சமுதாயத்திற்குப் பங்களித்த 35 முன்னாள் மாணவர்களுக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விருதுகள்

முன்­னாள் மாண­வர்­க­ளின் சாத­னை­க­ளை­யும், அவர்­க­ளின் பங்­க­ளிப்­பு­க­ளை­யும் அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கம் தனது 35 முன்­னாள் மாண­வர்­க­ளுக்கு ' நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழக முன்­னாள் மாண­வர்­கள் விருது' வழங்­கிக் கௌர­வித்­துள்­ளது. விரு­த­ளிப்பு விழா­ நேற்று மாலை நடை­பெற்­றது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு இரண்­டாம் சுகா­தார அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃபிலி, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக அரங்­கத்­தில் இடம்­பெற்ற விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்­டார். முன்­னாள் மாண­வர்­களுக்கு இந்த விரு­து­க­ளை­யும் அவர் வழங்­கி­னார்.

"நாட்­டின் வளர்ச்­சிக்கு, முன்­னாள் மாண­வர்­கள் பெரும் பங்­காற்­றி­யுள்­ளார்­கள். இவர்­க­ளின் சாத­னை­களும் தங்­கள் துறை­களில் இவர்­கள் சிறந்து விளங்­கு­வ­தும் பல்­க­லைக்­க­ழக வளர்ச்­சிக்கு உத­வி­யுள்­ளது," என்று அமைச்­சர் கூறி­னார்.

"வளர்ச்சி அடைந்த பிறகு சமு­தா­யத்­திற்­குத் திருப்பி அளிப்­பதை நாம் மறந்­து­வி­டக்கூடாது. இவர்­களைப் போன்ற சாத­னை­யா­ளர்­கள், சமு­தா­யத்­தில் மேல்நிலை­யில் இருப்­ப­வர்­களை, மற்­ற­வர்­க­ளுக்கு உதவ ஊக்­கப்படுத்த வேண்­டும்," என்று அமைச்­சர் தன் உரை­யில் குறிப்­பிட்­டார்.

சிறந்த இளம் நன்­யாங் முன்­னாள் மாண­வர் விருதை முனைவர் சந்­தியா ஸ்ரீராம் பெற்­றுக்­கொண்­டார்.

விஞ்­ஞா­னி­யா­க­வும், தொழில் முனை­வ­ரா­க­வும் இருக்­கும் இவர், தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் முதல் உயி­ரணு அடிப்­ப­டை­யி­லான கடல் உணவு, இறைச்சி தயா­ரிக்­கும் "ஷோக் மீட்ஸ்' (Shiok Meats) நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­னர் ஆவார்.

2013ஆம் ஆண்­டில் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உயிர் அறி­வி­ய­லில் முனை­வர் பட்­டம் பெற்ற இவர், புதிய உணவு நிறு­வ­னங்­க­ளுக்கு ஆலோ­ச­க­ரா­க­வும், முத­லீட்­டா­ள­ரா­க­வும் இருக்­கி­றார்.

ஷியோக் மீட்ஸ் நிறு­வ­னம் 2018 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது முதல், இவ­ரின் தலை­மை­யில், இது­வரை $30 மில்­லி­யன் டாலர் ரொக்­கத்தை, அமெ­ரிக்கா, ஐரோப்பா, சிங்­கப்­பூர், ஜப்­பான் போன்ற நாடு­களில் இருக்­கும் முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து திரட்­டி­யுள்­ளது.

உண­வின்­மேல் அதிக விருப்­பம் கொண்­டுள்ள சந்­தியா, "இந்த த் துறை­மீது அதிக நாட்­டம் உள்ள எனக்கு இதில் ஏதா­வது ஒரு சாதனை புரிய வேண்­டும் என்­பது வேட்­கை­யாக இருந்­தது.

"நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லா­மல் இருந்­தி­ருந்­தால், என்­னால் இவ்­வ­ளவு தூரம் வளர்ந்­தி­ருக்க முடி­யாது.

"இங்கு நான் கற்­றுக்­கொண்ட பாடங்­களும் திறன்­களும் என் துறை­யில் வெற்­றி­நடை போடத் தூண்­க­ளாக அமைந்­தன. அது போலவே, பட்­டம் பெற­ இ­ருக்­கும் மாண­வர்­கள், தாங்­கள் கற்­றுக்­கொண்­டதை வருங்­கா­லப் பணி­யில் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சாதிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று கூறி­னார்.

விருது விழா­வில் கலந்­து­கொண்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கத் தலை­வர் பேரா­சி­ரி­யர் சுப்ரா சுரேஷ், "முன்­னாள் மாண­வர்­க­ளின் சாத­னை­களும் அவர்­கள் சமு­தா­யத்­திற்கு ஆற்­றிய பங்­கும் இல்­லா­வி­டில், இந்தப் பல்­கலைக் கழ­கம், உல­கின் தலை­சிறந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றாக விளங்க முடி­யாது," என்று கூறி­னார்.

செய்தி: அனுஷா செல்வமணி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!