பள்ளிகளில் மீண்டும் சாகச நடவடிக்கைகள்

மாண­வர்­களை உற்­சா­க­மூட்­டும் சவா­லான வெளிப்­புற சாகச நட­வ­டிக்­கை­கள் பள்­ளி­களில் மீண்­டும் தொடங்­கப்­ப­ட­வி­ருக்­கின்றன. வரும் பிப்­ர­வ­ரி­யி­லி­ருந்து உய­ரத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட நட­வ­டிக்­கை­கள் மேம்­பட்ட பாது­காப்பு அம்­சங்­க­ளு­டன் தொடங்­கும் என்று கல்வி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

மூன்று வித­மான பாது­காப்பு அம்­சங்­க­ளு­டன் வெளிப்­புற சாக­சக் கற்­றல் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என்று அமைச்சு கூறி­யது.

உய­ரத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட வெளிப்­புற நட­வ­டிக்­கை­ க­ளுக்கு ஏற்­பாடு செய்­யும் நிறு­வ­னங்­கள், அதற்­கான வச­தி­க­ளுக்கு தேசிய விளை­யாட்­டுச் சங்­கம் அல்­லது வட்­டார வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிபு­ணத்­து­வம் வாய்ந்த அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து அங்­கீ­கா­ரம் பெற்­றி­ருக்க வேண்­டும். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை நடத்­தும் பயிற்­று­விப்­பா­ளர்­களும் உரிய அங்­கீ­கா­ரம் பெற்­றி­ருப்­பது அவ­சி­யம். இது, முதல் பாது­காப்பு அம்­ச­மா­கும்.

இரண்­டா­வ­தாக, வெளிப்­புற நட­வ­டிக்­கை­கள் படிப்­ப­டி­யா­கத் தொடங்­கப்­பட வேண்­டும். அதா­வது 'ஸிப்­லைன்' போன்ற சவா­லான நட­வ­டிக்­கை­களும் தடை­க­ளு­டன் கூடிய நட­வ­டிக்­கை­களும் வழக்­கத்­தை­விட 50 விழுக்­காடு குறை­வான செயல்­பா­டு­க­ளு­டன் பிப்­ர­வரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மறு­ப­டி­யும் தொடங்க வேண்­டும். இரண்டு ஆண்­டு­கால இடை­வெ­ளிக்­குப் பிறகு வெளிப்­புற கற்­றல் நட­வ­டிக்­கை­கள் தொடங்­கப்­ ப­டு­வ­தால் நடத்­து­நர்­கள் தங்­களை சரி­செய்து கொள்ள இந்த அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­கிறது.

மூன்­றா­வது பாது­காப்பு அம்­ச­மாக, மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளின் தரத்­தை­யும் பாது­காப்­பை­யும் மேற்­பார்­வை­யிட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட அதி­காரி­ களை கல்வி அமைச்சு நிய­மித்­துள்­ளது.

கல்வி அமைச்­சின் மேம்­பட்ட பாது­காப்பு அம்­சங்­க­ளைப் பரி­ சீலித்த வெளிப்­புற சாக­சக் கல்­விக் ­கான மன்­றம், உய­ரம் தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்க ஆதரவு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் தேசிய தரத்தை உரு­வாக்­கும் முயற்­சி­யில் மன்­றம் ஈடு­பட்டு வரு­கிறது.

இதனை கல்வி அமைச்சு பின்­னர் ஏற்­றுக்கொள்­ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பயிற்றுவிப்பாளர்களின் சான்­றி­தழ்­கள் காலத்­திற்கு ஏற்ப இருப்­பதை உறுதி செய்­வ­தற்­காக அவர்­க­ளுக்கு மறு­ப­யிற்­சி­களும் மறு­சான்­றி­தழ் வகுப்­பு­க­ளை­யும் கல்வி அமைச்சு நடத்தி வரு­கிறது.

சவா­லான வெளிப்­புற நட­வ­டிக்­கை­களை பாது­காப்­பாக நடத்த முடி­யும் என்ற நம்­பிக்­கை­யோடு பயிற்­றுவிப்பாளர்கள் ஈடு­ப­டு­வ­தற்­காக 2023 ஜன­வ­ரி­யில் திறன் சோத­னை­க­ளை­யும் நடத்த அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங்கிலோ-சீனப் பள்ளியைச் சேர்ந்த ஜெத்ரோ புவா எனும் மாணவர் பாதுகாப்பு கயிற்றில் தொங்கியபடி வெளிப்புற சாகச நடவடிக்கையில் ஈடுபட்டபோது கால் இடறி விழுந்து மயக்கமானார்.

கூ டெக் புவாட் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் காலை மரணமடைந்தார்.

இதையடுத்து அனைத்து வெளிப்புற சாகச நடவடிக்கைளை அமைச்சு நிறுத்தி வைத்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!