இளையர்களிடம் தமிழ்மொழியை கொண்டுசேர்க்கும் தமிழ் இளையர் விழா

மோன­லிசா

இளை­யர்­க­ளி­டம் தமிழ்­மொழி புழக்­கத்­தை­ அதி­க­ரிக்­கும் நோக்­கில், தமிழ் இளை­யர் விழா­வுக்கு வளர்தமிழ் இயக்­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது. 'புத்­தாக்­கம்' என்­னும் கருப்­பொ­ரு­ளைக் கொண்டு நடை­பெ­றும் இவ்­விழா நாளை செப்­டம்­பர் 3ஆம் தேதி­மு­தல் 11ஆம் தேதி­வரை நடை­பெற உள்­ளது.

தமிழ்­மொ­ழியை நேசிக்­க­வும் பேச­வும் வீட்­டில் அதன் பயன்­பாட்டை அதி­க­ரிக்­க­வும் வலி­யு­றுத்­தும் இவ்­வாண்­டின் விழா­வில் 12 நிகழ்­வு­களை 12 பங்­கு­தா­ரர்­க­ளு­டன் இணைந்து ஏற்­பாடு செய்­யப்பட்டு உள்ளனர். 35 வய­திற்கு கீழுள்ள மாண­வர் மற்­றும் இளை­யர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் இவ்­வி­ழா­வில் நிகழ்­வு­கள் நேரி­லும் ஸூம், ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் ஆகிய மெய்­நி­கர் தளங்­கள் வாயி­லா­க­வும் நடை­பெ­றும்.

வகுப்­ப­றைக்கு அப்­பாற்­பட்டு தமிழ்­மொ­ழி­யின் பயன்­பாட்டை அதி­க­ரிக்க இளை­யர்­கள் புத்­தாக்க வழி­களை ஆராய ஊக்­கு­விக்­கும் வகை­யில், இவ்­வி­ழா­வில் இலக்­கிய நிகழ்­வு­கள், கலைப் போட்­டி­கள், பர­த­நாட்­டி­யம்­வழி சிலப்­ப­தி­கா­ரத்தை விளக்­கும் நிகழ்வு, வானொலி நாடகப் பயி­ல­ரங்கு உள்­ளிட்ட மொழி­சார் பயி­ல­ரங்­கு­கள் போன்ற பல நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வி­ழா­வின் ஓர் அங்­க­மாக 'கதைப்­போமா' என்­னும் நிகழ்­வில் தமிழ் இளை­யர்­கள் பற்­றிய பல்­வேறு தலைப்­பு­களில் சிறப்பு விருந்­தி­னர்­கள் உரை­யாற்­று­வர். மேலும், பட்­டப்­ப­டிப்­புக்கு பின்­னர் தமிழ்­மொழி பயன்­பாட்­டின் நிலை குறித்­தும் இளை­யர்­கள் கலைத்­து­றை­யைத் தொழி­லாக தேர்ந்­தெ­டுப்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­படும்.

"புத்­தாக்­கம்' என்­பது தொழில்­நுட்­பம் சார்ந்­த­தாக மட்­டு­மல்­லா­மல் வாழ்­வின் பன்­மு­கங்­க­ளை­யும் மக்­களின் மன­நி­லை­யை­யும் மொழி­யின் ஆளு­மையை உண­ரும் பல அம்­சங்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய பரந்த கருப்­பொ­ரு­ளாக அமை­யும். சிங்­கப்­பூ­ரில் இளை­யர்­கள் மத்­தி­யில் தமிழ்­மொ­ழியை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் 2021ல் இம்­மு­யற்சி தொடங்­கப்­பட்­டது. எங்­கள் இயக்­கத்­தில் உள்ள இளம் உறுப்­பி­னர்­களின் பார்­வை­யை அறிந்து இளை­யர்­க­ளின் தேவை­க­ளை­யும் ஈடு­பாடு­க­ளை­யும் கருத்­தில்­கொண்டு இந்­நி­கழ்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன," என்று வளர்த்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் மனோ­க­ரன் கூறி­னார்.

"பள்ளிக் காலத்­திற்­குப் பிறகு தமிழ்­மொ­ழி­யின் பயன்­பாடு இளை­யர்­கள் மத்­தி­யில் வெகு­வாக குறைந்து விடு­கிறது. தமிழ் மொழி­யின்­பால் இளை­யர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்து ஆர்­வத்­தைத் தூண்­டும் வித­மாக பல்­வேறு இளை­யர் அமைப்­பு­க­ளு­டன் இணைந்து இந்­நி­கழ்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன," என்று வளர்த்­த­மிழ் இயக்­கத்­தின் துணைச் செய­லா­ளர் இர்ஷாத் முஹம்­மது கூறி­னார்.

வளர்த்­த­மிழ் இயக்­கத்­தின் உறுப்­பி­ன­ரான அஷ்­வினி செல்­வ­ராஜ், "இளை­யர்­கள் தங்­க­ளு­டைய திறன்­களை வளர்த்­துக்­கொள்­ளும் நோக்­கில் பல்­வேறு பயி­ல­ரங்­கு­களும் பட்­ட­றை­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இவ்­வி­ழா­வில் தமிழ்­மொழி பற்­றிய தொன்­மை­யான கருத்­து­களை இளை­யர்­க­ளி­ட­மும் மாண­வர்­க­ளி­ட­மும் புத்­தாக்க முறை­யில் கொண்டு செல்­கி­றோம். தமிழில் கேலிச்­சித்­தி­ரம், வரை தமிழ் போன்ற பல திறன்­களை வளர்க்கும் அங்­கங்­கள் இவ்­வி­ழா­வில் உள்ளன," என்று கூறி­னார்.

சிங்­கைத் தமிழ்ச் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் நாளை மறு­நாள் செப்­டம்­பர் 4ஆம் தேதி மதி­யம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 'படைப்­பா­ள­ராக ஒரு நாள்' என்­னும் நிகழ்வு நடை­பெற உள்­ளது. இந்­நி­கழ்­வில் பங்­கேற்க tinyurl.com/ston2022 என்ற இணை­யத்­தள முக­வ­ரி­யில் முன்­ப­திவு செய்­ய­லாம்.

இந்­நி­கழ்வு­கள் குறித்த கூடு­தல் தக­வல்­களை வளர்த­மிழ் இயக்­கத்­தின் இணை­யத்­த­ளத்­தி­லும் www.tamil.org.sg அல்­லது ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தி­லும் காண­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!