உணவுக்கடை நடத்த இளையருக்கு ஊக்குவிப்பு

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க­மும் இளம் உண­வுக்­க­டைத் தொழில்­மு­னை­வோர் பயிற்­சித் திட்­டத்­தின்­கீழ் செயல்­படும் 'ஃபுட் ரிபப்­ளிக்' உண­வங்­கா­டி­யும் இணைந்து உண­வுக்­கடை நடத்த விரும்­பும் இளை­யர்­களை ஊக்­கு­விக்­கும் திட்­டத்­தைத் தொடங்­கி­யுள்­ளன.

ஆர்ச்­சர்ட் வட்­டா­ரத்­தில் அமைந்­தி­ருக்­கும் 'ஷா சென்­டர்' வளா­கத்­தில் உள்­ளது 'ஃபுட் ரிபப்­ளிக்' உண­வங்­காடி.

இதில் மேற்­கத்­திய உணவு வகை­களை விற்­பனை செய்­யும் கடையை நடத்த 'ஐடிஇ காலேஜ் வெஸ்ட்' மாண­வர்­கள் ஏழு பேருக்கு (படம்) வாய்ப்பு கிடைத்து உள்­ளது.

நவம்­பர் மாதம் இவர்­க­ளின் கடை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை­யைத் தொடங்­கும்.

இந்த மாண­வர்­கள் நடத்­தும் உண­வுக்­க­டைக்­கான வாட­கை­யைச் செலுத்­து­வ­தற்கு, இளம் உண­வுக்­க­டைத் தொழில்­மு­னை­வோர் பயிற்­சித் திட்­டத்­தின்­கீழ் மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

இந்­தக் கடை­யில் விற்­கப்­படும் உணவு வகை­கள் 15 வெள்­ளிக்­குக் கீழ் இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழக ஆசி­ரி­யர்­கள், மேற்­கத்­திய உணவு வகை­களில், ஆசி­யப் பாரம்­ப­ரி­யம், குறிப்­பாக சிங்­கப்­பூர் உண­வுப் பாரம்­ப­ரி­யத்­தைப் பின்­பற்­றும் செய்­மு­றை­யை­ப் புகுத்த மாண­வர்­க­ளுக்கு உத­வு­வார்­கள்.

சமை­யற்­கலை வகுப்­பில் பயி­லும் எஞ்­சிய 33 மாண­வர்­கள், பல்­வேறு உண­வ­கங்­கள், ஹோட்­டல்­கள் ஆகி­ய­வற்­றில் தொழில்­மு­றைப் பயிற்சி பெறு­வர் என்று கூறப்­பட்­டது.

ஆறு மாத காலம் நீடிக்­கும் இந்­தத் தொழில்­மு­றைப் பயிற்­சி­யின்­போது மாண­வர்­கள் வேலைச்­சூ­ழ­லில் தங்­க­ளது புத்­தாக்­கச் சிந்­த­னை­க­ளை­யும் திறன்­க­ளை­யும் சோதித்­துப் பார்ப்­ப­தற்­கான வாய்ப்பு கிடைக்­கும்.

இந்த அனு­ப­வங்­களை மாண­வர்­கள் தங்­கள் கல்வி சார்ந்த ஒப்­ப­டைப்­புத் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்­பது இந்தத் திட்டத்தின் சிறப்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!