மாணவர்களின் வெற்றிப் பயணத்திற்கு அங்கீகாரம்

திவ்­யா­தாக் ஷாய்னி

சிங்­கப்­பூ­ரின் நான்கு சுய உதவி அமைப்­பு­களும் இணைந்து ஈராண்­டுக்­குப் பிறகு மாண­வர்­க­ளின் சாத­னை­க­ளைப் பாராட்டி, நேரடி விருதளிப்பு விழா ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

கல்­வி­யில் சிறப்­புத் தேர்ச்சி பெற்ற 786 மாண­வர்­க­ளுக்கு சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், மெண்­டாக்கி, யூரே­ஷி­யர் சங்­கம், சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம் ஆகி­யவை ஒன்­றி­ணைந்து விருது வழங்­கின.

நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் கடந்த மாதம் 20ஆம் தேதி­யன்று ‘19வது கூட்டு-துணைப்­பாட விருது’ நிகழ்ச்­சி­யில், பிஎஸ்­எல்இ, வழக்­க­நிலை, சாதா­ர­ண­நிலைத் தேர்­வு­களில் சிறப்­புத் தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளுக்கு $100 முதல் $150 பெறு­மா­ன­முள்ள புத்­த­கப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டன.

SPH Brightcove Video

படிப்­பில் முன்­னேற்­றம் கண்ட மாணவி தஸ்­பிஹா இப்­ரா­ஹிம், 17, $100 மதிப்­புள்ள புத்­த­கப் பற்­றுச்­சீட்­டைப் பெற்­றார். இவர் ஜிசிஇ வழக்­க­நி­லைத் தேர்­வில் அடைந்த சிறப்­புத் தேர்ச்­சிக்கு சிண்­டா­வின் ‘ஸ்டெப்’ துணைப்­பாட வகுப்­பு­கள் கைகொ­டுத்­த­தா­கக் கூறி­னார்.

தற்­போது தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் தாதி­மைத் துறை­யில் பயின்­று­வ­ரு­கி­றார் தஸ்­பிஹா. தன் தந்­தை­யின் வரு­மா­னத்தை மட்­டும் தன் குடும்­பம் நம்­பி­

யி­ருப்­ப­தால் தான் படிப்­பில் சிறந்து விளங்கி, வேலைக்­குச் சென்று தந்­தைக்கு உதவ வேண்­டும் என்­பதை லட்­சி­ய­மா­கக் கொண்­டுள்­ளார் இவர்.

கைப்­பந்து விளை­யாட்­டில் ஆர்­வங்­கொண்ட ஸ்ரீராம் ரோஜின், 17, ஜிசிஇ சாதா­ரண நிலைத் தேர்­வுப் பிரி­வில் சிறந்த மாண­வ­ருக்­கான விரு­தைப் பெற்­றார்.

கைப்­பந்து விளை­யாட்­டுக்­கும் படிப்­பிற்­கும் சரி­வர நேரம் ஒதுக்க முடி­யா­த­தால் படிப்­பில் சற்­றுப் பின்­தங்­கி­யி­ருந்­தார்.

அப்­போது தன்­னு­டைய ஸ்டெப் துணைப்­பாட ஆசி­ரி­யர்­கள் தனக்­குக் கைகொ­டுத்­தா­கக் கூறுகிறார். அவர்­க­ளின் ஆத­ர­வில் தன் நேரத்­தைச் சரி­யாக வகுத்­துக்­கொண்டு விளை­யாட்­டி­லும் படிப்­பி­லும் சிறந்து விளங்க முடிந்­த­தாக சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் முத­லா­மாண்டு மாண­வ­ராக பயி­லும் ஸ்ரீராம் குறிப்­பிட்­டார்.

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வுப் பிரி­வில், தலை­சி­றந்த மாண­வர் விரு­தினை இஷா மனோஜ், 13, பெற்­றார். இது தனக்­குப் பெரும் மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் மேலும் பல சாத­னை­களை அவர் நிகழ்த்த ஊக்­கு­விப்­ப­தா­க­வும் கூறி­னார்.

இரண்­டாம் கல்வி அமைச்­சர் டாக்­டர் முஹம்­மது மாலிக்கி ஒஸ்­மான் நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு மாண­வர்­க­ளுக்கு விருது வழங்­கி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் கடந்த ஈராண்­டுகாளக மாண­வர்­க­ளின் சாத­னை­களை ஆர­வா­ரத்­து­டன் கொண்­டாட முடி­ய­வில்லை என்று சிண்­டா­வின் தலைமை அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறி­னார்.

“மாண­வர்­க­ளின் சாத­னை­

க­ளைக் கொண்­டா­டு­வது இது­போன்ற விரு­து­க­ளின் முக்­கிய நோக்­க­மாக இருந்­தா­லும் அடுத்­த­டுத்த நிலை­களில் இருக்­கக்­கூ­டிய மாண­வர்­க­ளின் வெற்­றிக்கு இந்­தக் கொண்­டாட்­டம்­தான் ஓர் ஆரம்­பப்­புள்­ளி­யாக இருக்­கப் போகிறது,” என்று திரு அன்­ப­ரசு தெரி­வித்­தார். படங்கள்: சிண்டா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!