கல்வித் துறை ஊழியர்கள் மனநலம் பேண புதிய தளம்

தங்­க­ளின் மன­ந­ல­னைப் பாது­காக்க ஆசி­ரி­யர்­கள் உட்­பட கல்­வித் துறை ஊழி­யர்­க­ளுக்­குப் புதிய இணை­யத்­த­ளம் ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் மன­ந­ல­னைப் பாது­காக்­கும் வழி­கள், வேலை தொடர்­பி­லான கவ­லை­க­ளைக் கையாள்­வது, சோர்வை எதிர்­கொள்­வது, வேலைப்­ப­ளு­வைச் சமா­ளிப்­பது உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் கல்­வித் துறை ஊழி­யர்­கள் உத்­தி­க­ளை­யும் அறி­வு­ரை­யை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

'மைண்ட்­லைன் அட் வொர்க் ஃபார் எம்­ஓஇ' எனப்­படும் அத்­தளத்­தைக் கல்வி அமைச்­சும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உரு­மாற்­றத்­திற்­கான சுகா­தார அமைச்­சின் அலு­வ­ல­க­மும் இணைந்து உரு­வாக்­கி­உள்­ளன.

கல்­வித் துறை ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்­கு­வ­தோடு பள்­ளி­களில் ஒரு­வொ­ருக்­கொ­ரு­வர் உத­விக்­க­ரம் நீட்­டும் கலா­சா­ரத்தை உரு­வாக்க எடுக்­கப்­படும் முயற்­சி­களில் இது அடங்­கும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

பாலஸ்­டி­யர் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள கல்வி அமைச்சின் புதிய மர­பு­டைமை நிலை­யம் ஒன்­றின் திறப்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­போது அவர் பேசி­னார்.

நிகழ்ச்­சி­யில் தாம் ஆற்றிய தொடக்க உரையில் திரு சான் ஆசி­ரி­யர்­க­ளைக் கௌர­வித்­துப் பேசி­னார். குறிப்­பாக கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் கல்­வித் துறை ஊழி­யர்­கள் ஆற்­றிய பங்கை சமூ­கம் உயர்­வா­கப் பார்க்­கிறது என்று அவர் கூறி­னார்.

"நல்ல வேளை­யாக கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் சிங்­கப்­பூர் மிக மோச­மாக பாதிக்­கப்­ப­ட­வில்லை," என்­ப­தைத் திரு சான் சுட்­டி­னார்.

"கடமை உணர்­வு­ட­னும் பணி மீது அதிகப் பற்­றும் உள்ள ஆசி­ரி­யர்­கள் நம்­மி­டம் இருப்­பது அதற்­குக் கார­ணம். மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுத் தரு­வ­தில் தங்­கள் இலக்கை அடை­வது மட்­டு­மின்றி மோச­மான நெருக்­கடி காலத்­தி­லும் தொடர்ந்து புத்­தாக்க முயற்­சி­க­ளி­லும் அவர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்," என்­றும் அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!