பி.கிருஷ்ணனின் ‘நச்சுக்கோப்பை’ நாடகத்திற்குத் திரையில் உயிர்கொடுத்த ‘சிட்ஃபி’ குழுவினர்

மாதங்கி இளங்கோவன்

சிங்கப்பூரின் முன்னோடி எழுத்­தா­ளர் பி. கிருஷ்­ணன் வானொ­லிக்­காக உரு­வாக்­கிய ‘நச்­சுக்­கோப்பை’ நாட­கம், மலாக்­கா­வின் 15ஆம் நூற்­றாண்டு அரச வர­லாற்றுச் சூழலை கற்­பனை செய்து எழு­தப்­பட்­டது. இக்­க­தையை திரைப்­பட வடி­வில் படைத்து, இக்கால சிங்­கப்­பூ­ரர்­களுக்குக் கொண்டுசேர்க்க வேண்­டும் என்ற பெருவிருப்­பத்­தோடு கடு­மை­யாக உழைத்­தனர் ‘சிட்ஃபி (SITFE)’ குழு­வி­னர்.

அத்­து­டன், சேலை­யின் மகத்­து­வத்­தை­யும் அதன் உள்­ளூர் வர­லாற்­றை­யும் மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கும் விதம் ‘நூல் கதை­கள்’ என்ற மற்­றொரு திரைப்­ப­டத்­தை­யும் அவர்­கள் தயா­ரித்­துள்­ள­னர்.

இவ்­விரு திரைப்­ப­டங்­க­ளும் நவம்­பர் 12ஆம், 13ஆம் தேதிக­ளில் கார்­னி­வல் திரை­ய­ரங்­கில் திரை­யிடப்பட்டது.

‘நச்­சுக்­கோப்பை’ திரைப்­ப­டத்­தின் வச­னங்­கள், நாட­கத்­தில் இடம்­பெற்­றது போலவே இருக்க வேண்­டும் என்ற திரு பி.கிருஷ்­ண­னின் கோரிக்­கைக்கு ஏற்ப, பல நீள­மான, சவால்­மிக்க வச­னங்­களை திரை­யில் சொல்­வது சற்று கடி­ன­மாக இருந்­தது என்­றார் இளம் நடி­கர் சஞ்­சீவி கணே­சன், 27. “என்­னைப் பெரிய அரங்­கில், திரை­யில் காண முத­லில் அஞ்­சி­னேன். ‘லூசி­ஃபர்’ எனும் ஆங்­கில நாட­கத்­தில் கதா­நா­ய­க­னின் நடிப்பை உன்­னிப்­பாக கவ­னித்து, அவ­ரைப்போல சில நுணுக்­கங்­களைப் புகுத்த முயற்சி­செய்தேன்,” என்­றார் அவர்.

நச்­சுக்­கோப்­பை­யில் நடித்த இன்­னொரு நடி­க­ரான சிலம்­ப­ர­சன் பருசப்­புலி, 31, சிங்­கப்­பூ­ரின் தக­வல் தொடர்புத் துறை­யில் பணி­யாற்­று­வதற்காக இந்­தி­யா­வி­லி­ருந்து 2015ஆம் ஆண்­டில் வந்­த­வர்.

நடிப்­பி­லும் பேரார்வம் காட்டி­ வரும் அவர், நச்­சுக்­கோப்­பை­யில் துன் முதா­ஹிக் என்ற கதா­பாத்­திரத்தை ஏற்று நடித்­துள்­ளார். சக நடி­கர்­க­ளின் ஆத­ரவு தமது தன்­னம்­பிக்­கையை அதி­க­ரித்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இத்திரைப்படத்தைப் பார்த்து பெருமிதம் அடைந்ததாகக் கூறினார் திரு பி.கிருஷ்ணன். “நம் மக்கள், சிங்கப்பூர், மலாயா வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களை எழுதினேன்,” என்றார் அவர்.

வர­லாற்­றுத் தழு­வல்­கொண்ட கதைக்­க­ளத்­தில் அமைந்த ‘நூல் கதை­கள்’ திரைப்­ப­டத்­தில் மேடை நாடக அங்­கங்­களைப் புகுத்­தி­யது சுவா­ர­சி­ய­மாக இருந்­தது என்­றார் சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன். ஆயினும், கதை மூன்று வெவ்­வேறு பாகங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்­ட­தால் கதை­யோட்­டத்­தைப் புரிந்­து­கொள்­வது சற்று சவா­லாக இருந்­தது என்­றும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!