உள்ளூர் படைப்பாளர்களுக்கென ஒரு ‘குரல்’

காயத்­திரி காந்தி

'சிங்­கப்­பூர் இந்­திய நாடக மற்­றும் திரைப்­பட ஆர்­வ­லர்­கள்' (சிட்ஃபி) அமைப்­பின் ஏற்­பாட்­டில் 'குரல்' என்­னும் குறும்­ப­டத் திரை­யி­டல் நிகழ்ச்சி இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று 'ஸ்கேப் கேலரி'யில் நடை­பெற்­றது. தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு மற்­றும் ஸ்கேப் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வில் நடந்­தே­றிய இந்­நி­கழ்ச்­சி­யில், உள்­ளூர் படைப்­பா­ளர்­க­ளான கெவின் வில்­லி­யம், டான் அர­விந்த், பவித்­ரன் நாதன், விக்­னேஸ்­வ­ரன் சில்வா, முஹம்­மது ரிஃபாத் ஆகி­யோ­ரின் குறும்­ப­டங்­கள் திரை­யி­டப்­பட்­டன.

அனைத்துலக அள­வில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து வெளி­யி­டப்­படும் இந்­திய நாட­கங்­கள் மற்­றும் திரைப்­ப­டங்­க­ளுக்­கான தூத­ராக இருப்­பதே 'சிட்ஃபி' அமைப்­பின் தொலை­நோக்­குப் பார்­வை­யா­கும்.

'சிட்ஃபி' அமைப்பு 'இந்த்­பாக்ஸ் எஸ்ஜி' (Indbox SG) என்­னும் குறும்­படக் காப்­பக இணை­யத்­த­ளத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் இது­வரை எடுக்­கப்­பட்ட அனைத்து இந்­தி­யக் குறும்­ப­டங்­களும் திட்­டத்­தின்­கீழ் இடம்­பெ­றும்.

"உள்­ளூர் படைப்­பு­க­ளை­யும் குறும்­ப­டங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்­கும் தளத்தை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தையே 'இந்த்­பாக்ஸ் எஸ்ஜி' அதன் நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. ஒவ்­வொரு படைப்­பி­லும் ஒரு தனித்­தன்மை வாய்ந்த குரல் அடங்­கி­யி­ருக்­கும். எனவே, திரைப்­ப­டத் தயா­ரிப்­பில் ஆர்­வ­முள்ள இளை­யர்­களை ஊக்­கு­விப்­ப­தற்­கா­க­வும் இளை­யர்­க­ளின் குர­லைச் சமூ­கத்­திற்­குக் கொண்டு செல்­வ­தற்­கா­க­வும் இந்த முயற்­சியை நாங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றோம்," என்­றார் சிட்ஃபி அமைப்­பின் இயக்­கு­னர் சலீம் ஹாடி.

"எனக்கு 14 வய­தில்­தான் இந்த துறை­யில் ஆர்­வம் உண்­டா­னது. திரைப்­ப­டத் தயா­ரிப்­பில் ஆர்­வ­முள்ள இளை­யர்­கள், ஏற்­கெ­னவே எழு­தப்­பட்ட கதை­களை வேறு வடி­வத்­தில் வழங்­கு­வதைவிட, சமு­தா­யத்­தில் ஒலிக்க வேண்­டிய ஒரு குர­லா­கத் தங்­க­ளின் கதை­களை வடி­வ­மைக்க வேண்­டும்," என்று கூறி­னார் உள்­ளூர் படைப்­பா­ளர் மற்­றும் இயக்கு நரான டான் அர­விந்த்.

சமு­தா­யம், குடும்­பம் சார்ந்த முக்­கி­ய கருத்­து­களை எடுத்­து­ரைப்­ப­வ­ரான டான் அர­விந்த் இயக்­கத்­தில் உரு­வான 'சில்க்' குறும்­ப­டம், இந்­நி­கழ்ச்­சி­யில் திரை­யி­டப்­பட்­டது.

"சிறு வய­தி­லி­ருந்தே எந்த திரைப்­ப­டத்தை பார்த்­தா­லும் அதன் திரைக்­கதை, ஒளிப்­ப­திவு போன்ற நுணுக்­கங்­களைப் பகுத்­தாய்­வது எனது பழக்­கம். திரைப்­ப­டங்­களை அலசி ஆராய்­வ­தைத் தாண்டி, குறும்­ப­டம் எடுக்க விருப்­பப்­படும் இளை­யர்­க­ளுக்­குப் பொறுமை அவ­சி­யம்," என்று கூறி­னார் தேசிய இளை­யர் திரைப்­பட விருது விழா­வில் இரு­முறை சிறந்த இயக் குநருக்கான விருது பெற்ற செ.விக்­னேஸ்­வ­ரன். நிகழ்ச்­சி­யில் இவ­ரின் 'டார்க் லைட்' திரை­யி­டப்­பட்­டது.

"சரி­யான தரு­ணத்­திற்­காக காத்­தி­ருக்­கா­மல் கிடைக்­கும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள். சிறப்­பான, கருத்­துள்ள கதை­களை மாறு­பட்ட கோணத்தில் எழு­துங்­கள்," என்று இளை­யர்­களுக்­குக் கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றார் 'வரைத்­தோள்' குறும்­பட இயக்­கு­நர் பவித்­ரன் நாதன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!