உள்ளத்தில் புத்தொளி ஏற்றும் தீபாவளி

மண­வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட பிரச்­சினை மண­வி­லக்கு வரை வந்­து,­ஈராண்­டு­க­ளுக்குமுன் அதற்­கான சட்ட நடை­மு­றை­கள் தொடங்கின. மார்பகப் புற்­று­நோய் நான்­காம் கட்­டத்­தில் இருப்பது கடந்த ஆண்டு தெரியவந்தது. தாங்க முடி­யாத மனஉளைச்­ச­லால் உயிரை மாய்த்­துக்­கொள்ள இரு­முறை முயற்சி செய்­தார். அதி­லிருந்து மீண்டு வர, அடுத்த அடி­யாக கொவிட்-19 நோய்ப் பரவல் நெருக்கடியால் ஊதி­யம் குறைக்கப்பட்டது.

இப்­படி உட­லா­லும் உள்­ளத்­தா­லும் பல வலி­க­ளை­யும் பொரு­ளி­யல் சிக்­கல்­க­ளை­யும் எதிர்­கொண்டு வந்­தா­லும், தான் வாழும் நாளில் தன் வாழ்வை அர்த்­த­முள்­ள­தாக்கிக் கொள்­ளும் வித­மாக, மற்­ற­வர்­களின் வாழ்­வில் ஒளி­யேற்­றும் முயற்­சி­யில் முழு­மை­யா­கத் தம்மை ஈடு­ப­டுத்­திக் கொண்­டு வருகிறார் திரு­வாட்டி புவனேஸ்­வரி கரு­ணா­நிதி, 47.

மார்­சி­லிங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­வின் செய­லா­ள­ராக, உணவு விநி­யோ­கத் திட்­டம், இணை­யம் மூலம் தீபா­வளி நிகழ்ச்சி, அன்­ப­ளிப்­புப் பை விநி­யோ­கம், குறைந்த வருமானக் குடும்­பங்­க­ளுக்கு 'மார்­சி­லிங்­கேர்' திட்­டத்­தின்­கீழ் மளி­கைப் பொருள்­கள் விநி­யோ­கம், கர­வோக்கே எனும் பாடல் குழு, நட­னக் குழுக்­களுக்குப் பொறுப்­பா­ளர் என பல பொறுப்­பு­களை ஏற்­றும் திட்­டங்­களில் பங்கேற்றும் வரு­கி­றார்.

"என்­னை­விட பெரும் சிர­மங்­களைச் சுமப்­ப­வர்­கள் அதி­கம் பேர் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு நம்­மால் முடிந்த உத­வி­யைச் செய்­தால் மகிழ்ச்சி அடை­வார்­கள். அவர்­கள் முகத்­தில் தோன்றும் மகிழ்ச்­சியே நம் மனத்­தைக் குளிர வைக்­கும்," என்ற திரு­வாட்டி புவ­னேஸ்­வ­ரி­யின் குர­லில் இருந்த உற்­சா­க­மும் துடிப்­பும் வியக்க வைத்­தது.

சென்ற ஆண்டு ஜூன் மாதத்­தில் இவ­ருக்கு முற்­றிய நிலை­யில் புற்­று­நோய் இருப்­பதை உறு­தி­செய்த மருத்­து­வர்­கள், "இன்­னும் ஓராண்டு­தான் உயிரோடு இருப்பீர்கள்," எனக் கூறி­ய­தைக் கேட்டு இவ­ருக்கு வாழ்க்­கையே இருண்­டு­விட்­டது.

உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் அள­வுக்கு மன­மு­டைந்துபோன இவரை, மன­நல ஆலோ­ச­கர்­களும் நண்­பர்­களும் மீட்­டெ­டுத்­த­னர். அதன்பின் நம்­பிக்­கை­யு­டன் வாழ்­வின் சவால்­களை எதிர்­கொள்ள இவர் முடி­வெ­டுத்­தார்.

'உன்­னைச் சுற்றி பல நண்­பர்­களை வைத்­துக்­கொள்' என்று தம் ஆலோ­ச­கர் சொன்ன சொற்களை உறுதியாகப் பற்றிக்கொண்டார்.

நண்­பர்­களை வீட்­டிற்கு அழைத்து ஒன்­று­கூ­டலை நடத்­தி­னார். இவ­ரது ஆலோ­ச­க­ரும் பங்­கேற்ற அந்­நி­கழ்­வில், இவர் வயதை ஒத்த பெண்­களே பங்­கேற்­ற­னர். ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தங்­களுடைய பிரச்­சி­னை­க­ளைப் பற்றி பகி­ரும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக்­கொண்ட அந்த நட்பு வட்­டம், இவரை மெல்ல மீட்­டெ­டுத்­தது.

சவால்­களை எதிர்­கொண்டு வந்­த­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மிப் பர­வல் மீண்­டும் சோத­னை­யா­னது.

பாலர் கல்­வித் துறை­ பயிற்­சிப் பிரி­வில் நிர்­வா­கப் பணி­யா­ள­ராக வேலை செய்­யும் திரு­வாட்டி புவ­னேஸ்­வ­ரிக்கு கடந்த மே மாதம் முதல் 40% சம்­ப­ளம் குறைக்­கப்­பட்­டது. இத­னால் மருத்­து­வச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­றி­னார்.

இவ்­வாண்­டு தொடக்­கத்­தில்­தான் 26 வய­தா­கும் இவ­ரது ஒரே மகன் விக்னேஷ்வரன் வேலைக்­குச் செல்­லத் தொடங்­கி­னார். அதற்கு முன்பு­வரை வீட்­டில் வரு­வாய் ஈட்­டியவர் இவர் மட்­டும்­தான்.

இத்­தனை சிர­மங்­க­ளுக்கு இடை­யி­ல் தம் மகன்­தான் தமக்கு உறு­து­ணை­யா­க­வும் ஊன்­று­கோ­லா­க­வும் இருப்­ப­தாக திரு­வாட்டி புவ­னேஸ்­வரி நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

மக்கள் பணியில் கவனம்

உதவிநிதி, நண்­பர்­க­ளின் உதவி மூலம் தன் வாழ்க்­கை­யு­டன் போராடி வந்த இவரது கவ­னத்­தைத் திசை­தி­ருப்­பி­னர் 'நியூ லைஃப்' சமூக சேவை அமைப்­பின் ஆலோ­ச­கர்­கள்.

சமூ­கத்­திற்­குச் சேவை­யாற்­று­வதில் இயல்­பா­கவே நாட்­ட­முள்ள திரு­வாட்டி புவ­னேஸ்­வரி, முழு­மை­யாக மக்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றத் தொடங்­கி­னார்.

ஈசூன் பகு­தி­யில் வசித்­த­போது நீ சூன் கிழக்கு சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­வில் சேவை­யாற்­றிய அவர், கடந்த 2011ல் மார்­சி­லிங் வட்­டா­ரத்­திற்­குக் குடி­பெ­யர்ந்த பிறகு, மார்­சி­லிங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­வில் தொண்­டாற்றி வரு­கி­றார்.

"தன்­னம்­பிக்­கை­யை எவ­ரும் எந்­தச் சூழ்­நிலை­யி­லும் விட்­டு­விடக்­கூ­டாது," என்று உற்­சா­கத்­து­டன் கூறுகிறார் இவர்.

"புற்­று­நோய் நான்­காம் கட்­டத்­தில் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­ட­வு­டன் எல்­லாமே என்னை விட்­டுப்­போ­னது போன்ற உணர்வு ஏற்­பட்­டது. ஆனால் நண்­பர்­கள் மிகுந்த நம்­பிக்கை அளித்­தார்­கள். அதுவே மற்­ற­வர்­க­ளுக்கு உத­வும் எண்­ணத்தை என்­னுள் விதைத்­தது," என்­றார் திரு­வாட்டி புவ­னேஸ்­வரி.

"கீமோ­தெ­ரபி செய்­த­வர்­கள் சோர்­வாக இருப்­பார்­கள் என்­று­தான் கேள்­விப்­பட்­டுள்­ளேன். ஆனால் நான் புத்­து­ணர்ச்சி பெற்­று­வி­டு­வேன். வாரந்தோறும் வியாழக் கிழமை சிகிச்­சைக்­குச் சென்று­விட்டு வெள்­ளிக்­கி­ழமை மருத்­துவ விடுப்­பில் இருப்­பேன். வார இறுதி நாள்களில் சமூக சேவைக்­குப் புறப்­பட்­டு­வி­டு­வேன்," என்­றார் அவர்.

சென்ற ஆண்டு தொடங்கிய 'கீமோ­தெ­ரபி' சிகிச்சை பலன் தரா­த­தால் தற்­போது மாத்­திரை மூலமே புற்­று­நோ­யைக் கட்­டுப்­ப­டுத்­தி­ வரு­கி­றார்.

புற்­று­நோய் குறித்த விழிப்­பு­ உணர்வை மக்­க­ளுக்கு எடுத்­துச்­சொல்­ல­வேண்­டும் என விரும்பும் திரு­வாட்டி புவ­னேஸ்­வரி, இந்­திய சமூ­கத்­தி­னர் இது­குறித்து வெளிப்­படை­யா­கப் பேச­வேண்­டும் என்­றார்.

"நான் பாதிக்­கப்­பட்­ட­போது எவ­ரி­ட­மும் நான் கேட்டு அறி­ய­ முடி­ய­வில்லை. அனைத்­தை­யுமே தனி ஆளாக இருந்தே கற்­றேன். என் நிலை வேறு யாருக்­கும் வரக்­கூடாது," என்கிறார் இவர்.

"எவ்­வ­ளவு நாள் வாழ்­கி­றோம் என்­பது முக்­கி­யம் இல்லை. வாழும் காலத்­தில் பிறர்க்கு என்ன நன்மை செய்­தோம் என்­ப­தே முக்­கி­யம்," என்று இவர் சொன்­னார்.

"புற்­று­நோ­யும் கொவிட்­-19 தொற்றும் எனது முடி­யை­யும் பணத்­தை­யும் எடுத்­தி­ருக்­க­லாம். ஆனால் என் மகிழ்ச்சி என்­னி­டம்­தான் இருக்­கிறது," என்று கூறிய அவர், பல­கா­ரமோ மத்­தாப்புகளோ புத்­தா­டை­களோ குறை­வாக இருந்­தால் என்ன, மனம் நிறைந்த தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டு­வோம் என உற்சாகமாகச் சொல்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!