா­க­ரிப்­பர் என்று அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

ஆயி­ரம் ஊழி­யர்­க­ளி­டம் இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. இதில் கிட்டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­னர் நீக்­குப்­போக்­கான வேலை நேரத்­துக்­குத் தாங்­கள் முக்­கி­யத்­து­வம் தரு­வ­தா­கக் கூறி­னார். பங்­கேற்­றோ­ரில் 41 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளுக்கு ஏது­வான நேரத்­தில் வேலை செய்ய இய­லா­விட்­டால் அந்த வேலை வாய்ப்பை ஏற்­க­மாட்­டோம் என்று கூறி­னர்.

'ராண்ட்ஸ்­டாட்' நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் 18 வயது முதல் 67 வயது வரை­யி­லான ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர். இவர்­களில் 27 விழுக்­காட்­டி­னர் நீக்­குப்­போக்­கான வேலை நேரம் இல்­லா­த­தா­லும், வீட்­டி­லி­ருந்து வேலை­செய்ய இய­லா­த­தா­லும் வேலையை விட நேர்ந்­த­தா­கக் குறிப்­பிட்­ட­னர்.

ஆய்­வில் பங்­கேற்ற 52 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தங்­கள் முத­லா­ளி­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் தெரிவை வழங்­கி­யி­ருப்­ப­தா­கக் கூறி­னர். வேலை நேரம் தொடர்­பில் நீக்­குப்­போக்­குத் தன்மை கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தாக 60 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

மன­ம­கிழ்ச்­சி­யின்றி வேலை செய்­வ­தைக் காட்­டி­லும் வேலை இல்­லா­மல் இருப்­பதே மேல் என்று 41 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர். மகிழ்ச்­சி­யான வாழ்க்­கைக்கு இடை­யூ­றாக விளங்­கி­னால் வேலையை விட்­டு­வி­டு­வோம் என்று 52 விழுக்­காட்­டி­னர் இந்த ஆய்­வில் கருத்­து­ரைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!