‘உங்கள் நேரத்தை விவேகத்துடன் திட்டமிடுவதே அறிவுடைமை’

தமிழ் முரசு நடத்திய பயிலரங்குவழி ஒரு செய்தியாளரின் பணியைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொண்டனர். பின்னர், தாங்கள் கற்றுக்கொண்ட உத்திகளைப் பயன்படுத்தி தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களைப் பேட்டி கண்டனர். அவ்வாறு குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் செய்தியாளர்களின் படைப்புகள் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.

செய்தித் தொகுப்பு: ஹர்ஷிதா பாலாஜி

பள்ளி நாட்­களில் விளை­யாட்­டுத்­த­ன­மாக இருந்து, பின்­னர் பெற்­றோர் மற்­றும் ஆசி­ரி­யர் அறி­வு­ரை­

க­ளா­லும் உத­வி­யா­லும் சாதா­ரண நிலைத் தேர்­வில் சிறப்­பா­கச் செய்து, இன்று கப்­பல் பொறி­யி­யல் துறை­யில் சிறந்து விளங்­கு­கி­றார் குவீன்ஸ்­ட­வுன் உயர்­நி­லைப் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர் திரு அஃப்ரிடி. குவின்ஸ்­ட­வுன் உயர்­நிலைப் பள்­ளி­யில் சேர்ந்­த­போது அவ­ருக்­குப் பதி­னைந்து வயது. அந்த வய­தில்­தான் அவர் தன்­னு­டைய குடும்­பத்­தா­ரு­டன் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­பெ­யர்ந்­தி­ருந்­தார்.

சில­ருக்­குத் தொடக்­கப்­பள்­ளி­யி­லி­ருந்து உயர்­நி­லைப்­பள்­ளிக்­குச் செல்­வது சவா­லாக இருக்­க­லாம். ஆனால், தான் பிறந்து வளர்ந்த நாட்­டி­லி­ருந்து புதி­தாக ஒரு நாட்­டுக்­குப் புலம்­பெ­யர்­வோர் சந்­திக்­கும் சவால்­கள் அதி­கம் என்று நினைவு­கூர்ந்­தார் திரு அஃப்ரிடி. இருப்­பி­னும், அஃப்ரிடி தன்­னால் முடிந்த அள­வுக்கு முயன்று அச்­ச­வால்­

க­ளைக் கடந்து வந்­துள்­ளார் என்­பதே எங்­க­ளின் எண்­ணம்.

திரு அஃப்­ரிடி உயர்­நி­லைப் பள்ளி சாதா­ரண நிலைத் தேர்வை 2017ல் எழு­தி­னார். உயர்­நி­லைப்­பள்ளி வாழ்க்கை தன் மன­தில் நீங்கா இடத்­தைப் பெற்­றுள்­ள­தாக அவர் எங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டார். பள்­ளி­யில் அவர் பெற்ற அனு

­ப­வங்­களும் நண்­பர்­களும் ஆசி­ரி­யர்­களும் தனக்­குப் பசு­மை­யான நினை­வு­க­ளைத் தந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

உதவி தேவைப்­பட்­ட­போது, அவர் தம்­மு­டைய ஆசி­ரி­யர்­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் அணு­கி­ய­போது அவர்­கள் ஆலோ­சனை வழங்­கிப் பக்­க­ப­ல­மாக இருந்­த­தாக அவர் கூறி­னார். பெரும்­பா­லும், அஃப்ரி­டி­யின் குண இயல்பை அவ­ரின் ஆசி­ரி­யர்­கள் நன்­குப் புரிந்­து­கொண்டு அக்­க­றை­யு­டன் வழி­காட்­டி­ய­தாக அவர் சொன்­னார்.

சரா­சரி மாண­வர்­க­ளைப்­போல திரு அஃப்­ரி­டி­யும் தன் நண்­பர்­

க­ளு­டன் சேர்ந்து அவ்­வப்­போது சிறு சிறு சேட்­டை­கள் செய்து ஆசி­ரி­ய­ரின் செல்­லக் கோபத்­திற்கு ஆளாகி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். தனக்­குப் பிடித்­த­மான பாடம் எது என்று நாங்­கள் கேட்­ட­தற்கு, தமிழ்­தான் என்று உறு­தி­யா­கக் கூறி­னார். தமிழ் வகுப்­பில் இருக்­கும்­போ­தெல்­லாம் அவர் தன் வீட்­டில் இருப்­பது போன்ற உணர்­வைப் பெற்­ற­தாக அவர் கூறி­னார். தமிழ் வகுப்பு எப்­போ­துமே மிக சுவா­ர­சி­ய­மா­க­வும் கல­க­லப்­பா­க­வும் இருந்­தது என்­றும் அவர் நினை­வு­கூர்ந்­தார்.

விடா­மு­யற்சி, மீள்­தி­றன், கட­மை­க­ளைச் செவ்­வனே செய்து முடித்­தல் போன்ற சிறந்த பண்­பு­களை உயர்­நி­லைப் பள்ளி வாழ்க்கை தனக்­குக் கற்­றுத்­தந்­த­தா­கக் கூறும் திரு அஃப்ரிடி, பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூ­ரிக்­குச் சென்ற பிற­கு­தான் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் தாம் பெற்ற அனு­ப­வங்­க­ளின் அரு­மையை உணர்ந்­த­தா­கக் கூறு­கி­றார்.

தன் சாதா­ரண நிலைத் தேர்வு முடி­வு­க­ளைப் பெற்ற பிறகு அவ­ருக்கு எந்த துறை­யைத் தேர்ந்­தெடுப்­பது என்­ப­தில் குழப்­பம் ஏற்­பட்­டது. அப்­போது, அவர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் உத­வியை நாடி­னார். ஆசி­ரி­யர்­கள் ஆலோ­ச­னை­யில் தனக்­குச் செயல்­முறை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பாடு உள்­ளதை அவர் உணர்ந்­தார். மேலும், அவர் வடி­

வ­மைப்பு, தொழில்­நுட்­பப் பாடத்­தில் சிறப்­புத் தேர்ச்சி பெற்­றி­ருந்­த­தால் அது தொடர்­பான கப்­பல் பொறி­யி­யல் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­துப் படிக்­கத் தொடங்­கி­னார்.

இன்று கப்­பல் பழு­து­பார்க்­கும் நிறு­வ­னம் ஒன்­றில் திரு அஃப்ரிடி பணி­பு­ரி­கி­றார்.

தனது உயர்­நி­லைப் பள்­ளி­யில் சில சிர­ம­மான கால­கட்­டங்­களும் இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். அது­போன்ற நேரங்­களில் தன் நண்­பர்­களை அதி­கம் நாடி­னார். இன்­பத்­தைப் பகிர்ந்­தால் இரட்­டிப்­பா­கும்; துன்­பத்­தைப் பகிர்ந்­தால் பாதி ஆகும் என்­ப­து­போல் அவர் வாழ்­வின் இன்­ப­துன்­பங்­களை தன் நண்­பர்­க­ளு­டன்­தான் அதி­கம் பகிர்ந்­து­கொள்­வார்.

தற்­போ­தைய வேலை தொடர்­பாக நாங்­கள் கேட்­ட­போது ஆரம்­பத்­தில் சில சவால்­க­ளைத் தான் எதிர்­நோக்­கி­ய­தாக அவர் கூறி­னார். தயக்­கத்­து­டன் தன் வேலை­யைச் செய்­யத் தொடங்­கி­ய­வர், நாள­டை­வில் அதன் நுணுக்­கங்­க­ளைத் திறம்­ப­டக் கற்­றுக்­கொண்டு மிகுந்த தன்­னம்­பிக்­கை­யு­டன் இன்று செயல்­ப­டு­கி­றார். தனது வேலை மிகுந்த திருப்­தி­யைத் தனக்கு அளிப்­ப­தா­க­வும் கூறு­கி­றார்.

நேரத்தை விவே­கத்­து­டன் திட்­ட­மி­டு­வதே அறி­வு­டைமை என்­பதை வலி­யு­றுத்­திய திரு அஃப்ரிடி, பள்­ளிப்­ப­ரு­வத்­தின்­போது வழி­காட்­டி­க­ளாக விளங்­கும் ஆசி­ரி­யர்­க­ளின் உத­வியை நாடத் தயங்­கக்­கூடாது என்­றும் எங்­க­ளுக்கு ஆலோ­சனை கூறு­கி­றார்.

இன்று கப்­பல் துறை­யில் தான் சிறந்து விளங்­கு­வ­தற்கு, உயர்

­நி­லைப் பள்­ளி­யில் பெற்ற அனு­ப­வங்­கள்­தான் சிறந்த அடித்­த­ளம் அமைத்­துக் கொடுத்­தன என்­றார் அவர். இன்­னும் ஐந்து ஆண்­டு­களில் வேலை அனு­ப­வத்­தைப் பெற்ற பிறகு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தன்­னு­டைய பட்­டப்­ப­டிப்­பைத் தொட­ர­ வேண்­டும் என்­பது இவ­ரின் கன­வா­கும்.

ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளின் பள்­ளிப் பரு­வத்­தில் சிறந்த நூல்­களை வாசிக்­கும் பழக்­கத்­தை­யும் வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்­ளும் உற்­சா­கத்­தை­யும் வழக்­க­மாக்­கிக் கொள்­ள­வேண்­டும் என்­பது திரு அஃப்ரி­டி­யின் அறி­வு­றுத்­த­லா­கும். இத­னால், தன்னை மேம்­ப­டுத்­திக்­கொண்டு எதிர்­கா­லச் சவால்­களை எளி­மை­யா­கக் கையா­ள­மு­டி­யும் என்­ப­தும் அவ­ரின் அசைக்­க­மு­டி­யாத நம்­பிக்­கை­யா­கும்.

பேட்டி கண்ட மாணவர்கள்:

தியானா கணேஷ்

கீர்த்தி கோவிஷ்

முருகு சுப்ரமணியன் பிரகதா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!