பிஎஸ்எல்இ: 98.4% மாணவர்கள் தேர்ச்சி

இவ்­வாண்டு தொடக்­கப் பள்ளி இறு­தித் தேர்வு (பிஎஸ்­எல்இ) எழு­திய 37,095 மாண­வர்­களில் 98.4 விழுக்­காட்­டி­னர் உயர்­நி­லைப் பள்­ளி செல்ல தகு­தி­பெற்­றுள்­ள­னர்.

இவர்களில் 68.4% மாண­வர்­கள் விரை­வு­நி­லைக்­குத் தகுதி பெற்­றுள்­ள­னர். இவை கடந்த ஆண்­டின் தேர்ச்சி விகி­தத்தை ஒத்துள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதிசயிக்க வைத்த சர்வினி

தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளுள் கவ­னக்­குறை மிகைச்­சு­றுதி குறை­பாட்­டி­னால் (ADHD) பாதிக்­கப்­பட்­டுள்ள 12 வய­தான சர்­வினி திரு­மு­ரு­க­னும் ஒரு­வர். சவா­லான சூழ்­நி­லை­களை எதிர்­கொண்ட போதும் விரைவு நிலை­யில் தேர்ச்சி பெற்­றுள்­ளார் இவர்.

இவர் தொடக்­க­நிலை மூன்­றாம் ஆண்டு படித்­த­போது வகுப்­ப­றை­யில் கவ­னச் சித­றல், மிகைச் செயல்­பாடு, அன்­றாட வேலை­களில் மறதி, பொறு­மை­யின்மை போன்ற அறி­கு­றி­கள் தென்­ப­டு­வதை கவ­னித்த ஆசி­ரி­யர், பெற்­றோ­ரி­டம் இதனைத் தெரி­வித்தார். பள்­ளி­ பரிந்­து­ரை­யின் பேரில் மருத்­துவ மதிப்­பீட்டை மேற்­கொண்ட இவ­ருக்கு ­கு­றை­பாடு உறு­தி­செய்­யப்­பட்­டது.

தற்­போது பாய லேபார் மெத்­த­டிஸ்ட் பெண்­கள் தொடக்கப் பள்ளி­மாணவியான இவர் ஆரம்­பத்­தில் இக்­கு­றை­பா­டு­டை­யோ­ரால் கல்­வி­யி­லும் பிற­வற்­றி­லும் சாதிக்க இயலாது என தாமாகவே நினைத்து துவண்டு போனார். இதன் கார­ண­மாக தொடக்­க­நிலை ஐந்­தில் எல்லாப் பாடங்­க­ளி­லும் தோல்வி அடைந்­தார். அப்போது நிகழ்ந்த இவரது நெருங்­கிய தோழி­யின் மர­ணம் இவரை மேலும் பாதித்­தது.

இத­னால் வழக்க நிலை­யி­லி­ருந்து அடிப்­படை நிலைக்கு மாற்­றப்­படும் சூழ­லில் சர்வினிக்கு மீண்­டும் ஒரு வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. பெற்­றோர், ஆசி­ரி­யர்­கள் மற்­றும் பள்ளி அளித்த ஆத­ர­வி­னா­லும் ஊக்­கத்­தி­னா­லும் தக்க சிகிச்சை முறை­க­ளின் உத­வி­யு­ட­னும் தன்­னம்­பிக்­கை பெற்­றார்.

படிப்­ப­டி­யாக ஒரே ஆண்­டில் பாடங்­க­ளி­லும் பிற செயல்­பா­டு­

க­ளி­லும் தொடர்ந்து முன்­னேறி தொடக்­க­நிலை ஆறில் அனைத்து பாடங்­க­ளி­லும் தேர்ச்சி பெற்­றுள்­ளார்.

"இக்­கு­றை­பாடு ஒரு நோய் அல்ல, இளம் வய­தி­லேயே கண்­ட­றி­யப்­பட்­டால் தகுந்த சிகிச்சை முறை­களை தொடர்ந்து பின்­பற்­றி­னால் அனைத்து செயல்­பா­டு­க­ளி­லும் முன்­னிலை வகிக்க முடி­யும்," என்று கூறி­னார் சர்­வி­னி­யின் தாயார் முத்­த­ழகி முனி­யாண்டி.

இன்பப்புகழுக்கு இளம்

வயதில் கிடைத்த ஊக்கம்

இளம் வய­தி­லேயே உட­லி­லும் மனதிலும் உறுதிபெறு­வது அவ­சி­யம் என்ற தன்­னு­டைய தந்­தை­யின் அறி­வு­ரைப்­படி விளை­யாட்டு, கல்வி என இரண்­டி­லுமே சிறந்து விளங்­கு­கி­றார் 12 வய­தான இன்­பப்பு­கழ் கும­ரப்­பன். ராடின் மாஸ் தொடக்­கப் பள்­ளி­ மாணவரான இவர், ஒரு ஹாக்கி விளை­யாட்டு வீரர் ஆவார்.

இவ்­வாண்­டின் தொடக்­கப் பள்ளி இறு­தித் தேர்வு எழு­தி­யி­ருந்த இவர் விரைவு நிலை­யில் தேர்ச்­சிபெற்று விளை­யாட்டு ஒதுக்­கீட்­டின் வழி­யாக நேர­டிப் பள்ளிச் சேர்க்கை மூலம் விக்­டோ­ரியா பள்­ளி­யில் சேர அனு­மதி பெற்­றுள்­ளார். இவர் தன்­னு­டைய பள்­ளி­யைப் பிர­தி­நி­தித்து 2022ஆம் ஆண்­டிற்­கான தேசிய விளை­யாட்டு வீரர் விரு­தினை வென்­றுள்­ளார் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

மருத்துவர் ஆக விரும்பும் ஹசானா

சக மனி­த­ரைப் புரிந்துகொண்டு கரு­ணை­யு­டன் நடந்­து­கொள்­வது ஒவ்­வொரு தனி­ம­னி­த­ரின் கடமை என தன் வயது மீறிய முதிர்ச்­சி­யு­டன் கூறு­கி­றார் 12 வய­தான ஹசானா. தொடக்­கப் பள்ளி இறு­தித் தேர்­வில் விரைவு நிலை­யில் தேர்ச்­சி பெற்­றுள்ள இவர் எதிர்­

கா­லத்­தில் மருத்­து­வ­ராக விரும்­பு­

கி­றார்.

செயின்ட் அந்­தோ­ணி தொடக்­கப் பள்­ளி­ மாணவரான இவர் தன்­னு­டைய வகுப்­பின் சட்­டாம்­பிள்­ளை­யாக இருந்­துள்­ளார்.

தன்­னு­டைய தோழி ஒரு­வர் தமிழ்மொழிப் பாடத்­தில் நாட்­டம் இல்­லா­மல் இருந்­த­போது தானாக முன்­வந்து அவ­ருக்கு பாடங்­களை எளிய முறை­யில் கற்­றுக்­கொ­டுத்­துள்­ளார் ஹசானா. தமிழை மற்ற பாடங்­க­ளைப்போல கரு­தா­மல் தாய்­மொழி மீது அவ­ரின் ஆர்­வத்தை தூண்ட முயற்­சித்­துள்­ளார். இவர் தந்த ஊக்­கத்­தி­னா­லும் பாடங்­களில் உத­வி­ய­தா­லும் அந்தத் தோழி தற்­போது தமிழை அதிக ஆர்­வத்­து­டன் படிப்­ப­தாக இவ­ரு­டைய ஆசி­ரி­யர் பகிர்ந்­தார்.

இவ­ரு­டைய பள்­ளி­யில் சேவை­யி­லும் சமூக அக்­க­றை­யி­லும் சிறந்து விளங்­கும் மாண­வர்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் வழங்­கப்­படும் 'கேர் க்வெஸ்ட் விருதை' இவ்­வாண்டு இவர் பெற்­றுள்­ளார். மேலும் 2021, 2022ஆம் ஆண்­டு­க­ளுக்­கான கல்வி அமைச்­சின் 'எடு­சேவ் நற்­குண விருதை' ஹசானா வென்­றுள்­ளார் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!