போதுமான முகக்கவசம் கைவசம் உள்ளது; அமைச்சர் கிரேஸ் ஃபூ

சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்தால், பயன்பாட்டுக்குப் போதுமான அளவு முகக்கவசம் இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (அக்டோபர் 7) சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

சூழ்நிலையைப் பொறுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பது உள்ளிட்ட, புகைமூட்டம் அறிவுறுத்தல்கள் இடம்பெறும் என்று திருவாட்டி கிரேஸ் ஃபூ, தமது தொகுதி நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“போதுமான அளவு முகக்கவசம் இருப்பு உள்ளது என்று நம்புகிறேன். என்றாலும், நிச்சயமற்ற பருவநிலை நிலைமைகளைக் கையாளுகிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வது முக்கியம்,” என்றார் அவர்.

தேவைப்பட்டால், சிங்கப்பூர் மேலும் முகக்கவசங்களை வாங்கும் என்று அவர் சொன்னார்.

வீட்டிலிருந்து பள்ளி அல்லது வேலைக்குச் செல்வது போன்ற குறைந்த நேரம் வெளிப்புறத்தில் இருக்கும்போது N95 முகக்கவசம் தேவையில்லை என்று புகைமூட்டப் பணிக்குழு கூறியது.

“பொதுவாக, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவில் (300க்கு மேல்) இருக்கும்போது ஆரோக்கியமான ஒருவர் பல மணிநேரம் வெளிப்புறத்தில் இருக்கவேண்டிய சூழலில், பாதிப்பைக் குறைக்க N95 முகக்கவசத்தை அணியலாம்,” என்று பணிக்குழு சனிக்கிழமையன்று தெரிவித்தது.

24 மணி நேர ‘பிஎஸ்ஐ’ எனப்படும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200க்கு மேல் இருந்தால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள் பல மணிநேரம் வெளிப்புறத்தில் இருக்கவேண்டிய சூழலில் N95 முகக்கவசம் அணியலாம்.

‘பிஎஸ்ஐ’ குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படும்.

“புகைமூட்ட நிலைமை நிச்சயமற்றது. இது இந்த வட்டாரத்தில் ஏற்படும் காட்டுத் தீச் சம்பவங்களின் எண்ணிக்கை, காற்றின் திசை, மழை போன்ற சில காரணிகளைப் பொறுத்தது,” என்றார் அமைச்சர்.

“எனினும், வறண்ட, வெப்பமான எல் நினோ பருவத்தில் இருக்கிறோம்,” என்பதையும் அவர் சுட்டினார்.

சனிக்கிழமை நடந்த புகைமூட்டப் பணிக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, சுகாதார நிறுவனங்கள், பாலர் பள்ளிகள், பள்ளிகளில் காற்று சுத்திகரிப்பான்களை வைப்பது உள்ளிட்ட, புகைமூட்டத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அமைப்புகள் அறிவித்தன.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும்போது பாலர் பள்ளிகள் நீண்டநேர வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்கும். பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், தேசிய தேர்வுகள் மாற்றியமைக்கப்படும்.

24 மணி நேர ‘பிஎஸ்ஐ’ குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் இருந்தால், ​​ஆரோக்கியமான ஊழியர்களுக்கு நீண்டநேர அல்லது கடினமான வேலையின் கால அளவைக் குறைக்குமாறு மனிதவள அமைச்சு அறிவுறுத்தியது.

சிங்கப்பூர் ஆயுதப் படைகள், உள்துறைக் குழு ஆகியவை காற்றின் தரத்தின் அடிப்படையில் பயிற்சி மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளும் என்று பணிக்குழு தெரிவித்தது. தேசிய சேவையாளர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காற்றின் தரம் மோசமான நிலையை எட்டும்பட்சத்தில், புகைமூட்டத்தின் தாக்கத்தை சிறிதுநேரம் குறைக்க விரும்பும் பொதுமக்களுக்காக அனைத்து சமூக மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பாளர் குழு மையங்களிலும் குளிரூட்டப்பட்ட அறைகள் தயார்நிலையில் இருக்கும்.

தேசிய சுற்றுப்புற வாரியம் (NEA) வழங்கும் அறிவுறுத்தல்களை கவனிக்கும்படி அமைச்சர் பொதுமக்களை ஊக்குவித்தார். புகைமூட்டக் காலத்தில் அன்றாடம் இத்தகவல் அனுப்பப்படும்.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டினால், ஆரோக்கியமான மக்கள் நீண்ட நேர அல்லது கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும். முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இத்தகைய நடவடிக்களைக் குறைக்க வேண்டும். நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் உள்ளவர்கள் அந்நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!