நேரடி மாணவர் சேர்ப்பு நடைமுறை: விண்ணப்பங்கள் சீராக அதிகரிப்பு

நேரடி மாணவர் சேர்ப்பு நடைமுறை: விண்ணப்பங்கள் சீராக அதிகரிப்பு

1 mins read
e636f1f2-e904-4ec1-93b3-beb2eff926db
சிங்கப்பூரில் முதல் முறையாக உள்ளூரிலேயே கொரோனா கிருமி பரவியதைத் தொடர்ந்து பள்ளிகளில் புதிய விதிமுறைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி -

நேரடி மாண­வர் சேர்ப்பு முறைப்­படி உயர்­நி­லைப்பள்­ளிக்கு விண்­ணப்­பிக்­கும் தொடக்­கப்பள்ளி மாண­வர்கள் எண்­ணிக்கை சீராக அதி­க­ரித்து வரு­வ­தாக கல்வி அமைச்­சின் பள்­ளி­கள் துறை இயக்கு­நர் திரு­வாட்டி டான் சென் கீ தெரி­வித்­துள்­ளார்.

இந்த ஆண்­டில் 12,200 மாண­வர்­களிடம் இருந்து 31,800 விண்­ணப்­பங்­கள் வந்­த­தா­க­வும் முடி­வில் 3,900 மாண­வர்களுக்கு இடம் கிடைத்­த­தா­க­வும் அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பிஎஸ்­எல்இ-க்குப் பிந்­திய விவேக பெற்­றோர் இணை­யக் கருத்­த­ரங்­கில் கூறி­னார்.

இந்த எண்­ணிக்கை 2021ஆம் ஆண்டு அள­வை­விட அதி­கம்.

கல்வி அமைச்­சின் துணை தலைமை இயக்­கு­ந­ரு­மான திரு­வாட்டி டான், இப்­படி விண்­ணப்­பங்­கள் அதி­க­ரித்து வரு­வது பாத­க­மான ஒன்­றல்ல என்றார்.

நேர­டிப் பள்ளி மாண­வர் சேர்ப்பு என்ற செயல்­திட்­டம், தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் தங்­க­ளு­டைய தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வுக்கு முன்­ன­தா­கவே (பிஎஸ்­எல்இ) விளை­யாட்­டு­கள், கற்­பனை எழுத்­தாற்­றல் போன்ற துறை­க­ளி­லும் அறி­வி­யல், மானி­ட­வி­யல் போன்ற ஏட்­டுக்­கல்வி பாடங்­க­ளி­லும் தங்­க­ளுக்­குள்ள சீரிய ஆற்­ற­லின் அடிப்­ப­டை­யில் உயர்­நி­லைப் பள்­ளி­க­ளுக்கு விண்­ணப்­பிக்க வழி­வ­குக்­கிறது.

சென்ற ஆண்டு நடப்­புக்கு வந்த புதிய பிஎஸ்­எல்இ மதிப்­பீட்டு முறை பற்­றி­யும் உயர்­நி­லைப் பள்­ளி­யில் மாண­வர் சேரும்­போது அந்த ஏற்­பாடு எப்­படி பயன்­ப­டுத்­தப்­படும் என்­பது பற்­றி­யும் பெற்­றோ­ருக்கு விளக்­கும் நோக்­கத்­தில் நடந்த இணை­யக் கருத்­த­ரங்­கில் திரு­வாட்டி டான் குறிப்பிட்டார்.