சிலருக்கு சிறப்பு சலுகை ஏன்: கலந்துரையாடலில் கேள்வி

வேலை­யி­டத்­தில் சில­ருக்கு மட்டும் சலு­கை­கள் வழங்­கப்­ப­டு­வது ஏன், மாற்று விடு­மு­றையை சில­ருக்கு நீட்­டிப்­பது ஏன் என்று உத்­தேச வேலையிட நியா­ய­மான நடைமுறை சட்­டம் குறித்து நடை­பெற்ற கலந்துரையாடலில் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன.

சில­ருக்கு மட்­டும் சிறப்பு ஏற்­பா­டு­க­ளு­டன் வேலை­களை வழங்கு­வது பாகு­பாடு காட்­டு ­வ­து­போல உள்­ளது என்று சிலர் குறை­பட்­டுக் கொண்­ட­னர்.

சுமார் ஒன்­றரை மணி நேரம் நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் மனி­த­ வ­ளத் துறை­யி­னர், முத­லா­ளி­கள், ஊழி­யர்­கள் உட்­பட பலர் கலந்­து­கொண்­ட­னர்.

உத்­தேச வேலையிட நியா­ய­மான நடைமுறை சட்­டம் ஏற்­ப­டுத்­தும் விளை­வு­கள், செயல்­பா­டு­கள், நன்­மை­கள் குறித்து இதில் விவா­திக்­கப்­பட்­டன.

மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, தேசிய தொழிற்­சங்­க காங்­கி­ர­சின் துணை தலை­மைச் செய­லா­ளர் சாம் ஹுய் ஃபோங், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் கௌரவ செய­லா­ளர் எட்­வின் இங் உள்­ளிட்ட பிர­மு­கர்­கள் பங்­கேற்று கலந்­து­ரை­யா­டி­னர். மூவ­ரும் முத்­த­ரப்­புக் குழு­வில் உறுப்­பி­னர்­கள் ஆவர்.

சென்ற பிப்­ர­வரி 13ஆம் தேதி இடைக்­கால அறிக்­கை­யில் உத்­தேச சட்­டம் குறித்த பரிந்­து­ரை­களை குழு வெளி­யிட்­டி­ருந்­தது.

நாடு, வயது, இதர கார­ணங்­கள் அடிப்­ப­டை­யில் பேதம் பார்க்­கா­மல் ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பது உத்­தேச சட்­டத்­தின் நோக்­க­மா­கும். ஒழுங்­கற்ற ஊழி­யர்­ களுக்கு விதிக்­கப்­படும் ஒழுங்­கற்ற நட­வ­டிக்­கை­களும் கலந்­துரை­யா­ட­லில் அல­சப்­பட்­டது.

சில ஊழி­யர்­க­ளுக்கு மட்­டும் வீட்­டில் இருந்து வேலை செய்ய அனு­ம­திப்­பது மற்றவர்களுக்கு காட்டும் பாகு­பாடு என்­றும் சிலர் கூறி­னர். சிங்­கப்­பூர் மேரி­யட் டேங் பிளாசா ஹோட்­ட­லில் நடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­ட­லில் 200க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்டனர்.

மனி­த­வள நிபு­ணர்­கள் பயி­ல­கத்­தின் தலைமை நிர்­வாகி அஸ்­லாம் சர்­தார் கருத்­த­ரங்கை வழி நடத்­தி­னார். சிலருக்கு மட்டும் சலுகை வழங்கப்படுவது ஏன் என்பது ஊழியர்களுக்கு முதலாளிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று அமர்வில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!