ஆப்பிரிக்க நடனம் கற்றுத்தரும் ஜீவிதா

அனுஷா செல்­வ­மணி

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மாண­வப் பரிமாற்­றுத் திட்­டத்­தின்­கீழ் ஆஸ்­திரே­லி­யா­வின் கெய்ன்ஸ் நக­ரத்­திற்­குச் சென்ற ஜீவிதா சஜீவ் பிள்ளை, 30, ஆப்­பி­ரிக்க கலாசாரத் தில் ஆர்வம் ஏற்பட்டது. ஆப்பிரிக்க நாட்டு மாண­வர்­க­ளு­டன் நண்­பர்­களாகி அவர்­க­ளு­டன் ஆப்­பி­ரிக்­கப் பாடல்­களுக்கு ஆடு­வ­தும் அவர்­கள் சமைத்த பாரம்­ப­ரிய உண­வைச் சுவைப்­ப­து­மாக ஜீவிதா இருந்­தார்.

நான்கு வய­தி­லிருந்தே பர­த­நாட்­டி­யம், 'பெலே', 'ஹிப்­ஹாப்', 'ஸும்பா' நடன வகை­களைப் பயின்று வந்த ஜீவிதா, ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தும் ஆப்­பி­ரிக்க நட­னத்­தை­யும் கற்­கத் தொடங்­கி­னார்.

சென­க­லி­லி­ருந்து வந்­த­வர்­வழி ஆப்­பி­ரிக்க நட­னத்­தைக் கற்­ற­து­டன் ஆப்­பி­ரிக்க நட­னக் காணொளி­களை இணை­யத்­தில் நாடி­னார். பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள­வி­யல் பயின்ற ஜீவிதா, பகு­தி­நேர வேலை­யாக 'ஸும்பா' நட­னத்­தைக் கற்­பித்­தி­ருந்­த­தால், தோழி­யின் ஊக்கு­விப்­பில் ஆப்­பி­ரிக்க நட­னத்­தை­யும் மற்­ற­வர்­க­ளுக்­குக் கற்­றுக்­கொடுக்­கத் தொடங்­கி­னார்.

முழு­நே­ர­மாக 'ஆஃப்ரோ­வித்­ஜீவி' (Afrowithjeevi) எனும் ஆப்­பி­ரிக்க நடன உட­லு­றுதி வகுப்பை 2020ல் துவங்­கி­னார். தொடக்கத்தில் மக்களிடம் விளம்பரப்படுத்துவது குறித்தும் மக்களின் ஆதரவு எவ்வளவு தூரம் இருக்கும் என்பது பற்றியும் அவருக்கு ஐயங்கள் இருந்தன.

"பெற்­றோ­ரின் ஊக்­கு­விப்பு, நெருங்­கிய நண்­பர்­க­ளின் ஆத­ரவு, வணி­கப் பயி­ல­ரங்­கு­கள் ஆகி­ய­வையே 'ஆஃப்ரோ­வித்­ஜீவி' தற்­போது அடைந்­துள்ள வெற்­றிக்­குக் கார­ணங்­கள்," என்­றார் ஜீவிதா.

வாரத்­தில் எட்டு வகுப்­பு­கள் வரை நடத்­தி­வ­ரும் ஜீவிதா, ஏறக் குறைய 40 பேருக்கு ஆப்­பி­ரிக்க நட­னத்­தைக் கற்­றுத் தரு­கி­றார்.

"வகுப்புகளில் ஜீவி­தா­ தொடர்ந்து ஊக்­க­ம­ளிப்­ப­தால், நான் ஆடத் தயங்­கு­வ­தில்லை," என்று 'ஃபிளிப்டு டிசைன்' நிறு­வ­ன­ரான மியெல் தாரா வாசு­தே­வன், 23, கூறி­னார்.

ஆப்­பி­ரிக்க கலா­சா­ரத்­தைப் பற்றி ஆழ­மாக அறிந்­திட அடுத்த மாதம் முதல் ஜன­வரி வரை ஜீவிதா ஆப்­பி­ரிக்கக் கண்­டத்­திற்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

தான்­சா­னியா, போட்ஸ்­வானா ஆகிய நாடு­க­ளின் நட­னங்­க­ளைக் கற்­றுக்­கொண்டு சிங்­கப்­பூ­ரில் தன் மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்க வேண்டு­மென்­பது இவ­ரின் தற்­போ­தைய இலக்கு. ஆப்­பி­ரிக்க நண்­பர்­க­ளைச் சந்­திப்­ப­தோடு அங்குள்ள நட­னக் கலை­ஞர்­க­ளு­டன் வணி­கப் பங்­காளித்­து­வத்தை ஏற்­ப­டுத்­த­­வும் ஜீவிதா திட்­ட­மிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!