மனநல உதவி தேவைப்படும் இளையர்களுக்கு இணையம்வழி ஆலோசனை வழங்கும் குழுக்கள்

உயர்­நிலை 1ல் பயின்­ற­போது சேண்டி (உண்­மைப் பெய­ரன்று) தன்­னையே காயப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தொடங்­கி­னார். அந்­தத் தழும்பு­களை ஆசி­ரி­யர் ஒரு­வர் கண்­ட­பின் அவர் பள்ளி ஆலோ­ச­கரிடம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டார்.

ரக­சி­யம் காப்­ப­தாக உறு­திகூறிய­பின், சேண்டி தன்­னு­டைய எண்­ணங்­களை அந்த ஆலோ­ச­க­ரி­டம் பகிர்ந்­து­கொண்­டார். ஆயி­னும், சேண்டி கூறி­ய­வற்றை அவ­ரின் பெற்­றோ­ரி­டம் அந்த ஆலோ­ச­கர் பகிர்ந்­து­கொண்­டார்.

அத­னை­ய­டுத்து, தங்­கள் மகள் மன­ந­லக் கழ­கத்­தின் உத­வியை நாடி­னால் அது நிரந்­த­ர­மாக ஆவ­ணத்­தில் பதி­வா­கி­வி­டும் என்று கவ­லைப்­பட்ட அவ­ரின் பெற்­றோர், அவ­ருக்­குத் தேவைப்­பட்ட உதவியை நாட அனு­ம­திக்­க­வில்லை.

ஆறாண்­டு­க­ளுக்­குப் பின், கடந்த 2019ஆம் ஆண்டு தமது 19வது வய­தில் சேண்டி தமது உயிரை மாய்த்­துக்­கொள்­ளத் திட்­ட­மிட்­டார். அது­பற்­றித் தம் தோழி­யி­ட­மும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

அந்­தத் தோழி, அவரை ‘லிமிட்­லெஸ்’ எனும் லாப­நோக்­க­மற்ற அமைப்­பி­டம் பரிந்­து­ரைத்­தார். அவ்­வ­மைப்பு 12 முதல் 25 வய­திற்கு உட்­பட்­டோ­ருக்கு மன­நல சேவை­களை வழங்கி வரு­கிறது.

அவ்­வ­மைப்­பி­ட­மி­ருந்து ஆலோ­சனை பெற்ற சேண்டி, இப்­போது உயிரை மாய்த்­துக்­கொள்­வது குறித்து எண்­ணு­வ­தில்லை. இப்­போது அவர் உள­வி­ய­லில் பட்­டம் பயின்று வரு­கி­றார்.

தங்­கள் பெற்­றோர் தங்­க­ளைப் புரிந்­து­கொள்­ளா­மல் போக­லாம் என்­றும் உண்மை தெரிந்­தால் அவர்­கள் மோச­மாக எதிர்­வி­னை­யாற்­ற­லாம் என்­றும் அஞ்சி, இளை­யர்­கள் உத­வி­கோ­ரத் தயங்­கு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பேசிய சமூ­கப் பணி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

சமூக சேவை அமைப்­பு­க­ளி­டம் இருந்து மன­நல சேவை­கள் பெறும் 18 வய­திற்­குக் குறை­வா­ன­வர்­கள் வேறி­டங்­களில் மற்ற சிகிச்­சைக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட பெற்­றோ­ரின் ஒப்­பு­தல் பெற வேண்­டும் என்று அவர்­கள் கூறி­னர்.

மன­நல ஆலோ­சனை அல்­லது சிகிச்சை நாடு­வது இளை­யர்­க­ளி­டத்­தில் குறை­வாக உள்­ளது என்­றார் ‘லிமிட்­லெஸ்’ அமைப்­பின் நிறு­வ­னர் ஏஷெர் லோ.

பய­னா­ளர்­கள் தங்­க­ளைப் பற்­றிய பெயர் உள்­ளிட்ட விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­கா­ம­லேயே ஆலோ­ச­கர்­க­ளி­டம் பேச ‘டிஸ்­கார்ட்’ தளத்­தில் ஒரு சேவை­ய­கத்தை ‘லிமிட்­லெஸ்’ நடத்தி வரு­கிறது. இளை­யர்­கள் உரை­யா­டு­வ­தற்­கான அனைத்­து­லக சமூ­கத் தள­மாக ‘டிஸ்­கார்ட்’ விளங்கி வரு­கிறது.

‘சேஃப்ஹ­வுஸ்’ எனும் அந்த சேவை­ய­கத்­தில் 13 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட குழந்­தை­கள் தங்­க­ளது எண்­ணங்­க­ளைச் செவி­ம­டுக்­கச் செய்­ய­லாம்.

கடந்த 2021ஆம் ஆண்டு 928 இளை­யர்­கள் மன­நல உதவி, ஆலோ­ச­னைக்­காக ‘லிமிட்­லெஸ்’ அமைப்பை நாடி­னர். அதற்கு முந்­திய ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 373ஆக இருந்­தது. ‘லிமிட்­லெஸ்’ அமைப்­பின் ‘டிஸ்­கார்ட்’ தளத்­தில் 664 பேர் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

‘ஐயேம் ஃபிரண்ட்லி கோ’ எனும் இளை­யர்­கள் குழு, 16 முதல் 35 வய­திற்­குட்­பட்­ட­வர்­கள் தங்­க­ளது பெயரை வெளி­யி­டா­மல் ஆலோ­சனை நாடு­வ­தற்­கென ஓர் இணை­யத்­த­ளத்தை (https://www.imfriendlyco.com) நடத்தி வரு­கிறது.

அந்த இணை­யத்­த­ளத்தை நாடு­வோர், பயிற்சி பெற்ற சக­ ஆத­ர­வா­ள­ரு­டன் உரை­யாடு­முன் ஒரு புனைப்­பெ­ய­ரைத் தெரிவு­செய்­து­கொள்ள வேண்­டும். உள­வி­யல் வல்­லு­நர்­கள், ஆலோ­ச­கர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி வடி­வ­மைக்­கப்­பட்ட ஒரு பாடத்­திட்­டத்­தின்­கீழ் பயிற்சி பெற்ற பிறகு தொண்­டூ­ழி­யர்­கள் அத்­த­கைய ஆத­ர­வா­ளர்­களா­கச் செயல்­பட முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!