தாய்க்­குப் பெருமை சேர்த்த மகன்

இரண்­டாம் முறை­யாக சிண்டா உன்­னத விருதை கெஜேந்­தி­ரன் பெற்­றுள்­ளார். இவர் ஒற்­றைப் பெற்­றோ­ரான தன் தாயின் அர

­வ­ணைப்­பில் மிகுந்த பொரு­ளா­தார சிர­மங்­க­ளுக்­கி­டையே வளர்ந்­த­வர். தனக்­காக தாயார் அனு­ப­வித்த இன்­னல்­க­ளைப் பார்த்து வளர்ந்த இவர், அந்­தத் தாயின் துய­ரைத் துடைப்­ப­தற்­கா­கவே கல்­வி­யில் தன் மொத்த கவ­னத்­தை­யும் செலுத்­தி­னார்.

உயர்­நி­லைப்­பள்ளி காலத்­தில் சாதா­ரண (ஏட்­டுக்­கல்வி) பிரி­வில் பயின்ற பிறகு பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தேர்ச்சி பெற்­றார். இத­னால் இவ­ரு­டைய தேசிய சேவை­யும் பல்­க­லைக்­க­ழ­கப் படிப்­பும் தள்­ளிப்­போ­யின. ஆயி­னும் அதிக முதிர்ச்­சி­யு­ட­னும் பக்கு­ வத்­து­ட­னும் வாழ்வை அணுக இந்­நீண்ட பய­ணம் உத­வி­ய­தாக கெஜேந்­தி­ரன் கூறி­னார்.

இவ்­வாண்­டின் பட்­டக்­கல்­விப் பிரி­வில் விருது வென்­றி­ருக்­கும் இவர், 2016ஆம் ஆண்­டு பட்­ட­யக் கல்­விப் பிரி­வின்­கீழ் வழங்­கப்­பட்ட சிண்டா உன்­னத விரு­தி­னை­யும் பெற்­றார். தன்­னு­டைய இளங்

­க­லைப் பட்­டப் படிப்­பிற்­காக 'கேபி­எம்ஜி சிங்­கப்­பூர்' எனும் தணிக்கை, வரி மற்­றும் ஆலோ­சனை சேவை வழங்­கும் நிறு­வ­னத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­றார். இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் தன் தாயின் சுமையை ஓர­ளவு குறைத்­தது என்று நினை­வு­கூர்ந்த இவர், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கணக்­கி­யல் மற்­றும் வணிக நிர்­வா­கத்­தில் இரட்­டைப் பட்­டத்­து­டன் உன்­ன­தத் தேர்ச்சி பெற்­றார்.

தற்­ச­ம­யம் அதே நிறு­வ­னத்­தில் உத்தி ஆலோ­சக பட்­ட­தாரி ஊழி­ய­ராகப் பணி­பு­ரி­கி­றார். கல்­வி­யின் சிறப்­பை சிறுவய­தி­லேயே உணர்ந்த இவர், முது­க­லைப் பட்­டம் மேற்­கொள்­ளும் எண்­ணம் இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!