புதிய மைல்கல்லை எட்டிய சிங்கப்பூரின் பசுமைப் பயணம்; பொங்கோல் நீர்வழிப் பூங்காவில் நடப்பட்ட 50 மரங்கள்

சிங்­கப்­பூ­ரின் பசு­மைப் பய­ணம் நேற்று புதிய மைல்­கல்லை எட்­டி­யது. 1963ஆம் ஆண்­டில் முதல் மரம் நடும் இயக்­கத்தை சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் லீ குவான் இயூ தொடங்­கி­வைத்து 59 ஆண்­டு­கள் கழித்து, பொங்­கோல் நீர்­வ­ழிப் பூங்­கா­வில் நேற்று 50 மரங்­கள் நடப்­பட்­டன. தனது அமைச்­சின் 50வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசி­னார் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ.

பொரு­ளி­யல் வளர்ச்சி மற்­றும் சமு­தாய உள்­ள­டக்­கத்­துக்­கும் சுற்­றுப்­பு­றப் பாது­காப்­புக்­கும் இடையே சம­நி­லையை ஏற்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரின் முன்­னோ­டித் தலை­வர்­கள் முனைந்­த­தாக திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

நீடித்த நிலைத்­தன்மை குறித்த விவ­கா­ரங்­கள் உல­க­ளா­விய நிலை­யில் அக்­க­றைக்­கு­ரிய விவ­கா­ர­மா­கும் முன்பே சிங்­கப்­பூ­ரில் அதற்­கான பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

"சுற்­றுப்­புற மாசு, சுற்­றுப்­புற சுகா­தா­ரம் போன்ற விவ­கா­ரங்­களை எதிர்­கொள்ள சுற்­றுப்­புற அமைச்சை உரு­வாக்­கிய முதல் சில நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று," என்று அமைச்­சர் ஃபூ தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் சுற்­றுப்­புற அமைச்சு 2020ஆம் ஆண்­டில் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சா­கப் பெயர் மாற்­றம் கண்­டது. நீடித்த நிலைத்­தன்மை, பரு­வ­நிலை மாற்­றம் குறித்து அர­சாங்­கம் கொண்­டுள்ள கடப்­பாட்டை வலி­யு­றுத்­தும் வகை­யில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் ஆற்றை தூர்­வா­ரி­யது முதல் தூய்­மை­யான, பசு­மை­யான சிங்­கப்­பூர் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது வரை சிங்­கப்­பூ­ரின் பசு­மைத் திட்ட முயற்­சி­கள் சிங்­கப்­பூ­ரின் வாழ்க்­கைத் தரத்­தைப் பெரி­தும் மேம்­ப­டுத்­தி­யுள்­ளன.

"நியூ­வாட்­டரை நாம் சாத்­தி­ய­மாக்­கி­யுள்­ளோம். சுத்­த­மான தண்­ணீர் தொடர்ந்து கிடைப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் நீர் உள்­கட்­ட­மைப்­பில் முத­லீடு செய்­தோம்," என்று திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரைப் பசு­மைப்­ப­டுத்­தும் பணி­க­ளு­டன் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆற்­ற­லும் மீள்­தி­ற­னும் தொட­ரும் என்­றார் அவர்.

நேற்று நடை­பெற்ற மரம் நடும் விழா­வில் 100 அர­சாங்க ஊழி­யர்­களும் அரசு அலு­வ­லக அதி­கா­ரி­களும் 50 மரங்­களை நட்­ட­னர்.

நடப்­பட்ட ஒவ்­வொரு மர­மும் ஒன்­மில்­லி­யன் ட்ரீஸ் இயக்­கத்­துக்­குப் பங்­க­ளிப்­ப­தாக அமைச்சு தெரி­வித்­தது.

2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரெங்­கும் ஒரு மில்­லி­யன் மரங்­களை நட்டு நாட்டை 'இயற்­கை­யில் நக­ரம்' என உரு­மாற்ற இயக்­கம் இலக்கு கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!