சிங்கப்பூரின் மரபுடைமையைக் கட்டிக்காக்க துணைநின்று ஆதரித்தோருக்கு விருது

சிங்­கப்­பூ­ரின் மர­பு­டை­மை­யைப் பாது­காப்­ப­தற்­கான முயற்­சி­க­ளைத் தக்­க­வைக்­க­வும் மர­பு­டை­மைத் துறை­யின் திறன்­களை வலுப்­

ப­டுத்­த­வும் கடந்த ஆண்டு $1.66 மில்­லி­யன் மதிப்­பி­லான நன்­கொடை வழங்­கி­ய­வர்­க­ளைப் பாராட்­டும் வித­மாக ‘மர­பு­டை­மை­யின் புர­வ­லர் விருது 2021’ நிகழ்ச்சி நடை­பெற்­றது. செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற இந்த நிகழ்ச்­சி­யில் 31 நன்­கொ­டை­யா­ளர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

தேசிய பாரம்­ப­ரி­யத்தை வளப்­ப­டுத்­து­வ­தற்­கான பங்­க­ளிப்­பு­களை குறிப்­பி­டத்­தக்க வகை­யில் அளித்த தனி­ந­பர்­கள் மற்­றும் நிறு­வ­னங்­களை கௌர­வப்­ப­டுத்­து­வ­தை­யும் மர­பு­டை­மையை மேம்­ப­டுத்­து­வ­தை­யும் இந்­நி­கழ்ச்சி நோக்­க­மாக கொண்­டி­ருந்­தது.

தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில் மலாய் மர­பு­டைமை நிலை­யத்­தில் நடை­பெற்ற விருது வழங்­கும் நிகழ்ச்­சி­யில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரும் இரண்­டாம் சட்ட அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

“எங்­கள் ஆத­ர­வா­ளர்­க­ளின் தாராள மனப்­பான்­மையை நாங்­கள் மிக­வும் பாராட்­டு­கி­றோம். சிங்­கப்­பூர் மர­பு­டை­மைத் திட்­டம் 2.0 தயா­ரா­கி­வ­ரும் வேளை­யில், நாம் நமது மர­பு­டைமை மற்­றும் அருங்­காட்­சி­ய­கத் துறை­யின் அடுத்­த­கட்ட வளர்ச்­சி­யைத் நோக்கி முன்­னோக்­கிச் செல்­கி­றோம். இதன்­மூ­லம், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆத­ர­வோடு நம்­மால் அதிக நம்­பிக்கை மற்­றும் ஒருங்­கி­ணைப்பு நிறைந்த சிங்­கப்­பூரை உரு­வாக்க முடி­யும்,” என்று திரு எட்­வின் கூறி­னார்.

நிகழ்ச்­சி­யில் யுவ­பா­ரதி அனைத்­து­ல­கப் பள்­ளிக்கு (YBIS) ‘மர­பு­டை­மை­யின் தோழர் விருது’ வழங்­கப்­பட்­டது. “இந்­தப் பள்ளி 2016ஆம் ஆண்டு முதல் தேசிய மர­பு­டைமை வாரி­யத்­து­டன் இணைந்து செயல்­

ப­டு­கிறது. வருங்­கா­லத் தலை­

மு­றைக்கு நமது மர­பை­யும் பாரம்­ப­ரி­யத்­தை­யும் பாது­காத்து முன்­னி­லைப்­ப­டுத்த எங்­கள் பள்ளி உதவி வரு­வதை எண்ணி நாங்­கள் மகிழ்ச்­சி­ய­டை­கி­றோம்,” என்று யுவ­பா­ரதி அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் இயக்­கு­நர் திரு­மதி லதா மோகன்­கு­மார் கூறி­னார்.

இவ்­வாண்டு, ‘என்.என். இன்­வெஸ்ட்­மெண்ட் பார்ட்­னர்ஸ்’ நிறு

­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான கோபி மிர்­சந்­தா­னிக்கு ‘மர­பு­டை­மை­ ஆத­ர­வா­ளர் விருது’ வழங்­கப்­பட்­டது.

“எனது பெற்­றோர் வெவ்­வேறு இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். நான் வளர்ந்த காலத்­தில் நாங்­கள் சண்­டை­யை­விட இன நல்­லி­ணக்­கத்தை;த தான் பெரி­த­ள­வில் அனு­ப­வித்­தி­ருக்­கி­றோம்.

“நம் உள்­ளூர் மக்­களும் சுற்­றுப்­ப­ய­ணி­களும் சிங்­கப்­பூ­ரின் மர­பு­டை­மையை அர்த்­த­முள்ள வகை­யில் அனு­ப­விக்க வேண்­டும். துறை­முக நக­ர­மான நம் சிங்­கை­யின் தனித்­து­வ­மான வர­லாற்­றைப் பற்றி அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­பதே எனது விருப்­பம்,” என்று திரு கோபி மிர்­சந்­தானி கூறி­னார்.

தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் தலை­வர் திரு­மதி யோ சீ யான், “இந்த சவா­லான கால­கட்­டத்­தில், நமது மர­பு­டை­மையை மேம்­ப­டுத்தி கட்­டிக்­காக்க உத­விய நன்­கொ­டை­யா­ளர்­க­ளின் அன்­ப­ளிப்­பு­களும் தொடர்ச்­சி­யான ஆத­ர­வும் எங்­க­ளுக்கு பெரி­த­ள­வில் உத்­வே­கத்­தை­யும் உந்­து­த­லை­யும் அளித்­துள்­ளன,” என்று கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!