2023 பொருளியல் 0.5% முதல் 2.5% வரை வளர்ச்சியடையும்

சிங்­கப்­பூ­ர் பொரு­ளி­ய­லின் வளர்ச்சி கண்­ணோட்­டம் அதிக சவால்­மிக்­க­தாக உரு­வெ­டுத்­தா­லும் குறிப்­பி­டத்­தக்க பொரு­ளி­யல் வீழ்ச்சி சாத்­தி­ய­மில்லை என்று வர்த்­தக தொழில் அமைச்சு நேற்று தெரி­வித்­தது. இவ்­வாண்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சி 0.5%க்கும் 2.5%க்கும் இடைப்­பட்­டி­ருக்­கும் என்­றும் அது கூறி­யது.

“இந்த ஆண்டு பொரு­ளி­யல் மந்­த­நி­லையை நாங்­கள் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், காலாண்டு அடிப்­ப­டை­யில் அவ்­வப்­போது மெது­வான வளர்ச்சி ஏற்­பட வாய்ப்­புண்டு,” என்று வர்த்­தக தொழில் அமைச்­சின் தலைமை பொரு­ளி­யல் நிபு­ணர் யோங் யிக் வெய் கூறியுள்ளார்.

முத­லாம் காலாண்டு வளர்ச்சி விகி­தத்­தை­யும் அமைச்சு நேற்று திருத்தி அமைத்­தது. இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் பொரு­ளி­யல் ஆண்டு அடிப்­ப­டை­யில் 0.4% வளர்ச்சி கண்­டது. ஆனால், ஏப்­ர­லில் புளூம்­பர்க் வெளி­யிட்ட வளர்ச்சி முன்­னு­ரைப்­பான 0.1%விட இது அதி­கம். முன்­னைய காலாண்­டின் வளர்ச்சி 2.1% ஆக இருந்­தது.

பரு­வத்­துக்கு ஏற்­ற­வாறு திருத்­திய­மைக்­கப்­பட்ட காலாண்டு பொரு­ளி­யல் வளர்ச்சி 0.4% சரிந்­தது. 2022 கடைசி காலாண்­டில் வளர்ச்சி 0.1% அதி­க­ரித்­தி­ருந்­தது.

இதற்­கி­டையே, எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் எண்­ணெய் சாரா ஏற்­று­ம­திக்­கான வளர்ச்சி முன்­னு­ரைப்பை நேற்று குறைத்­தது.

எண்­ணெய் சாரா ஏற்­று­ம­தி­யும் சரக்கு வர்த்­த­க­மும் முத­லாம் காலாண்­டில் சரி­வைக் கண்­டன. ஆண்டு அடிப்­ப­டை­யில் எண்­ணெய் சாரா ஏற்­று­மதி 16.2%ம், சரக்கு வர்த்­த­கம் 7.8%ம் குறைந்­தன.

முத­லாம் காலாண்­டில் சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித் துறை ஆண்டு அடிப்­ப­டை­யில் 5.6% சரிந்­தது. ஒப்­பு­நோக்க முன்­னைய காலாண்­டில் அது 2.6% சரி­வாக இருந்­தது.

போக்­கு­வ­ரத்­துப் பொறி­யியல் துறை தவிர, மற்ற எல்லாத் துறை­க­ளி­லும் உற்­பத்தி குறைந்­தது.

ஹோட்­டல் துறை, முன்­னைய காலாண்­டின் வளர்ச்­சி­யான 7.8%யை கடந்து, முத­லாம் காலாண்­டில் 21.9%க்கு வளர்ச்சி கண்­டது.

2022ஐ காட்­டி­லும் அனைத்­து­லக சுற்­றுப்­ப­ய­ணி­கள் வரு­கை­யின் வலு­வான மீட்­சியே இந்த வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணம் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

உணவு, பானத்­துறை சேவைத் துறை­யும் ஆண்டு அடிப்­ப­டை­யில் 12.2% வளர்ச்சி கண்­டது. உண­வுத் தயா­ரிப்­பா­ளர்­கள், உணவகங்கள் ஆகி­ய­வற்­றில் தென்­பட்ட அதிக அள­வி­லான விற்­பனை இதற்­குக் கார­ண­மாக அமைந்­தது என்­றும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!