$74 மி. வழங்கப்பட்டுள்ளது; நீட்டிக்கும் திட்டம் இல்லை

மொத்­தம் $74 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள கொவிட்-19 மீட்பு மானி­யம்

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் அது தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 300,000 பேருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்தை இவ்­வாண்டு டிசம்­பர் மாதத்­துக்­குப் பிறகு

நீட்­டிக்கத் திட்­டம் ஏது­மில்லை என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அடுத்த சில மாதங்­களில்

பொரு­ளி­யல் நிலைமை தொடர்ந்து உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் என்று அது கூறி­யது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வேலை இழந்த அல்­லது கட்­டாய, சம்­ப­ள­மில்லா விடுப்பு எடுக்­கும் நிலைக்­குத் தள்­ளப்­பட்ட குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு கொவிட்-19 மீட்பு மானி­யம் மூலம் தற்­கா­லிக நிதி ஆத­ரவு வழங்­கப்­பட்­டது.

மானி­யத்­துக்கு விண்­ணப்­பம் செய்­வ­தற்­கான இறுதி நாள் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து இவ்­வாண்டு டிசம்­பர் மாதம் வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மானி­யம் கிடைக்க தகுதி உடை­ய­வர்­கள் பெறக்­கூ­டிய தொகை இரண்­டி­லி­ருந்து மூன்று மடங்­காக உயர்த்­தப்­பட்­டன.

கிட்­டத்­தட்ட 1,135 பேர் இன்­ன­மும் இம்­மா­னி­யம் மூலம் நிதி­யு­தவி பெற்று வரு­கின்­ற­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி ரோஸ், கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொவிட்-19 மீட்பு மானி­யத்தை சில முறை பெற்­று­விட்­டார்.

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­குத் துணைப் பாட வகுப்­பு­கள் நடத்­து­வ­தன் மூலம் கிடைக்­கும் அவ­ரது வரு­மா­னம் இவ்­வாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை பாதி­யா­கக் குறைந்து விட்­ட­தால், இவ்­வாண்டு ஜூலை முதல் இம்­மா­தம் வரை அவ­ருக்கு மாதம் $460 கொவிட்-19 மீட்பு மானி­ய­மாக வழங்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் டிசம்­பர் மாதம் வரை அவ­ருக்கு மாதம் $260 மானி­ய­மா­கக் கிடைத்­தது. கடந்த ஆண்டு ஜூனில் தற்­கா­லிக கொவிட்-19 மீட்பு மானி­ய­மாக அவ­ருக்கு $500 கிடைத்­தது.

தமது கண­வர், மக­ளு­டன் நான்­கறை வீட்­டில் வசிக்­கும் அந்த 62 வயது மாது, கொவிட்-19 பெருந்­தொற்­றால் கடும் நிதிப் பிரச்­சி­னையை எதிர்­நோக்­கி­னார்.

பெருந்­தொற்று காலத்­துக்கு முன் துணைப் பாட வகுப்­பு­கள் நிலை­யம் மூலம் அந்த மாதுக்கு மாதம் $2,000லிருந்து $3,000 வரை வரு­மா­னம் கிடைத்து வந்­தது.

பெருந்­தொற்­றால் தனது வர்த்­த­கம் பாதிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து அவ­ரது துணைப் பாட வகுப்­பு­களில் பதி­யும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­தது. அத­னால் அவர் மாதம் சில நூறு வெள்­ளியை மட்­டுமே ஈட்ட முடிந்­தது.

பெற்­றோர்­களில் வெகு சிலரே தங்­கள் பிள்­ளை­களை இணை­யம் வழி துணைப்பாட வகுப்­பு­களில் சேர்த்­து­விட தயங்­கி­னர் என்­றும் சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்­து­லக மாண­வர்­கள் இங்கு துணைப் பாட ஆஇ­ச­ரி­யர்­க­ளி­லன் சேவையை நாடு­வ­தில்லை என்­றும் அந்த மாது பகிர்ந்­து­கொண்­டார்.

தமது 73 வயது கண­வர், வயது முதிர்வு கார­ண­மாக மீண்­டும் வேலை­வாய்ப்பு பெற சிர­மப்­பட்­டார் என்­றும் அதன் கார­ண­மாக அவர் கிராப் வாகன ஓட்­டு­ந­ராக வேலை செய்ய வேண்­டி­யி­ருந்­தது என்­றும் திரு­வாட்டி ரோஸ் கூறி­னார்.

பெருந்­தொற்று காலத்­தில் கண­வர் கணினி மென்­பொ­ருள் பொறி­யா­ளர் வேலை இழந்­தார்.

மானி­யம் மூலம் கிடைக்­கும் பணத்­தைக்கொண்டு தமது துணைப் பாட வகுப்­பு­கள் பற்றி விளம்­ப­ரப்­ப­டுத்தி வரும் அந்த மாது அதன் மூலம் மாண­வர்­கள் கிடைத்து தனது வர்த்­த­கத்­துக்கு மீண்­டும் உயிர்­கொ­டுக்க நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றார்.

கொவிட்-19 மீட்பு மானி­யம் நீட்­டிக்­கப்­ப­டு­வது குறித்து இன்­னும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்று அறிந்து கவ­லை­யு­றும் திரு­வாட்டி ரோஸ், அரசாங்கத்தின் இதர திட்டங்கள் வழி உதவி பெற காத்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!