விமான நிலையம் முடங்கிய விதம்

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய கிரு­மித் தொற்­றுக் குழு­ம­மாக கடந்த 3 வாரங்­களில் சாங்கி குழு­மம் உரு­வெ­டுத்­துள்­ளது. கடந்த வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி சாங்கி விமான நிலைய ஊழி­யர்­கள் 43 பேருக்­கும் பொது­மக்­கள் 61 பேருக்­கும் கொவிட்-19 தொற்­றி­யுள்­ளது. ஆக இந்­தக் குழு­மத்­தில் 104 பேர் இது­வரை பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

எவ்­வாறு ஏற்­பட்­டது இந்த நிலை?

ஏப்­ரல் 22ம் தேதி அன்று, அதற்கு முந்­திய 14 நாட்­களில் இந்­தியா சென்­றி­ருந்த, நீண்டகால அனு­மதி வைத்­தி­ருப்­போ­ரும் குறு­கியகால பய­ணி­களும் இங்கு வரத் தடை விதித்­தது அர­சாங்­கம். ஏப்­ரல் இறு­தி­யில் இக்­கட்­டுப்­பா­டு­கள் பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம், இலங்கை, பாகிஸ்­தான் ஆகிய நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கும் விரி­வாக்­கப்­பட்­டது.

கட்­டுப்­பா­டு­களை விதித்­த­போ­தும் தொற்­று­களை தடுக்க முடி­ய­வில்லை. கடந்த 5ஆம் தேதி சாங்கி விமான நிலை­யத்­தில் பணி­யாற்­றும் துப்­பு­ரவு ஊழி­யர் ஒரு­வ­ருக்கு முதன்­மு­த­லில் கிருமி தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டது. சில நாட்­கள் கழித்து குழு­மத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு குறிப்­பி­டத்­தக்க அள­வில் இந்­தி­யா­வில் அதி­க­மாகக் காணப்­படும் பி1617 உரு­மா­றிய கிருமி இருப்­பது அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டது.

தெற்­கா­சி­யா­வி­லி­ருந்து வந்த ஒரு குடும்­பத்­துக்கு உத­விய ஊழி­யர் மூலம் அந்த உரு­மா­றிய கிருமி இங்கு பர­வி­யி­ருக்­க­லாம் என்று சாங்கி விமான நிலை­ய­மும் சிங்கப்­பூர் சிவில் விமா­னப் போக்குவரத்து ஆணை­ய­மும் கடந்த வெள்ளிக்­கிழமை தெரி­வித்­தன.

உல­க­ளா­வி­யப் பொரு­ளி­ய­லை­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளை­யும் நம்பி சுழன்­று­வ­ரும் சிங்­கப்­பூர் அதன் எல்­லை­களை மூடு­வது மிக­வும் கடி­னம். அதி­லும் தொற்­று­கள் எல்லை தாண்டி வரு­வ­தைத் தடுக்க முடி­யாது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக சோ சுவீ ஹொக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் நட்­டாஷா ஹவ்ர்ட் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார்.

அதி­லும், சிங்­கப்­பூர் தொற்­று­க­ளுக்­குப் பின்­னர்­தான் பி1617 கவலைம்­கு­ரிய கிருமி வகை என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­த­தைச் சுட்­டிக்­காட்­டி­னார் அப்­பள்­ளி­யைச் சேர்ந்த மற்­றொரு பேரா­சி­ரி­ய­ரான சூ லி யாங்.

கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­கள்

முதல் சில கிரு­மித்தொற்­று­கள் ஏற்­பட்­ட­வு­டன் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மள­ம­ள­வென்று எடுக்­கப்­பட்­டன. அதன் கரங்­கள் விரிய விரிய நட­வ­டிக்­கை­கள் கூடின.

முனை­யங்­கள் 1, 3 மற்­றும் ஜுவல் சாங்கி கடைத்­தொ­கு­தி­யில் பணி­யாற்­றும் எல்லா ஊழி­யர்­க­ளுக்­கும் பரி­சோ­த­னை­ நடத்­தப்­பட்­டது. கிருமி பர­வி­யி­ருக்­கக்­கூ­டிய இடங்­களில் ஒன்­றான 3ஆம் முனை­யத்­தின் 2ம் அடித்­த­ளம் பொது­மக்­க­ளுக்கு மூடப்­பட்­டது. அதிக ஆபத்­துள்ள இடத்­தில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளுக்கு ஏழு நாட்­க­ளுக்கு ஒரு­முறை பரி­சோ­தனை என்­றா­னது.

தொற்­று­கள் 25ஐ தாண்­டி­ய­தும், 1, 3 ஆகிய முனை­யங்­களும் ஜுவல் சாங்கி கடைத்­தொ­கு­தி­யும் பொது­மக்­க­ளுக்கு மூடப்­பட்­டன.

பின்­னர், பி1617யின் வேகம் இன்­னும் தெளி­வா­ன­போது, கிரு­மித்­தொற்று அபா­யம் அதி­க­முள்ள நாடு­கள், குறிப்­பாக தெற்­கா­சிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் மற்ற நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.

அவர்­கள் வரு­கை­த­ரும் பகு­தி­களில் ஊழி­யர்­க­ளுக்கு கடும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

இது­வரை தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க, விமான நிலைய ஊழி­யர்­கள் அவர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என கிட்­டத்­தட்ட 10,000 பேருக்­குக் கிரு­மிப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டு­விட்­டன.

முனை­யங்­கள் 1, 3 ஆகி­ய­வற்­று­டன் ஜுவல் சாங்கி கடைத்­தொகு­தி­யும் மேலும் இரு வாரங்­க­ளுக்­குப் பொது­மக்­க­ளுக்கு மூடப்­படும்.

இருப்­பி­னும், மிகப் பெரிய இட­மான விமான நிலை­யத்­தில் குளிர்சாத­னங்­கள் வழி­யாக கிருமி பர­வலாம் என நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர். முழு பாது­காப்­புக் கவ­சம், முகக்கவ­சம் ஆகி­ய­வற்றை நீண்ட நேரம் அணி­ந்திருப்பது சிர­மம்.

கிருமி தொற்­றிய ஊழி­யர்­களில் 13 பேர் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள். பத்து பேர் பாது­காப்பு அதி­கா­ரி­கள். மற்­ற­வர்­க­ளை­விட இவர்­கள் கூடு­தல் இடங்­களில் நட­மாட வேண்­டி­யி­ருக்­க­லாம். சில துப்­பு­ர­வா­ளர்­கள் வய­தா­வ­னர்­கள்.

ஆனா­லும் இங்குள்ள வலு­வான பொதுச் காதா­ரக் கட்­ட­மைப்­பும் முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெளி காப்­பது போன்­ற நடவடிக்கைகளும் பாதிப்பைக் குறைக்க உத­வும் என்று நிபு­ணர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­தனர்.

மூன்று வாரங்களில் 100 பேர்

 மே 5 - 88 வயது துப்புரவு ஊழியருக்கு முதன்முதலில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

 மே 8 - மேலும் மூவருக்கு தொற்று உறுதியானது.

 மே 9 - மேலும் நால்வருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குழுமம் உருவானதாக அறிவிக்கப்பட்டது.

 மே 11 - ஊழியரது குடும்பத்தாருக்கும் கொவிட்-19 பரவியது. சாங்கி குழுமத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டனர்.

 மே 12 - 26 பேருக்குத் கிருமித்தொற்று.

 மே 13 - கிருமித்தொற்று 46 ஆகியது. எண்மருக்கு பி1617 உருமாறிய கிருமி இருப்பதாக முன்னோட்ட முடிவுகள் காட்டின.

 மே 14 - 59 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

 மே 15 - 10 நாளில் 68 பேருக்கு கிருமித்தொற்று.

 மே 20 - சாங்கி குழுமத்தில் 104 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. இதில் 43 பேர் விமான நிலைய ஊழியர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!