சிங்கப்பூர்: போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பது அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பானதல்ல

சட்டபூர்வமாக, சட்டத்துறை பாதுகாப்புகளுடன் மரண தண்டனை விதிக்கப்படும்போது அதற்கு எதிராக எந்த ஓர் ஒருமித்த அனைத்துலக கருத்தும் இல்லை என்று சட்ட அமைச்சும் உள்துறை அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

“ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் குற்றவியல் நீதிக் கட்டமைப்பை நிர்ணயிக்கும் இறையாண்மை உரிமை உள்ளது. அது அந்நாட்டின் சூழலுக்கும் அனைத்துலக சட்ட கோட்பாடுகளுக்கும் உள்பட்டதாகவும் இருக்கும். அந்த உரிமை மதிக்கப்படவேண்டும்,” என்று அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மரணதண்டனைக்கு எதிராக சிங்கப்பூர் இடைக்கால தடை பிறப்பிக்கவேண்டும் என்று இரு அனைத்துலக லாபநோக்கற்ற அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைச்சுகளின் கூட்டறிக்கை பதிலளித்தது.

அந்த இரு அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கை பல தவறான கருத்துகளையும் தவறுகளையும் கொண்டுள்ளது என்றும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிவதற்கும் முன்பாக உண்மைகளை அலசி ஆராயவும் அழைப்பு விடுத்தது.

இன்டர்நே‌‌ஷனல் கமி‌‌ஷன் ஆஃப் ஜூரிஸ்ட் கடந்த ஆகஸ்ட் 9 அன்று தற்போது நிலுவையில் உள்ள மரண தண்டனைகளை நிறுத்திவைக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தது.

ஆகஸ்ட் 11 அன்று மனித உரிமைக்கான அனைத்துலக சட்டக் கழகமும் இதே போன்று மரண தண்டனைக்கு எதிராக இடைக்காலத் தடையைக் கோரியது.

போதைப் பொருள்களைக் கடத்தும் குற்றம் மரண தண்டனை விதிப்பதற்கான அனைத்துலக சட்டத்துக்கு உட்படவில்லை என்று மேற்கண்ட இரு லாபநோக்கற்ற அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.

ஆனால் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பானது அல்ல என்றும் பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் சிங்கப்பூரில் தங்களை நிலைநாட்டமுடியாமல் இருப்பதற்கு மரண தண்டனை உதவி உள்ளது என்றும் அமைச்சுகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!