கல்வி, வாழ்நாள் கல்வி குறித்து சிங்கப்பூரர்களிடம் கருத்துத் திரட்டு

'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' கருத்­துத் திரட்டு நட­வ­டிக்­கை­யின் ஓர் அங்­க­மாக, கல்வி, வாழ்­நாள் கல்வி ஆகிய அம்­சங்­கள் குறித்­துக் கருத்­து­ரைக்­கும்­படி சிங்­கப்­பூ­ரர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

இதன் தொடர்­பில், 'எக்­யுப் பில்­லர்' எனும் சிறப்பு துணை இணை­யத்­த­ளத்­தைக் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்­றுத் தொடங்கி வைத்­தார்.

ரிபப்­ளிக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியின் 70க்கும் மேற்­பட்ட மாண­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

இதில் பங்­கேற்ற மாண­வர்­கள், விருப்­பத்தை அடை­யக் கூடு­தல் வாய்ப்புகள், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கம், வெற்­றிக்­கான நவீன வரை­யறை போன்ற அம்­சங்­க­ளைத் தங்­கள் விருப்­பங்­க­ளாக இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பகிர்ந்து­கொண்­ட­னர்.

இது மற்­ற­வர்­க­ளுக்­குக் கருத்­து­ரைப்­ப­தோடு கடமை முடிந்­தது என்­றில்­லா­மல், அனை­வ­ரும் இணைந்து எதைச் சாதிக்க விரும்­பு­கி­றோம் என்­ப­தைத் தொடர்ந்து பதி­வு­செய்­யும் தள­மாக விளங்­க­வேண்­டும் என்று அமைச்­சர் சான் தமது உரை­யில் வலி­யு­றுத்­தி­னார்.

ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் இதற்கு எவ்­வாறு பங்­க­ளிக்­கி­றார் என்­பது முக்­கி­யம் என்­றார் திரு சான்.

முன்­னே­றும் சிங்­கப்­பூர் கருத்­துத் திரட்டு நட­வ­டிக்­கையை, சென்ற ஜூன் மாதம் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்­தார். சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே, சமூக நன்­மைக்­காக ஒத்­து­ழைக்­கும் உணர்­வைப் புதுப்­பிப்­பது இதன் இலக்கு.

இதன் 'எக்­யுப்' பிரி­விற்கு அமைச்­சர் சான், தற்­காப்­புத் துணை­ய­மைச்­சர் ஸாக்கி முக­மது, தேசிய வளர்ச்சி மூத்த துணை அ­மைச்­சர் டான் கியட் ஹோ ஆகி­யோர் தலைமை தாங்­கு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!