குடும்பப் பண்பு, சமூக நெறிமுறைகள் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்வி தொடரும்: கல்வி அமைச்சு

இரு ஆண்­க­ளுக்கு இடை­யி­லான ஓரின பாலி­யல் உற­வைக் குற்­ற­மாகக் கரு­தும் சட்­டப்­பி­ரிவு 377ஏ நீக்­கப்­பட்­டா­லும் கல்­விக் கொள்­கை­கள், பாடத்­திட்­டங்­கள் சிங்­கப்­பூ­ரின் குடும்­பப் பண்­பு­க­ளை­யும் சமூக நெறி­மு­றை­க­ளை­யும் ஒட்டியே இருக்கும் என்று கல்வி அமைச்சு நேற்று மறு­வு­று­திப்­ப­டுத்­தி­யது.

இதையே பெரும்­பா­லான சிங்கப்­ பூ­ரர்­க­ளின் விருப்­ப­மாகவும் இருப்ப தாக நேற்று வெளி­யிட்ட ஓர் அறிக்­கை­யில் அது சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

பள்­ளி­களும் உயர் கல்வி நிலை­யங்­களும் அறி­வாற்­ற­லைப் பெருக்­கும் இட­மாக மட்­டுமே இருக்­கும். சமூ­கத்தை பிளவுப்படுத்­தும் விவ­கா­ரங்­க­ளுக்கு வாக்குவாதத் தள­மா­க­வும் போட்­டி­யி­டும் இட­மா­க­வும் அது இருக்­காது.

ஓர் ஆணுக்­கும் ஒரு பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­ம­ண பந்­தமே சிங்­கப்­பூர் சமூ­கக் கட்­ட­மைப்­பின் அடித்­த­ள­மா­கும் என்று கல்வி அமைச்சு கூறியது.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை தமது தேசிய நாள் பேரணி உரை­யின்­போது ஆண்­க­ளுக்கு இடை­யி­லான ஒத்த பாலீர்ப்­பு­டைய உற­வைக் குற்றச்செய­லா­க வகைப்படுத்தும் சட்டப் பிரிவு 377ஏ நீக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தார்.

இதை­ய­டுத்து ஒர் ஆணுக்­கும் ஒரு பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­ம­ண பந்­தத்­தைப் பாது­காக்க அர­சி­யல­மைப்பு திருத்­தம் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது.

"சிங்­கப்­பூ­ரின் குடும்­பப் பண்­பு­கள், சமூக நெறி­மு­றை­கள் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரர்­க­ளால் நிர்­ண­யிக்­கப்­பட வேண்­டும்.

அவற்றை வெளி­நாட்டவர்கள், வெளிநாட்டு அமைப்புகள் மதித்து நடக்க வேண்­டும். தங்­க­ளு­டைய சொந்த விருப்­பங்­க­ளைப் புகுத்த கல்வி நிலை­யங்­களை ஒரு தள­மாக அவர்­கள் பயன்­ப­டுத்­தக் கூடாது," என்று கல்வி அமைச்சு குறிப்­பிட்­டது.

"கல்வி நிலை­யங்­களில் பரஸ்­பர புரிந்­து­ணர்வு, மதித்து நடப்­பது, அனை­வ­ரி­டமும் பரிவு காட்­டு­வது போன்ற பண்­பு­களை எல்லா மாண­வர்­களும் கற்­றுக்கொள்­வார்­கள்.

"எங்­கள் கல்வி நிலை­யங்­களில் கற்­பிக்­கப்­படும் பாலி­யல் கல்வி, மதச்­சார்­பற்ற, பாரம்­ப­ரிய பண்­பு­கள் மற்­றும் பல இன சமு­தாய உணர்வு­ க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கும் சமூ­கம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யி­ருக்­கும். கேலி, கலா­சா­ரத்தை இழத்­தல் போன்­றவை கல்வி நிலை­யங்­ களிலும் சமூ­கத்­தி­லும் காலூன்­ற அனுமதிக்கக்கூடாது.

பிள்­ளை­க­ளுக்கு வழி­காட்ட பெற்­றோ­ரு­டன் கல்வி நிலை­யங்­கள் இணைந்து செயல்­படும். மாண­வர் ­க­ளின் தேவைக்கு ஏற்ப ஆலோ­ச­னை­களும் சமூக உணர்­வி­லான ஆத­ர­வும் வழங்­கப்­படும்," என்று கல்வி அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!