புதிய நிறுவனங்களுக்கான முதலீடு: தென்கிழக்காசியாவில் சிங்கப்பூர் முதலிடம்

சிங்கப்பூர் சென்ற ஆண்டு (2023) புதிய நிறுவனங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் தென்கிழக்காசியாவில் முதலிடம் வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர், டீல்ஸ்டிரீட்ஏஷியா ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இத்தகைய முதலீடுகளில் 63.7 விழுக்காடு சிங்கப்பூரில் செய்யப்பட்டவை என்று அவ்வறிக்கை கூறியது. 2022ஆம் ஆண்டு 56.7 விழுக்காட்டு முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்தது.

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய நிறுவனங்கள் செழிப்படைந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டு அடிப்படையில் இத்தகைய நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்கள் 31.4 விழுக்காடு அதிகரித்தன. ஆனால் அத்தகைய ஒப்பந்தங்களின் மதிப்பு 2023ல் 18.4 விழுக்காடு குறைந்து $2.07 பில்லியனாகப் பதிவானது.

இந்தப் புள்ளி விவரங்கள், இந்த வட்டாரத்தில் முதலீட்டுக்கும் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் சிங்கப்பூர் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்வதைக் காட்டுவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.

நிதி நெருக்கடி நிலவியபோதும் உலகளாவிய, வட்டார முதலீட்டாளர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீது மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அறிக்கை தெரிவித்தது. அத்தகைய நிறுவனங்கள் வலுவான வர்த்தக அடிப்படைகள், புத்தாக்கத் தீர்வுகள், வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டிருப்பது அதற்குக் காரணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!