வெளிப்புறக் கல்வியை மேம்படுத்த மன்றம்

மாண­வர்­க­ளுக்­கு உற்சாகத்தை அளிக்கும் வெளிப்­புற சாக­சக் கல்­வியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக புதிய மன்­றம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­தார்.

சாக­சக் கல்­வி­யின் செயல்­பாடு, பாது­காப்பு உள்­ளிட்ட அம்­சங்­களில் தேசிய தர­நி­லையை நிர்­ண­யிப்­பது மன்­றத்­தின் முக்­கிய நோக்­க­மாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரிபப்­ளிக் பல­துறைத் தொழில்­கல்­லூ­ரியில் நேற்று நடை­பெற்ற வெளிப்­புறக் கல்வி மாநாட்­டில் கலந்­து­கொண்டு எட்­வின் டோங் பேசினார்.

வெளிப்­புற நட­வ­டிக்­கைக­ளுக்கு தேவை அதி­க­ரித்­துள்­ள­தால் அதற்கு ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் மன்­றம் தொடங்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

மன்­றம், 18 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டி­ருக்­கும். ஆண்­டுக்கு சுமார் 218,000 மாண­வர்­கள் வெளிப்­புற சாக­சக் கல்­வி­யில் பங்­கேற்று வரு­கின்­ற­னர்.

கல்வி அமைச்சு, சிங்­கப்­பூர் வெளிப்­புற சாகச நட­வ­டிக்கை நிலையம் மற்­றும் தனி­யார் நிறு­வ­னங்­கள் ஆகி­யவை கூட்டாக இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­ வ­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் தேசிய இளை­யர் மன்­றம் தெரி­வித்­தது.

பள்­ளி­க­ளுக்­கான வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளை­யும் மலை­யே­று­தல், பட­கோட்­டு­தல் போன்ற சாசக நட­வ­டிக்­கை­க­ளை­யும் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் வர்த்­த­க­ரீ­தி­யில் நடத்தி வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் வெளிப்­புற சாச­கக் கல்­வி­யின் தேசிய தர­நி­லை­யை­யும் தொழில்­நுட்ப அம்­சங்­க­ளை­யும் மன்­றம் மேற்­பார்­வை­யி­டும்.

வெளிப்­புற நட­வ­டிக்­கை­களை வடி­வ­மைத்து நடத்­து­வது, வச­தி­களை நிறு­வு­வது, பரா­ம­ரிப்­பது, உள்­கட்­ட­மைப்பு, அதற்குரிய சாத­னங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வது போன்­ற­வற்­றுக்­கும் அது வழி­காட்­டும்.

உள்­ளூர் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளுக்­குத் தேவை­யான முக்­கிய திறன்­கள், தொழில் சான்­றி­தழ்­க­ளை­யும் மன்­றம் பரிந்­து­ரைக்­கும்.

இதன்­மூ­லம் பொது­மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யான, நிலை­யான, பாது­காப்­பான வெளிப்­புற நட­வ­டிக்­கை­கள் உறுதி செய்­யப்­படுகிறது.

"வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தால் மாண­வர்­கள் நன்கு வளர முடி­யும். சவால்­க­ளைச் சந்­திக்­கும் திறன்­க­ளை­யும் அவர்­கள் பெறு­வர். குழுப்­ப­ணி­யில் ஈடு­பட்டு நம்­பிக்­கை­யோடு வாழ்க்­கையை அவர்கள் எதிர்­நோக்­கு­வார்­கள்," என்று மன்­றத்­தின் இணைத் தலை­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் டான் லாய் யோங் தெரி­வித்­தார்.

வெளிப்­புற நட­வ­டிக்கை பொருத்­த­மானதாக இருக்­க­வும் பாது­காப்­பு­டன் அனை­வ­ரும் பங்­கேற்­க­வும் பயிற்­றுவிப்பாளர்களுக்கு அர்த்­த­முள்ள வாழ்க்­கைத் தொழிலை வழங்­க­வும் வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் தொழில்­மு­னை­வர்­களை உரு­வாக்­க­வும் மன்­றம் விரும்­பு­கிறது என்று அவர் மேலும் தெரி­வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!