இவ்வாரம் பெரிய அளவிலான மாநாடுகள் இடம்பெறுகின்றன

எஃப்1 கார் பந்தய வாரயிறுதியை முன்னிட்டு ஏராளமான பேராளர்கள் வருகை

கொவிட்-19க்கு முந்­தைய நிலைக்கு சிங்­கப்­பூர் திரும்­பும் வேளை­யில், நூற்­றுக்­க­ணக்­கான தலைமை நிர்­வாக அதி­கா­ரி­கள், மின்­னி­லக்க நாணய முத­லீட்­டா­ளர்­கள், போலி­வுட் நடிகை ஆலியா பாட் உள்­ளிட்­டோர் இந்த வாரம் சிங்­கப்­பூர் வர­வுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் கிராண்ட் பிரீ எஃப்1 கார் பந்­த­யம் இந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை முதல் ஞாயிற்­று­கி­ழமை வரை நடை­பெ­று­கிறது. அதை முன்­னிட்டு பெரிய அள­வி­லான பல்­வேறு சந்­திப்­பு­கள், ஊக்­கு­விப்­பு­ நிகழ்ச்சிகள், மாநா­டு­கள், கண்­காட்சி­கள் நடை­பெ­ற­வி­ருக்­கின்­றன.

அக்­டோ­பர் 2ஆம் தேதி சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டத்­தில் நடை­பெ­றும் 'டைம்100' தலை­மைத்­து­வக் கருத்­த­ரங்­கும் அவற்­றில் அடங்­கும்.

அதைத் தொடர்ந்து, 'டைம்100 இம்­பெக்ட் விருது'களுக்­கான சடங்கு ஒன்று நடை­பெ­றும். தங்­கள் தொழில்­து­றை­க­ளின் எதிர்­காலத்­தைக் கட்­ட­மைக்­கும் அசா­தா­ரண பணிக்­காக தனி­ம­னி­தர்­களுக்கு இந்த விரு­து­கள் வழங்­கப்­படும்.

இது குறித்து சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கீத் டான் கூறு­கை­யில், "இந்த நிகழ்ச்­சியை ஏற்று நடத்து­வதில் சிங்­கப்­பூர் மகிழ்ச்சி அடை­கிறது. எதிர்­கா­லத்­தைச் சீர­மைக்­கும் தலை­வர்­களை இது கௌர­வப்­ப­டுத்­து­கிறது. ஆசி­யா­வில் வர்த்­த­கத்­துக்­கான மையப் பகு­தி­யாக நமது நிலைப்­பாட்டை இது பிர­தி­ப­லிக்­கிறது," என்­றார்.

எஃப்1 கார் பந்­த­யம் நடை­பெறும் காலத்­தில் ஏறக்­கு­றைய 25 நிகழ்ச்­சி­களில் கிட்­டத்­தட்ட 90,000 பேரா­ளர்­கள் கலந்­து­கொள்­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக பய­ணத்­து­றைக் கழ­கம் கடந்த மாதம் கூறி­யி­ருந்­தது. இந்த நிகழ்ச்­சி­க­ளின் எண்­ணிக்கை, கொவிட்-19க்கு முந்­தைய நிலை­யு­டன் ஒத்து இருப்­ப­தைக் கழ­கம் சுட்­டி­யது.

நேர­டி­யா­கச் சந்­திப்­ப­தற்­கான தேவை அதி­க­ரித்­த­தால், அவற்­றில் சில நிகழ்ச்­சி­கள் ஹாங்­காங்­கில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு இட­மா­றின.

அவற்­றில் ஒன்­றான 'சூப்­பர் ரிட்­டர்ன் ஏஷியா' இந்த மாதம் 19 முதல் 22ஆம் தேதி­வரை சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்ச்­சி­யில் சாதனை அள­வாக 1,500 பேர் கலந்­து­கொண்­ட­னர். 2019ல் இந்த ­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட 800 பேர் எண்­ணிக்­கை­யை­விட இது கிட்­டத்­தட்ட இரு­ம­டங்­கா­கும்.

இந்த வாரம் 'ஏஷியா கிரிப்டோ வீக்'கின் தொடக்­கத்­தைக் குறிக்­கிறது. 'டோக்­கன்2049' எனும் கிரிப்டோ மாநாட்டை இது மைய­மா­கக் கொண்­டுள்­ளது. நாளை­யும் வியா­ழக்­கி­ழ­மை­யும் அது நடை­பெறு­கிறது.

சாதனை அள­வாக 7,000க்கும் அதி­க­மான பங்­கேற்­பா­ளர்­களை தாங்­கள் எதிர்­பார்ப்­ப­தாக நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் நேற்று கூறி­னர். அண்­மைய ஆண்­டு­களில் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்ட கிரிப்டோ, மின்னிலக்க நாணயத் தொழில்­துறை­யின் ஆகப்­பெ­ரிய நிகழ்­வாக இது கருதப்­ப­டு­கிறது.

20வது ஃபோர்ப்ஸ் குளோ­பல் சிஇஓ மாநாடு, ஒன்­ப­தா­வது 'மில்­கன் இன்ஸ்­டி­டி­யூட் ஏஷியா' மாநாடு போன்ற பெரிய அள­வி­லான நிகழ்ச்சி­களும் இந்த வாரம் நடை­பெ­று­கின்­றன.

உல­கம் முழு­வ­தி­லி­ருந்­தும் 400 தொழி­ல­தி­பர்­கள் பங்­கேற்­கும் ஃபோர்ப்ஸ் மாநாடு, ரிட்ஸ்-கார்ல்­டன் மில்­லெ­னியா சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நேற்­றும் இன்­றும் நடை­பெ­று­கிறது.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் உட­னான கலந்­து­ரை­யா­டலும் இந்­திய தொழி­ல­தி­பர் கௌதம் அதா­னி­யின் முக்­கிய உரை­யும் இந்­நி­கழ்ச்­சி­யில் இடம்­பெ­று­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!