கற்றல் வளங்களாக மாறிய மாணவர்களின் குறும்படங்கள்

யுகேஷ் கண்­ணன்

தொடக்­கக்­கல்­லூரி மாண­வர்­களின் தமிழ் மொழி, இலக்­கி­யப் பாடத்­திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 'நாடோ­டி­கள்', 'எண்­ணங்­கள் நிலை­யானவை அல்ல' ஆகிய இரண்டு சிறு­க­தை­க­ளைக் குறும்­படங்­க­ளாக இயக்கி வெளி­யிட்­டுள்­ள­னர் ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் தமிழ்­மொழி விருப்­பப்­பாட மாண­வர்­கள்.

தம் மாண­வர்­க­ளுக்­குத் தமிழ் மொழி, இலக்­கிய பாடத்­தின் மீது ஆர்­வத்தை வளர்க்­கும் நோக்­கு­டன் இம்­மு­யற்­சி­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறி­னார் அப்­பள்­ளி­யின் தமி­ழா­சி­ரி­யர் திரு வீர­முத்து கணே­சன்.

அது­மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூ­ரி­லுள்ள மற்­ற தொடக்­கக் கல்­லூரி­களைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­களும் பயன்­பெ­றும் வகை­யில், இக்­கு­றும்­ப­டங்­க­ளைக் கற்­றல் வளங்­க­ளாக வழங்­கி­யுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

இவ்­விரு சிறு­க­தை­க­ளை­யும் இராம கண்­ண­பி­ரான், மா இளங்­கண்­ணன் ஆகிய உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் எழு­தி­யுள்­ள­தால் குறிப்­பாக இவற்­றைக் குறும்­ப­டங்­க­ளாக இயக்க மாண­வர்­களை ஊக்­கு­வித்­த­தாக அவர் கூறி­னார்.

மாண­வர்­க­ளுக்­குக் குறும்­ப­டத் தயா­ரிப்­பில் உத­வு­வ­தற்­காக, சிங்­கப்­பூர் ஊட­கத்­து­றை­யில் 1999ஆம் ஆண்­டி­லி­ருந்து பணி­யாற்­றி­வ­ரும் சலீம் ஹாடி உத­வி­யு­டன் பயி­ல­ரங்கு ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

மாண­வர்­கள் இயக்­கிய குறும்­படங்­கள், இம்­மா­தம் 18ஆம் தேதி­யன்று ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் அப்­பள்ளி முதல்­வர் திரு மனோ­க­ரன் சுப்­பை­யா­வின் தலை­மை­யில் வெளி­யி­டப்­பட்­டன.

சிறு­க­தை­க­ளைப் படித்து அவற்­றி­லி­ருந்து கற்­றுக்­கொண்­ட­வற்­றைத் திரைக்­குக் கொண்­டு­வ­ரு­வது எளி­தான பணி­யல்ல என்று கூறி­னார் 'நாடோ­டி­கள்' குறும்­ப­டத்தை இயக்­கிய தொடக்­கக் கல்­லூரி முத­லா­மாண்டு மாண­வர் சௌந்­த­ர­பாண்­டி­யன் ஸ்ரீராம்.

"படித்த சிறு­க­தை­க­ளுக்கு, காட்­சி­ய­மைப்பு, வச­னம், திரைக்­கதை போன்ற அனைத்து அம்­சங்­க­ளை­யும் நாங்­கள் சுய­மா­கச் சிந்­தித்து வடி­வ­மைக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது," என அவர் தெரி­வித்­தார்.

அத்­து­டன் கருத்­து­கள் நிறைந்த கதையை குறும்­ப­ட­மாக படைக்­கும்­போது சில காட்­சி­களை அதன் தன்மை மாறா­மல் சுவா­ர­சி­யப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­ய­மும் இருந்­த­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

சவால்­கள் பல இருந்­தா­லும் எதிர்­கா­லத்­தில் இது­போன்ற முயற்சி­களில் ஈடு­பட தனக்கு ஆர்­வ­மாக உள்­ள­தா­க­வும் ஸ்ரீராம் கூறி­னார்.

குறும்­ப­டத் தயா­ரிப்­புக்­காக அதி­க செலவு செய்­ய­வில்லை என்று கூறி­னார் 'எண்­ணங்­கள் நிலை­யானவை அல்ல' குறும்­ப­டத்­தின் இயக்குநரும் தொடக்­கக் கல்­லூரி முத­லா­மாண்டு மாண­வ­ரு­மான ப அ ரகு­நந்­தன்.

நண்­பர்­க­ளின் இல்­லங்­கள், பெற்­றோ­ரின் கடை­கள், பள்­ளி­யில் அமைந்­துள்ள பொது இடங்­கள், சிங்­கப்­பூ­ரின் பூங்­காக்­கள் ஆகி­யவை அவர்­க­ளது படப்பிடிப்புக்குப் பின்னணியாக மாறின.

"ஜூன் மாத விடு­மு­றை­யில் படப்­பி­டிப்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­தால் அரை­யாண்­டுத் தேர்­வு­க­ளுக்­காக படிப்­பது சற்று சிர­ம­மாக இருந்­தா­லும், குறும்­பட வேலை­களை வெற்­றி­க­ர­மாக முடித்து தேர்­வு­களி­லும் தேர்ச்சி பெற்­றது மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வம்," என்று கூறி­னார் ரகு­நந்­தன்.

இரண்டு குறும்­ப­டங்­க­ளை­யும் 'ASRJC TLEP' யூடி­யூப் பக்­கத்­தில் கண்டு ரசிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!