இளையர்நலப் பணித் துறை திறன் மேம்பாட்டு முயற்சி

அனுஷா செல்­வ­மணி

இளை­யர்­ந­லப் பணி நிபு­ணத்­துவ ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்­கும் புதிய கல்­விக்­க­ழ­கம் அடுத்த ஆண்டு தொடங்­க­வி­ருக்­கிறது.

நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் நேற்று நடை­பெற்ற இளை­யர்­ந­லப் பணி தினம் தொடர்­பான நிகழ்ச்­சி­யில் இது­கு­றித்து அறி­விக்­கப்­பட்­டது.

இளை­யர்­ந­லப் பணித் துறை­யில் புதி­தா­கச் சேரும் ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்­சித் திட்­டங்­கள், நிபு­ணத்­துவ ஊழி­யர்­க­ளுக்­கான சட்­ட­ரீ­தி­யான வளங்­கள் ஆகி­யவை குறித்­தும் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் அறி­விக்­கப்­பட்­டன.

இரண்­டா­வது முறை­யாக நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சியை சிங்­கப்­பூர் இளை­யர்­ந­லப் பணிச் சங்­கம், நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி ஆகி­யவை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் ஆத­ர­வோடு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. சங்­கத்­தின் 10ஆம் ஆண்­டு­நி­றைவை முன்­னிட்டு இந்­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது

கலா­சார, சமூக, இளை­யர்­துறை மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­க­ளுக்­கான மூத்த நாடாளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­தின்­போது இளை­யர்க்கு ஆத­ரவு அளித்த இளை­யர்­ந­லப் பணி வல்லுநர்­க­ளுக்கு அவர் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

"சவால்களை எதிர்நோக்கும் இளை­யர்­களுக்கு இவர்கள் ஆதரவாக விளங்குகின்றனர். நோய்த்­தொற்­றுச் சூழல் நம்­மைப் புரட்­டிப் போட்­டி­ருந்­தா­லும் இளை­யர்­களுக்கு மன ஆத­ரவு தந்து, நிதி சார்ந்த உதவி நாடு­வ­தற்­கான வச­தி­க­ளை­யும் இவர்கள் ஏற்­பாடு செய்து தந்­த­னர்," என்­றார் அவர்.

இந்­தத் துறை­யில் புதி­தா­கச் சேரும் ஊழி­யர்­க­ளுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்பு அடுத்த ஆண்டு மத்­தி­யில் தொடங்­கப்­படும்.

துறை சார்ந்த அடிப்­ப­டைப் புரி­தல், வேலை முன்­னேற்­றத்­துக்­கான வாய்ப்­பு­கள் குறித்த தக­வல்­கள், மற்ற நிபு­ணர்­க­ளு­டன் கலந்து பழகு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் போன்­ற­வற்றை இது வழங்­கும்.

முன்­னர் இத்­து­றை­யில் பணி­புரிந்த, நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி ஆசி­ரி­யர்­கள் இதில் கற்­பிப்­பர்.

புதிய பட்­ட­தா­ரி­கள் பலர் இத்­து­றை­யில் சேரும்­போது அனு­ப­வம் இருக்­காது. மிகுந்த ஆர்­வத்­து­டன் வேலை­யில் சேரும் அவர்­களில் சில­ருக்கு, சவால்­மிக்க நடத்தை கொண்ட இளை­யர்­களை எதிர்­கொள்­ளும்­போது அவர்­க­ளைச் சமா­ளிக்­கும் திறன்­கள் இருக்­காது என்­ப­தால் இத்­த­கைய பயிற்சி மிக­வும் முக்­கி­யம் என்று கூறப்­பட்­டது.

பாய்ஸ் டவுன் இல்­லத்­தின் குடி­யி­ருப்­புக் காப்­ப­கத் துணைத் தலை­வர் சந்­தி­ரன் இள­வ­ர­சன், "ஐந்து ஆண்­டு­க­ளாக இத்­து­றை­யில் பணி­பு­ரி­யும் எனக்கு, இந்­தப் பணி பல­வற்­றைக் கற்­றுத் தந்­துள்­ளது. இளை­யர்­கள் என்ன சொல்ல வரு­கி­றார்­கள் என்­ப­தைக் கேட்­ப­தற்­கான பொறு­மையை நான் வளர்த்­துக்­கொண்­டேன்," என்று கூறி­னார்.

சிங்­கப்­பூர் இளை­யர்­ந­லப் பணிச் சங்­கம், சிங்­கப்­பூர் பெண்­கள் வழக்­க­றி­ஞர்­கள் சங்­கத்­தோ­டும் ஆலன் & கிளெட்­ஹில் எனும் சட்ட நிறு­வ­னத்­தோ­டும் இணைந்து இளை­யர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் இணை­யம்­வழி சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­கும்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் சமூக சேவை அமைப்­பு­கள், பள்­ளி­கள், சமூ­கக் குழுக்­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 300 இளை­யர் நலப் பணித் துறை வல்­லு­நர்­கள், சமூக சேவை மாண­வர்­கள், பங்­கா­ளி­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!