மொழி ஆர்வலர்களின் ஆதரவில் வளர்ந்த கடை

சிறிய பெட்­டிக்­க­டை­யாகத் தொடங்கி இப்­போது பெரிய புத்­தக நிலை­ய­மாக வளர்ந்­துள்­ளது 'தேக்கா 777 புத்­தக நிலை­யம்'.

தமிழ் இலக்­கிய வர­லாற்­றுப் புத்­த­கங்­களில் தொடங்கி சிறு­வர்­க­ளுக்­கான தமிழ் எழுத்து புத்­த­கங்­கள் வரை இக்­க­டை­யில் பல­வகை தமிழ் மற்­றும் ஆங்­கில புத்­த­கங்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன.

கடை­யின் முன்­னேற்­றம் குறித்து அங்கு விற்­பனை உத­வி­யா­ள­ராக உள்ள திரு­மதி ரேகா சொக்­க­லிங்­கம், 33, நம்­மி­டம் விளக்­கி­னார்.

"பெட்­டிக்­க­டை­யாக இருந்­த­போது நிறைய வாடிக்­கை­யா­ளர்­கள் தொடர்ந்து கடைக்கு வந்து விரும்­பிய தமிழ் புத்­த­கங்­களைக் கேட்டு வாங்கிச் சென்­ற­னர். ஈடு­பாட்­டு­டன் தமிழ் புத்­த­கங்­கள் கேட்டு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் இல்லை என்று திரும்­பி­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே பெரிய கடை­யாக திறந்து பல வகை புத்­த­கங்­களை அதிக எண்­ணிக்­கை­யில் விற்­பனை செய்ய தொடங்­கி­னோம். பெரிய கடையை தொடங்­கிய மூன்று மாதங்­களில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

"சம­யம் சார்ந்த புத்­த­கங்­கள், புரா­ணக் கதை புத்­த­கங்­கள், திருக்­கு­றள் புத்­த­கங்­கள் போன்­ற­வற்றை வாடிக்­கை­யா­ளர்­கள் விரும்பி வாங்­கிச் செல்­கின்­ற­னர்.

"கடைக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களில் பெரும்­பா­லா­னோர் நடுத்­தர வய­தி­னர் அல்­லது அதற்­கும் மேற்­பட்­ட­வ­ரா­கவே உள்­ள­னர். இளை யர்­க­ளின் எண்­ணிக்கை குறை­வு­தான். இனி­வ­ரும் தலை­மு­றை­யி­ன­ருக்கு சிறு­வ­ய­தி­லி­ருந்தே தமிழ்ப் புத்­த­கங்­கள் படிக்­கும் பழக்­கத்தை ஊக்­கு­வித்­தால் தமிழ் இலக்­கி­யம் தொடர்ந்து வள­ரும்.

"இப்­போது புத்­த­கங்­கள் அனைத்­தும் இணை­யம் வழி மின்­சே­வை­யில் மக்­களை அடை­கின்­றன.

"இருப்­பி­னும் கைப்­பட புத்­த­கத்தைத் தேர்வு செய்து, வாங்கி அதன் பக்­கங்களைத் திருப்பி படிக்­கும் உணர்­வுக்கு ஈடா­காது.

"மின் புத்­தக சேவை­கள் அதி

கரித்­தா­லும் புத்­தகங்­களை வாங்கிச் செல்­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை குறை­யாது என்­பது எங்­க­ளின் நம்­பிக்கை," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!