வெளிப்புற உடற்பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதேஸ்வரி

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் நோயாளி சேவைக்­கான மூத்த உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வந்­தார் திரு­மதி மாதேஸ்­வரி அரி­ய­கிருஷ்­ணன், 51. தம் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து 19 ஆண்டு சேவைக்­குப் பிறகு வேலை­யி­லி­ருந்து வில­கி­னார். உடற்­ப­யிற்சி­யின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக கற்­று­உணர்ந்து, இன்று உடல் எடை குறை­வ­தற்­கான ஒரு வழி­காட்­டி­யா­க­வும் குழு­நிலை உட­லு­று­திப் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் பணி­பு­ரி­கிறார்.

'ஸ்லிப் டிஸ்க்' (slipped disc), கருப்­பை­யில் கட்டி (fibroid), ஒற்­றைத் தலை­வலி (migraine) போன்ற பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்ட திரு­மதி மாதேஸ்­வரி, இவை மோச­மடை­யா­மல் இருப்­ப­தற்­காக உடற்­பயிற்­சி­யைத் தவிர்த்து வந்­தார். ஆனால் உடற்­ப­யிற்சி செய்­யா­மல் இருப்­ப­தால்­தான் இத்­தனை பிரச்­சி­னை­கள் என்­ப­தைப் பின்­னர் புரிந்து­கொண்டு உடற்­ப­யிற்சி செய்­வ­தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டார்.

உடற்­ப­யிற்சி நுணுக்­கங்­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தற்­காக ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி நடத்­திய சத்­து­ணவு பயிற்சி வகுப்­பில் பயின்­றார்.

கொவிட்-19 சூழ­லில் அதி­காரி­களின் அனு­ம­தி­யு­டன் இவர் வெளிப்­புற உடற்­ப­யிற்சி வகுப்­பு­க­ளுக்கு ஏற்­பாடு செய்து வரு­கி­றார்.

வாரத்­திற்கு மூன்று வெள்­ளியே கட்­ட­ணம். ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மை­யும் காலை 8 முதல் 10 மணி வரை தோ பாயோ நக­ரப் பூங்­கா­வில் நடை­பெ­றும் இப்­ப­யிற்சி வகுப்பு­களில் பான­மும் வழங்­கப்­ப­டு­கிறது.

பெரும்­பா­லும் இந்­திய மாதர் இந்த வகுப்­பு­களில் கலந்­து­கொள்­கின்­ற­னர். சீன, மலாய் பெண்­களும் ஆண்­களும் வரு­கின்­ற­னர்.

அனை­வ­ரது உடல் நிலை­யைச் சரி­யாக புரிந்­து­கொண்டு அவர்­களுக்கு ஏற்ற பயிற்­சி­க­ளைக் கற்று தரு­கி­றார் திரு­மதி மாதேஸ்­வரி.

கொவிட்-19 பாது­காப்பு நட­வடிக்­கை­க­ளைப் பின்­பற்­றி­ய­வாறு இப்­பயிற்சி வகுப்­பு­கள் நடை­பெ­று­கின்­றன.

இந்­தப் பயிற்சி வகுப்­பு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வ­தில் திரு­மதி மாதேஸ்­வ­ரி­யின் மகள், 21 வயது அமிர்தா மூர்த்தி உதவி வரு­கி­றார்.

உடற்­ப­யிற்­சி­யின் முக்­கி­யத்­துவம் குறித்து திரு­மதி மாதேஸ்­வரி, "நாம் தின­மும் எவ்­வ­ளவு சாப்­பி­டு­கி­றோம் என்­ப­தைக் கவ­னித்­த­படி நமது கேலரி உட்­கொள்­ள­லைக் கட்­டுப்­படுத்த வேண்­டும். நம் உட­லில் இருக்­கும் கொழுப்பு அளவை அறிந்து அதைக் கரைப்­ப­தற்கு ஏற்ற உடற்­ப­யிற்­சியை மேற்­கொள்ள வேண்­டும்.

"சிலர் காலை முதல் மாலை வரை ஒரே இடத்­தில் அமர்ந்து வேலை செய்­கின்­ற­னர். உடற்­பயிற்சி செய்­யா­மல் இருப்­ப­தால் கேலரிகளும் கொழுப்பு அள­வும் அதி­க­ரிக்­கும். பின்பு, நீரி­ழிவு நோய், இதய நோய் போன்ற பல சிக்­கல்­கள் ஏற்­ப­டக்­கூ­டும். இந்­நி­லை­யைத் தவிர்க்க தின­மும் உடற்­ப­யிற்சி செய்து சத்­து­ண­வைச் சாப்­பிட வேண்­டும். ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றைக்கு இதுவே வழி," என அறி­வு­றுத்­தி­னார்.

திரு­மதி மாதேஸ்­வ­ரி­யின் வெளிப்­புற உடற்­ப­யிற்சி வகுப்­பு­களில் சேர்ந்­துள்ள திரு­மதி சாவித்திரி, 60, தமது வெற்­றிப் பய­ணத்தை எங்­க­ளு­டன் பகிர்ந்து­கொண்­டார்.

89 கிலோ எடை­யில் இருந்த அவர், திரு­மதி மாதேஸ்­வ­ரி­யின் உடற்­ப­யிற்சி வகுப்­பில் சேர்ந்­த­போது ஆரம்­பத்­தில் சிர­மப்­பட்­ட­தா­க­வும் விடா­மு­யற்­சி­யு­டன் பயிற்சி­க­ளைத் தொடர்ந்து செய்­த­தால், 12 கிலோ குறைக்க முடிந்­த­தா­க­வும் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!