‘ஜி20’ மாநாட்டில் பிரதமர் லீ

பாலி­யி­லி­ருந்து இர்­ஷாத் முஹம்­மது துணைச் செய்தி ஆசி­ரி­யர்

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் நடை­பெ­றும் ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொள்­வ­தற்­காக பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று அங்கு சென்­றுள்­ளார்.

ஜி20 தலை­மைப் பொறுப்பை இவ்­வாண்டு இந்­தோ­னீ­சியா ஏற்­றுள்ள நிலை­யில் அந்­நாட்டு அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வின் அழைப்பை ஏற்று பிர­த­மர் லீ அந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­கி­றார்.

உணவு, எரி­சக்­திப் பாது­காப்பு, சுகா­தா­ரம், மின்­னி­லக்க உரு­மாற்­றம் ஆகிய அம்­சங்­கள் குறித்த கலந்­து­ரை­யா­டல்­களில் பிர­த­மர் லீ பங்­கெ­டுப்­பார். மற்ற தலை­வர்­க­ளு­டன் இரு­த­ரப்­புச் சந்­திப்­பு­க­ளை­யும் அவர் நடத்­த­வுள்­ளார்.

'ஒன்­றி­ணைந்து மீள்­வோம், வலு­வாக மீள்­வோம்' எனும் கருப்­பொ­ரு­ளில் கொவிட்-19 நோய்ப் பர­வ­லுக்­குப் பிந்­தைய உல­க­ளா­விய மீட்­சியை, வலு­வா­க­வும் மேம்­பட்ட மீள்­தி­ற­னு­ட­னும் செயல்­ப­டுத்துவது குறித்து உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­ரை­யா­டப்­படும்.

சவால்­மிக்க அர­சி­யல், பொரு­ளி­யல் சூழ­லில் இவ்­வாண்­டின் ஜி20 உச்­ச­நிலை மாநாடு நடை­பெ­று­கிறது. துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், பிர­த­மர் அலு­வ­ல­கம், வெளி­யு­றவு அமைச்சு, நிதி அமைச்­சின் மூத்த அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரும் பிர­த­மர் லீயு­டன் இந்­தோ­னீ­சியா சென்­றுள்­ள­னர்.

ஜி20 நாடு­க­ளின் அமைப்­பில் சிங்­கப்­பூர் இடம்­பெ­றா­விட்­டா­லும் உல­கின் ஆகப் பெரிய பொரு­ளி­யல்­க­ளைக் கொண்­டுள்ள இந்த அமைப்­பின் உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொள்ள சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டு­வது வழக்­கம். இந்த ஆண்­டின் மாநாட்­டில் குறைந்­தது அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், சீன அதி­பர் சீ ஜின்­பிங், பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனாக், ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி உள்­ளிட்­டோர் கலந்­து­கொள்­கின்­ற­னர். ஆனால் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கலந்­து­கொள்­ள­வில்லை.

உக்­ரே­னி­யப் பிர­த­மர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி மெய்­நி­கர் முறை­யில் கலந்­து­கொள்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிர­த­மர் லீ நாளை வரை பாலி­யில் இருப்­பார். அது­வரை இடைக்­கா­லப் பிர­த­ம­ராக மூத்த அமைச்­ச­ரும் தேசி­யப் பாது­காப்­பிற்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன் செயல்­ப­டு­வார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் தெரி­வித்து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!