எங்கேயும் எப்போதும் கற்க உதவும் கருவிகள் கட்டாயம்

அமைச்சர்: மக்கள் ஆயுள் முழுவதும் போட்டித்திறனுடன் திகழ்வதை அரசு உறுதிசெய்யும்

சிங்­கப்­பூ­ரர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் எந்த நேரத்­தி­லும் எங்­கும் பல­னுள்ள­வற்­றைக் கற்­றுக்­கொள்ள உத­வும் கரு­வி­கள் கிடைக்க வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வலி­யு­றுத்­திக் கூறியுள்ளார்.

நவீன கைப்­பே­சி­கள் போன்ற கரு­வி­களை அவர் எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார். பொரு­ளி­யலைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆற்றல்­மி­குந்த வெளி­நாட்­டி­னரை சிங்­கப்­பூர் கவர்ந்து ஈர்க்­கிறது.

அதே­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரர்­கள் தாங்­கள் வேலை பார்க்­கும் காலம் முழு­வ­தும் தொடர்ந்து போட்டித்­தி­ற­னு­டன் திகழ்­வதை உறு­திப்­படுத்த அர­சாங்­கம் செயல்­பட்டு வரு­கிறது. அப்­படி அர­சாங்கம் செயல்­படும் வழி­களில் இது­வும் ஒன்று என்று அமைச்­சர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

பெரி­ய­வர்­க­ளான சிங்­கப்­பூ­ரர்­கள் முயற்­சி­களை மேற்­கொண்­டால், அவர்­க­ளுக்கு வளங்­கள் கிடைக்கும் என்­பதை அர­சாங்­கம் உறு­திப்­ப­டுத்­தும் என்று கூறிய அமைச்­சர், அத்­தகைய சிங்­கப்­பூ­ரர்­களைப் பொறுத்­த­வரை மீண்­டும் பள்­ளிக்­கூ­டத்­திற்­குத் திரும்­பு­வது என்­பது சிர­ம­மாக இருக்­கும் என்­றார்.

பணப் பிரச்­சி­னை­கள், குடும்­பப் பொறுப்­பு­களை அவர்­கள் எதிர்­நோக்­கு­வார்­கள் என்­பதே இதற்­கான கார­ணம் என்றார் அவர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து போட்­டித்­தி­ற­னு­டன் திகழ்­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் முயற்சி­களை எந்­தெந்த வழி­களில் முடுக்கி­விட அர­சாங்­கம் கரு­து­கிறது என்பது பற்றி அடுத்த வர­வு­செ­ல­வுத் திட்­டம் வரைப்­பட்ட கால­கட்­டத்­தில் மேலும் பல அறி­விப்­பு­கள் வெளி­யா­கும். மேலும் பல முயற்­சிகளும் இடம்பெறும் என்றாரவர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து போட்­டித்­தி­ற­னு­டன் திகழ்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கம் அமல்­ப­டுத்­தும் உத்தி பற்­றி­யும் அவர் விளக்­கி­னார்.

மாண­வர்­களை, அவர்­க­ளின் முதல் 15 ஆண்டுக் காலத்­தில் பேணி உரு­வாக்­கு­வது, பள்­ளிக்­குப் பிறகு அடுத்த 50 ஆண்­டு­களில் மேலும் மேலும் தொடர்ந்து அவர்­களை வளர்ச்­சி­ய­டைய உத­வு­வ­து­தான் அந்த உத்தி என்­றா­ர­வர்.

இத­னி­டையே, பள்ளி மாண­வர்­க­ளுக்கு நன்மை கிடைக்­கும் வகை­யில் அந்­தப் பள்­ளி­யின் முன்னாள் மாண­வர்­கள் மேலும் பல­வற்­றைச் செய்ய முடி­யும் என்றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

வாழ்க்­கைத்தொழில் உரை நிகழ்ச்­சி­களை அவர்­கள் நடத்­த­லாம். மன­நல ஆத­ரவு வழங்­க­லாம் என்று திரு சான் கூறி­னார்.

அர­சாங்­கம் சமூ­கத்­து­டன் சேர்ந்து மேலும் பல­வற்றை இந்த வழி­யில் செய்ய விரும்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

பிர­ப­ல­மான பல பள்­ளி­கள் மிக வலு­வான முன்­னாள் மாண­வர் கட்­ட­மைப்­பைப் பெற்று இருக்­கின்­றன. அத்­த­கைய கட்­ட­மைப்­பு­கள் ஆசி­ரி­யர்­க­ளுக்கு உறு­து­ணை­யா­கத் திக­ழக்கூடிய ஆற்­ற­லைக் கொண்டு இருக்­கின்­றன என்று அந்­தப் பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!