பன்முகத்தன்மையுடன் எழுத்தாளர் விழா

அனுஷா செல்­வ­மணி

சிங்­கப்­பூரை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு ஒன்­று­பட்ட நெறி­க­ளை­யும் நம்­பிக்­கை­க­ளை­யும் மையப்­ப­டுத்தி ஒன்­றி­ணைய வேண்­டும் எனக் கூறிய அதி­பர் ஹலிமா யாக்­கோப், பன்­மு­கத்­தன்­மை­யைக் கொண்­டா­டும் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா பல­த­ரப்­பட்­டோ­ரை­யும் இலக்­கி­யப் பரி­மாற்­றங்­களில் இணைக்­கிறது என்­றார்.

நேற்று மாலை சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டத்­தில் இடம்­பெற்ற சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வின் தொடக்க விழா­வில் அவர் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

உல­கில் வெகு சில பன்­மொழி விழாக்­களில் ஒன்­றாக இருக்­கும் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா, பல நாடு­க­ளைச் சேர்ந்த எழுத்­தா­ளர்­களை­யும் உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளை­யும் இணைப்­ப­தாக அவர் சொன்­னார்.

விழா­வில், ஆர்ட்ஸ் ஹவுஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் வில்­சன் டான், விழா இயக்­கு­நர் பூஜா நேன்சி, கலா­சார, சமூக, இளை­யர் துறை துணையமைச்­சர் ஆல்­வின் டான் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

நேர­டி­யாக நடை­பெ­றும் இவ்­வாண்­டின் விழா, இம்­மா­தம் 20ஆம் தேதி வரை இடம்­பெ­றும்.

இவ்­வாண்டு முதன்­மு­றை­யாக அமைக்­கப்­பட்­டுள்ள 'ஃபெஸ்டி­வெல் வில்­லேஜ்', குடி­யி­ருப்­புப் பகு­தி­கள், விக்­டோ­ரியா அரங்­கம், ஆர்ட்ஸ் ஹவுஸ் ஆகி­ய­வற்­றுக்கு அரு­கில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

இலக்­கி­யம், கலை எனப் பல­வற்­றி­லும் பங்­கு­பெற எல்லா வய­தி­ன­ருக்­கும் இந்த முயற்சி வாய்ப்பு அளிக்­கும் என்­றார் பூஜா நேன்சி.

உள்­ளூர்ப் படைப்­பா­ளர்­கள் 220 பேர், வெளி­நாட்­டுப் படைப்­பா­ளர்­கள் 60 பேர் என ஏறத்­தாழ 280 பேச்­சா­ளர்­கள் இந்­நி­கழ்­வில் பங்­கு­பெ­ற­வுள்­ள­னர்.

இந்­நி­கழ்ச்சி, சிங்­கப்­பூர்ப் படைப்­பா­ளர்­களை உல­கப் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் உல­க­ள­வில் சிறப்பு பெற்­றுள்ள படைப்­பா­ளர்­களை சிங்­கப்­பூர் இலக்­கி­ய­வா­தி­க­ளுடன் இணைக்­க­வி­ருப்­ப­தாகத் திரு வில்­சன் டான் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து மீண்டுள்ள நிலையில், 'எனில்' எனும் தலைப்­பி­லான இவ்­வாண்டு விழா­வில், பயி­ல­ரங்­கு­கள், கதை சொல்­லு­தல், உரை­யாடல்­கள், கண்­காட்­சி­கள் என இலக்­கி­யத்­தை­யும் மொழி­யை­யும் சார்ந்த 19 தமிழ் நிகழ்ச்­சி­களில் மக்­கள் கலந்­து­கொள்­ள­லாம்.

நிகழ்ச்­சி­க­ளைப் பற்­றிய மேல் விவ­ரங்­க­ளை­த் தெரிந்துகொள்ளவும் நுழை­வுச்­சீட்டுகளை­யும் பெற்றுக்கொள்ளவும் விரும்­பு­வோர் www.singaporewritersfestival.com எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!