மூவருக்கு பொதுச் சேவை உயரிய விருது

பொதுச் சேவை­யில் உன்­ன­தத் தொண்­டாற்­றிய அனு­ப­வ­மிக்க மூன்று மூத்த உய­ர­தி­கா­ரி­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

'டிஸ்­டிங்­கு­விஷ்ட் சர்­விஸ் ஆர்­டர்அ' எனும் உன்­ன­தச் சேவைக்­கான விருதை அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பி­ட­மி­ருந்து அவர்­கள் நேற்­று பெற்­றுக்­கொண்­ட­னர்.

சுகா­தார அமைச்­சின் தலை­மைச் சுகா­தார விஞ்­ஞா­னி­யான பேரா­சி­ரி­யர் டான் சோர் சுவான், முன்­னாள் பொதுத்­தூ­தர் கோபி­நாத் பிள்ளை, பொதுச் சேவைப் பிரி­வின் தலை­வர் லீ சு யாங் ஆகி­யோர் அந்த விரு­து­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

பேரா­சி­ரி­யர் டான், கொவிட்-19 நெருக்­க­டி­யின்­போது கிரு­மிப்­ ப­ர­வல் தயார்­நிலை, தடுப்­பூ­சித் திட்­டம் போன்ற முக்­கிய நட­வ­டிக்­கை­களில் பங்­க­ளித்­த­வர். கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நெருக்­க­டி­யின்­போ­தும் குறிப்­பி­டத்­தக்க பங்­காற்­றி­ய­வர்.

திரு பிள்ளை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தெற்கு ஆசிய நாடுகளுடனான சிங்கப்பூரின் உறவுகள் செழிப்பதில் பங்களித்தவர். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் புதிய தலைநகரம், சிங்கப்பூரில் இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.

திரு லீ, அரசாங்கச் சேவைக்கான ஆள்சேர்க்கை அணுகுமுறையை மேம்படுத்தியவர். உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்கள் அரசாங்கச் சேவையில் ஈடுபட அது வுழிவகுத்தது. நேற்று மொத்தம் 21 பிரிவுகளில் 6,258 பேர் தேசிய தின விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!