தமிழர் திருநாள்-நல்வழி காட்டும் நன்னாள்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனும் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப, ஓராண்டிற்கு மேலாக மனிதகுலத்தைப் பாடாய்ப்படுத்தி வரும் கொவிட்-19 தொற்றுக்கு அழிவுகாலமாக, தங்களுக்கு விடிவுகாலமாக இவ்வாண்டு பொங்கல் திருநாள் அமையும் எனத் தமிழ்மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.

‘உழ­வுக்­கும் தொழி­லுக்­கும் வந்­தனை செய்­வோம்’ என்று தன் பாட்­டி­லும் உழ­வுத்­தொ­ழி­லுக்கு முத­லி­டம் தந்­தார் மகா­கவி பாரதி. உழ­வில்­லை­யேல் உண­வில்லை. இதை உணர்ந்தே, உழ­வர்­கள் மட்டு­மின்றி தமி­ழர்­கள் அனை­வ­ரும் உழ­வுத்­தொ­ழி­லைப் போற்­றும் வித­மாக பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில், சிங்­கப்­பூ­ரி­லும் ஆண்­டு­தோ­றும் பொங்­கல் கொண்­டாட்­டங்­கள் களை­கட்­டும். குறிப்­பாக, லிட்­டில் இந்­தி­யா­வின் சிராங்­கூன் சாலை­யில் கட்­டப்­படும் ஒளி சிந்­தும் வண்­ணத் தோர­ணங்­கள் காண்­போ­ரி­டத்­தில் பொங்­கல் திரு­நாள் உற்­சா­கத்தை ஊற்­றெ­டுக்­கச் செய்­யும்.

ஆனால், காலங்­கா­ல­மா­கக் கொண்­டா­டப்­பட்டு வரும் அந்த நன்­னாளை இம்­முறை கொவிட்-19 நோய்ப் பர­வல் கட்­டுப்­பா­டு­க­ளால் கோலா­க­ல­மா­கக் கொண்­டாட வாய்ப்­பில்­லா­மல் போய்­விட்­டது. இருப்­பி­னும், பிரம்­மாண்­ட­மாக இல்­லா­வி­டி­னும் இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையன்று வரும் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாட இம்­முறை வித்­தி­யா­ச­மான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

இந்நிலையில், லிட்டில் இந்தியா சென்று பொங்கல் திருநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும் பொங்கல் வர்த்தகத்தில் மும்முரமாக இருக்கும் வணிகர்கள், பொருள்கள் வாங்க விரைந்த மக்கள் எனப் பலதரப்பினரின் கருத்துகளையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.

சவா­லாக இருக்­கும் பொருள்கள் இறக்குமதி

“கடந்த ஒரு மாத­மாக பலத்த மழை பெய்து வரு­கிறது. இத­னால், இந்­தி­யா­வில் இருந்­தும் மலே­சி­யா­வில் இருந்­தும் கரும்பு, மஞ்­சள் கொத்து போன்­ற­வற்றை இறக்­கு­மதி செய்­வது கடி­ன­மாக இருக்­கிறது. பொருள்­க­ளைக் கொண்டு வரு­வதும் சவா­லாக இருக்­கிறது,” என்று ஜோதி ஸ்டோர் புஷ்­பக் கடை தரப்­பில் தெரி­விக்­கப்பட்­டது.

நாளைக்­குள் இந்­தி­யா­வில் இருந்து பொருள்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­வி­டும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அதேநேரத்­தில், வானூர்­திக் கட்­ட­ண­ம் பல­ம­டங்கு கூடி­விட்­ட­தால் இம்­முறை பொருள்­க­ளின் விலை­யும் அதி­க­ரிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொற்­றிக்­கொண்ட உற்­சா­கம்

காய்­கறி வாங்­கு­வ­தற்­காக லிட்­டில் இந்­தி­யா­விற்கு வந்­தி­ருந்த திரு­மதி சாந்­திக்­குப் பொங்­கல் பானை­களைப் பார்த்­த­தும் கொண்­டாட்ட உற்­சா­கம் தொற்­றிக்கொண்­டது.

“ஒவ்­வோர் ஆண்­டும் விடு­முறை இல்­லா­வி­ட்டாலும் கிடைக்­கும் நேரத்தில் குடும்­பத்­து­டன் சேர்ந்து பொங்­க­லிட்­டுக் கொண்­டா­டு­வோம். எப்­போ­தும்­போல இவ்­வாண்­டி­லும் பொங்­கல் திரு­நா­ளன்று அதி­காலை­யில் எழுந்து, பொங்­கல் வைத்து, கதி­ர­வ­னுக்கு நன்றி கூறி, கண­வரு­ட­னும் இரு பிள்­ளை­க­ளு­ட­னும் கொண்­டா­ட­வி­ருக்­கி­றேன்,” என்­றார் 53 வயதான திருமதி சாந்தி.

அடுத்த வாரம் கண­வ­ரு­டன் வந்து அரிசி, மஞ்­சள், கரும்பு, பூ போன்றவற்றை வாங்­கிச் செல்­ல­ இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

ஒவ்­வொரு பொங்­கல் திரு­நாளின்­போ­தும் லிட்­டில் இந்­தி­யா­வில் அமைக்­கப்­படும் மாட்­டுத் தொழு­வத்­தைப் பார்க்­கத் தனக்கு மிக­வும் பிடிக்­கும் என்­றார் திரு­மதி ரா.ஜெயா, 40.

“சிங்­கப்­பூ­ரில் வேளாண்மை செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஆனா­லும், உழ­வும் உழ­வர்­களும் இல்லை எனில், நம்­மில் எவ­ருக்­கும் உணவு கிடைக்­காது. உழ­வுத்­தொ­ழி­லுக்கு மிக முக்­கி­ய­மாக விளங்­கும் காளை மாடு­க­ளின், பால் தரும் பசுக்­களின் முக்­கி­யத்­து­வத்தை நகர்ப்­பு­றங்­களில் வாழ்­ப­வர்­களும் தெரிந்­து­கொள்ள வேண்­டும். அதற்­கா­கவே என் மகன்­கள் இரு­வ­ரை­யும் ஆண்­டு­தோ­றும் பொங்­கல் திரு­நாள் சம­யத்­தில் லிட்­டில் இந்­தி­யா­விற்கு அழைத்­துச் செல்­வேன்,” என்று திரு­மதி ஜெயா சொன்­னார்.

‘தமி­ழர் திரு­நாள்’

சமய வேறு­பா­டின்றி தமி­ழர்­கள் என ஒன்­றி­ணை­யும் நாளாக பொங்­கலன்று தமி­ழர் திரு­நாள் கொண்­டா­டப்­ப­டு­கிறது என்­றார் மாதவி இலக்­கிய மன்­றத்­தின் தலை­வர் டாக்­டர் என்.ஆர்.கோவிந்­தன்.

“சிங்கப்பூரில் வாழ்ந்த தமி­ழர்­கள் அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைக்­கும் நோக்­கில் 1952ஆம் ஆண்­டில் அன்றைய சமூ­கத் தலை­வர் கோ. சாரங்­க­பா­ணி­யால் தமி­ழர் திரு­நாள் இங்கு தொடங்­கப்­பட்­டது,” என்று டாக்­டர் கோவிந்­தன் நினை­வு­கூர்ந்­தார்.

பல நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு

‘லிஷா’ எனும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் தொடர்ந்து 21வது ஆண்­டாக பொங்­கல் கொண்­டாட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

ஆயி­னும், கொவிட்-19 பர­வல் கார­ண­மாக இவ்­வாண்டு கொண்­டாட்­டம் அர­சாங்­கத்­தின் விதி­முறை­க­ளுக்கு இணங்க பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் கட்­டுப்­பா­டு­களும் அடங்­கிய ஒன்­றாக இருக்­கும்.

“கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களால் கொண்­டாட்­டங்­க­ளின் பிரம்­மாண்­ட­மும் அவற்­றில் கலந்­து­கொள்­வோர் எண்­ணிக்­கை­யும் குறை­வாக இருப்­பி­னும் பொங்­கல் திரு­நாள் உணர்­வும் உற்­சா­க­மும் எள்­ள­ள­வும் குறை­யாது,” என்­றார் ‘லிஷா’ தலைவர் சி.சங்­க­ர­நா­தன்.

‘லிஷா’ தலைமைப் பொறுப்பை ஏற்­ற­பின் திரு சங்­க­ர­நா­தன் வழி­நடத்­த­வி­ருக்­கும் முதல் பொங்­கல் கொண்­டாட்­டம் இது.

“சிங்­கப்­பூ­ரில் பொங்­கல் கொண்­டாட்­டங்­கள் சற்று வேறு­பட்­ட­து. பிற இனத்­த­வ­ரை­யும் சேர்த்­துக்­கொண்டு, ஒருங்­கி­ணைந்து கொண்­டா­டு­கி­றோம். உணவு உண்­ணும் ஒவ்­வொ­ரு­வ­ரும் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­ட­லாம். இது இனம், சம­யம் சார்ந்­த­தல்ல என்­பது என் கருத்து,” என்றார் அவர்­.

சிறி­ய­வர் முதல் பெரி­ய­வர் வரை, பல இனத்­த­வ­ரும் கலந்­து­கொண்டு மகி­ழும்படி பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் ‘லிஷா’ ஏற்­பாடு செய்­துள்­ளது.

“ஒவ்­வோர் ஆண்­டும் மாண­வர்­க­ளுக்­கென மாட்­டுத் தொழு­வச் சுற்­றுலா போன்ற பல நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்து வரு­கி­றோம். இவ்­வாண்­டி­லும் அது தொட­ரும். தமி­ழர் திரு­நா­ளான பொங்­கல் குறித்து இளம் தலை­மு­றை­யி­னர் தெரிந்­து­கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தரும் என நம்­பு­கி­றேன்,” என்­றார் திரு சங்­க­ர­நா­தன்.

தீபா­வ­ளிப் பண்­டி­கையை கொரோனா தொற்­றுக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளு­டன் கொண்­டா­டி­யது போலவே, இப்­போது பொங்­கல் கொண்­டாட்­டங்­க­ளும் பொது­மக்­க­ளுக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் மாறு­பட்ட ஒன்­றாக இருக்­கப் போகிறது என்­றார் ‘லிஷா’ ஆலோ­சகர் திரு ராஜ்­கு­மார் சந்­திரா.

இம்­மாத இறுதி வரை நீடிக்­கும் பொங்­கல் திரு­நாள் கொண்­டாட்­டங்­கள் பொது­மக்­க­ளை­யும் வர்த்­தகர்­க­ளை­யும் உற்­சா­கத்­து­டன் வைத்தி­ருக்­கும் என்­ப­தில் ஐயம்­இல்லை.

தாயகம் செல்ல முடியாததால் விடுதியிலேயே கொண்டாட ஏற்பாடு

தமிழ்­நாட்­டில் பொங்­கல் திரு­நாள், இன, சம­யம் பாராது எல்லாராலும் தமி­ழர் திரு­நா­ளா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது. பொங்­க­லுக்கு முதல்­நாள் போகிப் பண்­டிகை, பொங்­க­லுக்கு மறு­நாள் மாட்­டுப் பொங்­கல், அதற்கு மறு­நாள் காணும் பொங்­கல் என நான்கு நாள்­கள் கோலா­கல கொண்­டாட்­டம் இடம்­பெ­றும்.

அந்­நன்­னா­ளில் குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள், உற்­றார் உற­வி­னர்­களு­டன் இணைந்து மகிழ்ச்­சி­யைப் பரி­மா­றிக்­கொள்­வ­தற்­காக இங்கு வேலை செய்து வரும் தமி­ழக ஊழி­யர்­கள் பல­ரும் சொந்த ஊர் திரும்பு­வர். ஆனால், இம்­முறை கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக அவர்­கள் இங்­கேயே பொங்­கல் திரு­நாளைக் கொண்­டா­டும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

“ஒவ்­வோர் ஆண்­டும் பொங்­கல் திரு­நா­ளுக்­குச் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு கிடைப்­ப­தில்லை. அத­னால் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக எங்­கள் ‘தி லியோ’ வெளி­நாட்டு ஊழி­யர்­கள் விடு­தி­யி­லேயே பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி வரு­கிறோம். இவ்­வாண்­டும் அதே­போல பொங்­கல் கொண்­டாட்­டத்திற்கு ஏற்­பாடு செய்­ய­வி­ருப்­ப­தாக விடுதி நிர்­வாகி கூறி­யி­ருக்­கி­றார். அந்த நன்­னாளை எதிர்­பார்த்­துக் காத்­திருக்­கி­றேன்,” என்­றார் எட்­டு ஆண்டு­க­ளா­க சிங்­கப்­பூ­ரில் வேலை செய்து வரும் திரு வி.பிர­பா­க­ரன், 31.

சொந்த ஊரை­யும் குடும்­பங்­களை­யும் விட்டு வெளி­நாட்­டிற்கு வந்து வேலை செய்­யும் தம்­மைப் போன்­றோ­ருக்கு இது­போன்ற சிறு கொண்­டாட்­டங்­களே ஆறு­தல் தரு­வ­தாக உள்­ளன என்று திரு பிர­பா­க­ரன் குறிப்­பிட்­டார்.

2020ஆம் ஆண்டு பல­ருக்­கும் சவால்­மிக்­க­தாக இருந்த நிலை­யில், இவ்­வாண்­டில் அனை­வ­ருக்­கும் நல்ல வழி பிறக்­கும் எனும் நேர்­மறைச் சிந்­த­னை­யு­டன் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­ட­வி­ருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

கடந்த மூன்­றாண்­டு­க­ளாக தமி­ழகம் சென்று, குடும்­பத்­தி­ன­ரு­டன் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி மகிழ்ந்­தார் பொங்­கோல் பிபிடி விடு­தி­யில் தங்­கி­யி­ருக்­கும் 29 வயது திரு கர்­ணன் ராஜா.

ஆனால், இம்­முறை பொங்­கல் திரு­நா­ளுக்­குச் சொந்த ஊர் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருப்­பது தமக்கு வருத்­த­ம­ளிப்­ப­தாக அவர் சொன்­னார்.

“வீடு­தோ­றும் வாச­லில் வண்­ணக் கோலம், திரும்­பும் இட­மெல்­லாம் தித்­திக்­கும் செங்­க­ரும்பு, புத்­தாடை என ஊரே குதூ­க­ல­மாக இருக்­கும். குடும்­பத்­து­டன் சேர்ந்து பொங்­கல் கொண்­டா­டு­வதே தனி இன்­பந்­தான். அது இம்­முறை கிடைக்­காது. இருப்­பி­னும், எங்­கள் விடு­தி­யி­லேயே பொங்­கல் திரு­நாளைக் கொண்­டா­டும் எண்­ண­ம் இருக்கிறது. விடு­தி­யை­விட்டு வெளியே செல்ல அனு­மதி இல்­லா­த­தால் தேக்கா சென்று பொங்­கல் கொண்­டா­டு­வ­தற்­கான பொருள்­களை வாங்க முடி­யாது. அத­னால் எங்­கள் விடு­தி­யில் இருக்­கும் பல்­பொ­ருள் அங்­கா­டி­யி­லேயே கரும்பு போன்­றவை விற்­கப்­பட்­டால் நன்­றாக இருக்­கும்,” என்­றார் திரு ராஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!