இளையர்களின் அர்ப்பணிப்பைச் சிறப்பித்த சிண்­டா­வின் இளை­யர் விருது விழா

சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம், அதன் இளை­யர் திட்­டங்­களில் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும் பொறுப்­பு­ணர்­வு­ட­னும் ஈடு­படும் இளை­யர்­களை ஆண்­டு­தோறும், 'இளை­யர் விருது விழா' வழி­யாக அங்­கீ­க­ரித்து வரு­கிறது. இவ்­வாண்டு 150 இளை­யர்­கள் விருது பெற்­ற­னர். சிண்­டா­வின் வழி­காட்டு தல் திட்­டம் (GAME-Guidance and Mentorship Programme), சிண்டா காற்­பந்து அணி, 'யூத் எனே­பள்' (Youth Enable), 'ஐடி­எ­னே­பள்' (ITEnable), சக மாண­வத் தலை­மைத்­து­வத் திட்­டம் (Peer Leadership Programme) ஆகி­ய­வற்­றில் தங்­களின் தனித்­து­வ­மான பங்­க­ளிப்­புக்­காக இளை­யர்­கள் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர்.

மத்­திய தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கக் கணக்­காய்­வுத் துறை­யில் உயர் 'நைடெக்' பயி­லும் மாண­வர் சக்தி கும­ரன் செல்­வ­கு­ம­ரன், 17, 'ஐடி­எ­னே­பள்' திட்­டத்­தில் இணைந்து அப்­பி­ரி­வில் விருது பெற்­றார்.

"கணக்­காய்­வுத் துறை­யில் எனக்கு அதிக ஈடு­பாடு உண்டு. 'ஐடி­எ­னே­பள்' திட்­டத்­தின் பயி­ல­ரங்­கு­கள் மூலம் இத்­துறை பற்றி மேலும் ஆழ­மாக அறிந்­து­கொண்­டேன். பிட­புள்­யூசி நிறு­வ­னத்­திற்­குச் சென்­ற­போது அங்­குள்ள ஊழி­யர்­களை­யும் நிபு­ணர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசும் வாய்ப்பு எனக்­குக் கிடைத்­தது," என்­றார் அவர்.

பணி­யி­டங்­க­ளுக்கு மேற்­கொண்ட பய­ணங்­கள் மூலம் எதிர்­கா­லத்­தில் தான் பணி­பு­ரிய விரும்­பும் துறை பற்றி அதி­கம் அறிந்­திட முடிந்­த­தா­க­வும் ஆர்­வ­மும் ஆழ்ந்த புரி­த­லும் கூடித் தன்­னைத் தயார்­படுத்தி உள்­ள­தா­க­வும் மாண­வர் சக்தி கும­ரன் கூறி­னார்.

சிண்­டா­வின் பல்­வேறு இளை­யர் நிகழ்­வு­களில் 2018ஆம் ஆண்டு முதல் தொண்­டூ­ழி­யம் புரிந்­து­வ­ரும் 21 வயது தனுஷா கதி­ரே­சன், இவ்­வாண்­டின் சிண்டா இளை­யர் விரு­தைப் பெற்­றுள்­ளார். தன்­னுடைய 17வது வய­தில் முதல்­மு­த­லாக சிண்டா இளம் தலை­வர்­கள் கருத்­த­ரங்­கில் பங்­கேற்­றார்.

அக்கருத்­த­ரங்­கின் மூலம் தனது சிந்­தனை­களும் செயல்­பா­டு­களும் மேம்­பட்­டதை உணர்ந்த அவர், சிண்­டா­வு­டன் தொண்­டூ­ழி­ய­ராக இணைந்து சமூ­கத்­திற்­குத் தன்­னால் முடிந்த பங்கை ஆற்­று­கி­றார்.

அதே கருத்­த­ரங்கு 2019ல் நடை­பெற்­ற­போது திட்­டத்­திற்­குத் தலை­மைத் தொண்­டூ­ழி­ய­ரா­கப் பொறுப்­பேற்­றார். இத­னைத் தொடர்ந்து சிண்டா நடத்­திய உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான இளை­யர் முனைப்பு முகா­முக்­குத் திட்­ட­மிட உத­வி­ய­தோடு அதற்­குத் தொண்­டூ­ழி­யத் தலை­வ­ரா­க­வும் இருந்து குழுவை வழி­ந­டத்­தி­னார்.

தற்­ச­ம­யம் சிண்­டா­வின் இளை­யர் அணி குழு­வின் செய­லா­ள­ராக இருக்­கும் இவர், "இளை­யர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி நடத்­தப்­படும் சிண்­டா­வின் அனைத்து நிகழ்­வு­களும் மிக­வும் சுவா­ர­சி­ய­மா­க­வும் பய­னுள்­ள­தா­க­வும் இருக்­கின்­றன. அதி­லும் தொண்­டூ­ழி­ய­ராக இணைந்து பணி­யாற்­றும்­போது நானும் கற்­றுக்­கொண்டு பிற­ரு­டனும் அத­னைப் பகிர்ந்துகொள்­ளும் வாய்ப்பு கிடைக்­கிறது," என்­றார்.

சிண்­டா­வின் காற்­பந்து அணித் திட்­டத்­தின் வழி­காட்­டித் தொண்­டூ­ழி­ய­ராக இருக்­கும் 20 வயது ஆர். ஸ்ரீ வர்­ஷி­னிக்­கும் இளை­யர் விருது கிடைத்­தது. சிறு­வ­யது முதலே காற்­பந்து விளை­யாட்­டில் அதீத ஆர்­வ­மு­டைய இவர், சிண்­டா­வின் பெண்­கள் காற்­பந்து அணி­யான 'எஸ்­எ­ஃப்சி வாரி­யர்ஸ்' (SFC Warriors) அணி­யில் இடம்­பெற்­றுள்­ளார்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழக (கிழக்கு) பய­ணி­கள் சேவை­கள் துறை­யில் உயர் நைடெக் பயி­லும் வர்­ஷினி, "சிண்­டா­வின் இளை­யர் திட்­டங்­களில் பங்­கு­கொண்­ட­தன் மூலம் தலை­மைத்­து­வப் பண்­பு­களை­யும் குழு­நி­லை­யில் பணி­யாற்­றும் திறன்­க­ளை­யும் வளர்த்­துக்­கொண்­டேன்," என்று கூறி­னார்.

இந்­நி­கழ்வு குறித்து சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறுகையில், "ஒவ்­வோர் ஆண்­டும் சிண்­டா­வின் இளை­யர் திட்­டங்­களில் 3000க்கும் மேற்­பட்ட இளை­யர்­கள் பங்­கேற்­கின்­ற­னர். அவர்­களில் அதிக ஈடு­பாட்­டோடு தனித்து விளங்­கிய இளை­யர்­களை அங்­கீ­க­ரிப்­ப­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கி­றோம். இத்­திட்­டங்­க­ளின் மூலம் இளை­யர்­களின் தன்­னம்­பிக்­கை­யும் எதிர்­கா­லம் பற்­றிய பொறுப்­பு­ணர்­வும் சமூ­கம் பற்­றிய விழிப்­பு­ணர்­வும் அதி­க­ரித்­துள்­ள­தைக் காண முடி­கிறது," என்­றார்.

செய்தி: மோன­லிசா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!