தனித்திருந்ததால் மனநலம் பெரிதும் பாதிப்பு

கொரோனா பர­வ­லில் இருந்து சிங்­கப்­பூர் சமூ­கத்­தைப் பாது­காக்­கும் பொருட்டு ஆயி­ரக்­க­ணக்­கான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது விடு­தி­க­ளி­லேயே மாதக்­ க­ணக்­கில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

நாள்­கள் செல்­லச் செல்ல, அவர்­களில் பல­ரும் தங்­க­ளது மன­ந­லம் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­கத் தொண்­டூ­ழி­யர்­க­ளி­டம் தெரி­வித்­த­னர்.

மற்­ற­வர்­க­ளைக் காட்­டி­லும் தங்­கும் விடுதி ஊழி­யர்­க­ளின் மன­நலச் சவால்­கள் வேறு­பட்­டவை என்று மன­நல ஆலோ­ச­கர் ஆந்தியா ஓங் குறிப்பிட்டார்.

“இவ்­வ­ளவு காலத்­திற்கு ஒரு­வர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தால் நிச்­ச­ய­மாக அவ­ரின் மன­ந­லம் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படும்,” என்­றார் திரு­வாட்டி ஓங்.

“இதற்­கு­முன் கடத்­தல் பிரச்­சி­னையை நாம் எதிர்­கொண்­ட­து இல்லை. இப்­போது, தனி­மைப்­படுத்­த­லின் விளை­வாக அது நிகழ்ந்­தி­ருக்­க­லாம்,” என்று அவர் சொன்­னார்.

மந்­த­மான எதிர்­கா­லத்தை எதிர்­நோக்­கி­யி­ருந்த நிலை­யில், இத்­த­கைய குறு­கி­ய­கால நிவா­ர­ணத்­திற்­கான வாய்ப்­பைப் பற்­றிக்­கொள்ள ஊழி­யர்­கள் தூண்­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று திரு­வாட்டி ஓங் கூறி­னார்.

“நிலை­மை­யைச் சமா­ளிக்க ஒரு­வேளை இது அவர்­க­ளுக்கு உதவி இருக்­க­லாம். தங்­க­ளு­டைய நண்­பர்­க­ளுக்­கும் வேண்­டும் என்­ப­தற்­காக ஒரு சிலர் தாங்­களே கடத்­தல் முயற்­சி­யில் இறங்கி இருக்­க­லாம்,” என்­றார் அவர்.

“அவர்­கள் விதி­களை மீறி­யது தெளி­வா­கிறது. அதை மன்னிக்க முடி­யாது. ஆனால், இதை நாம் கரு­ணை­விழி கொண்டு பார்க்க வேண்­டும். உட­ன­டி­யாக அவர்­களுக்கு மன­நல ஆத­ரவை விரிவு­படுத்த வேண்­டும்,” என்­றும் திரு­வாட்டி ஓங் வலி­யு­றுத்­தி­னார்.

இதுபோன்ற செய்­தி­க­ளைக் கேட்க வருத்­த­மாக உள்­ளது என்­றார் புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­களுக்­கான ‘இட்ஸ் ரெய்­னிங் ரெய்ன்­கோட்ஸ்’ அமைப்­பின் நிறு­வனர் திரு­வாட்டி தீபா சுவா­மி­நா­தன்.

“இது­போன்ற கடத்தல் செயல்­கள் பெரும் ­தீங்கு விளை­விக்கும், தொடர் விளை­வு­க­ளை ஏற்­ப­டுத்­தும்,” என்­றார் திரு­வாட்டி தீபா.

ஊழி­யர்­கள் பல­ரி­டத்­தில் ஏற்­கெ­னவே பண­மி­ருக்­காது என்ற அவர், மன­அ­ழுத்­தத்­தில் இருந்து, கவ­லை­யில் இருந்து தற்­கா­லி­க­மாக விடு­ப­டு­வ­தற்­காக அவர்­கள் கடன் வாங்­க­வும் நேரி­ட­லாம் என்­றும் சொன்­னார்.

“ஒரு­வேளை கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யா­மல் போனால், அது மேலும் அவர்­க­ளுக்கு மன­அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்,” என்­றும் திரு­வாட்டி தீபா கூறினார்.

ஊழி­யர்­க­ளின் தேவை­க­ளைப் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்­பேற்­ற­வர்­களே அத்­த­கைய செய­லில் ஈடு­பட்­டி­ருந்­தால் அது நம்­பிக்கை மோச­டி­தான் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஊழி­யர்­கள் எத்­த­கைய சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­னர் என்­பதை முன்­க­ளத்­தில் இருக்­கும் அவர்­களே நன்­க­றி­வர் என்ற திரு­வாட்டி தீபா, “ஊழி­யர்­க­ளின் வாழ்க்­கையை அவர்­கள் மோச­மாக்­கி­விடக்­கூ­டாது,” என்­றும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!